Thatstamil Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Why Heart Beat Increases: இதய துடிப்பு சில நிமிடம் நிற்பதன் காரணம் என்ன..? அறியலாம் வாருங்கள்..!

Why Heart Beat Increases: இதய துடிப்பு சில நிமிடம் நிற்பதன் காரணம் என்ன..? அறியலாம் வாருங்கள்..!

நாம் உயிர் வாழ்வதற்கு மிகவும் முக்கியமான ஓர் உறுப்பு தான் இதயம்.

Why Heart Beat Increases

Why Heart Beat Increases:

ஆனால் அதுவே சீராக துடிக்காமல் போய்விட்டால் என்னவாகும் என்று நினைத்து பாருங்கள்..?

இதயத் துடிப்புகள் ஒவ்வொன்றும் சமமாக, சீராக இருக்கவேண்டியது அவசியம் ஆகும்.

ஆனால் சில பதட்டமான நேரங்களில், சில பயம் மிக்க சூழ்நிலைகளில் நமது இதயம் ஒழுங்கற்ற முறையில், வேகமாக துடிக்கும்.

நம் இதயம் சில நொடிகள் அல்லது நிமிடங்களுக்கு அடிக்கடி துடிப்பதையும், படபடப்பதையும் அல்லது ஒழுங்கற்ற முறையில் துடிப்பதையும் உணர்கிறோம்.

இதை தான் மருத்துவர்கள் ஹார்ட் பல்பிடேஷன்ஸ் (Heart palpitations) என்பர்.

இது நாம் நினைக்கும் அளவிற்கு பயப்பட வேண்டிய விஷயம் ஒன்றும் இல்லை, மிகவும் அரிதாகவே சிகிச்சை தேவைப்படும் ஒரு பாதிப்பு ஆகும்.

ஹார்ட் பல்பிடேஷன்ஸ் ஏற்படும் காரணம் பற்றியும் அதை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் தொடர்ந்து அறியலாம் வாருங்கள்.

மன அழுத்தம் மற்றும் பதட்டம்:

இது பல மனிதர்களுக்கு அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருக்கிறது.

இந்த மன அழுத்தம் என்ற நோய் நம்மை கடுமையான உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகளுக்கு கொண்டு போய் சேர்க்கும்.

நீங்கள் கடுமையான மன அழுத்தம் அல்லது கவலையை உணரும் போது உங்கள் இதயம் “சீரற்ற முறையில்” துடிக்க ஆரம்பிக்கும். இந்த நிலை ‘பேனிக் அட்டாக்'(panic attack)கிற்கும் வழிவகுக்கும்.

ஹார்மோன்ஸ் மாற்றம்:

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சியின் போது ஹார்ட் பல்பிடேஷன்ஸை(Heart palpitations) உணரலாம்.

இது ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றத்தாலும், கர்ப்பம் மற்றும் மாதவிடாய் காலங்களிலும் அதிகம் ஏற்படுகிறது.

மருந்துகளின் விளைவு:

நீங்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் சில ‘ஓவர்-தி-கவுன்டர்'(over-the-counter) போன்ற மருந்துகளின் ஒரு பக்க விளைவாக கூட நம் இதய துடிப்பில் மாற்றம் ஏற்படலாம்.

ஆஸ்துமா இன்ஹேலர்கள், இருமல் மற்றும் சளி மருந்துகள் உங்கள் இதயத்தை வேகமாக துடிக்கச் செய்து, படபடக்கச் செய்யலாம்.

Also Read: Foods To Avoid During Cough & Could: சளி, இருமல் இருந்தால், இந்த உணவுகளை தயவு செய்து சாப்பிடாதீங்க!

இந்த மருந்துகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொண்டால், ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றியும் அறிந்து மருந்துகளை பயன்படுத்துங்கள்.

மேலும், காய்ச்சல் போன்ற காரணங்களால் உடலின் நடுப் பகுதியில் வெப்பம் அதிகரிக்கும். இதன் விளைவாகக் கூட இதயம் படபடக்கும்.

Also Read: How to Cure Autism: மன இறுக்கம் கொண்ட குழந்தைகளுக்கு புதிய நண்பர்களை உருவாக்க உதவும் Minecraft..!

எனவே இதயம் சீராக துடிப்பதற்கு ஏற்ற வகையில் உங்களின் மனநிலையை சீராக வைத்துக்கொள்ளுங்கள், நோயைத் தவிருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *