Tamil Newsஅறிவியல்செய்திகள்தொழில்நுட்பம்தொல்லியல்

Facts About The Black Sea: கருங்கடலில் மூழ்கிய கப்பல்களின் கல்லறையை கண்டறிந்த விஞ்ஞானிகள்..! சுவாரஸ்யமான உண்மைகள்..!

Facts About The Black Sea: கருங்கடலில் மூழ்கிய கப்பல்களின் கல்லறையை கண்டறிந்த விஞ்ஞானிகள்..! சுவாரஸ்யமான உண்மைகள்..!

கருங்கடலில் மூழ்கிய கப்பல்களை வரலாற்றில் இதுவரை யாரும் அதன் முழுமையான மற்றும் துல்லியமான விளக்கத்தை எடுத்துக்கூறவில்லை.

Facts About The Black Sea:

இந்நிலையில் கருங்கடலின் அடிப்பகுதியில், பல்கேரியாவின் நீர்நிலைகளுக்கு அருகில், அறிவியல் வல்லுநர்கள் தற்செயலாக 2500 ஆண்டுகளுக்கு முன் நடந்த பழமையான பல கப்பல் விபத்துக்களை கண்டுபிடித்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள் கருங்கடலின் வரலாற்று நீர் மட்டத்தை ஆய்வு செய்தனர்.

அந்த ஆராய்ச்சியின் போது, தற்செயலாக கப்பல்களின் உண்மையான “கல்லறையை” கண்டுபிடித்தனர்.

ரோமன், ஒட்டோமான், பைசண்டைன் போன்ற வெவ்வேறு காலங்களைச் சேர்ந்த சுமார் 60 கப்பல்களின் உடைந்த பாகங்கள் கண்டுபிடித்தனர்.

இந்த கண்டுபிடிப்பு சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் கடல் தொல்லியல் மையத்தின் ஊழியர்களால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நேரத்தில், கருங்கடல் MAP திட்டத்தின் செயலில் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது அவர்கள் கப்பல்களின் உடைந்த பாகங்களை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த தற்செயலான கண்டுபிடிப்பு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது,
ஏனெனில் இதன் உதவியுடன், வல்லுநர்கள் கடந்த காலத்தைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பல்கேரியாவின் கடற்கரைக்கு அருகில் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்துவதற்காக பல்கேரிய தொல்லியல் நிறுவனம் மற்றும் நீருக்கடியில் தொல்பொருள் ஆராய்ச்சிக்கான பல்கேரிய மையம் ஆகியவற்றுடன் ஒத்துழைக்கத் தொடங்கினர்.

3D போட்டோகிராமெட்ரி:

வல்லுநர்கள் படங்களைப் பிடிப்பது மட்டுமல்லாமல், 3D போட்டோகிராமெட்ரி (photogrammetry) மற்றும் பலவிதமான வீடியோக்களை எடுத்தனர்.

அதற்காக தொலைவிலிருந்து கட்டுப்படுத்தக்கூடிய சிறப்பு வாகனங்களையும் அவர்கள் பயன்படுத்தினர்.

ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட கப்பல்களின் அனைத்து சிதறல் பாகங்களும் சிறந்த நிலையில் இருந்தன .

கருங்கடலில் உள்ள நீரில் காணப்படும் இரசாயன கலவையே உடைந்த பாகங்கள் யாவும் சிதைவுறாமல் இருப்பதற்கு காரணம்.

மேலும், இந்த கடலில் சுமார் 150 மீட்டர் ஆழத்தில், ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால் அக்கடல் மிகக் குறைந்த வெளிச்சத்தை கொண்டிருக்கும்.

Also Read: What is Crude Oil: உங்களுக்கு தெரியுமா? கச்சா எண்ணெய் இப்படி தான் உருவாகிறது..!

இதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்களால் அவ்வளவு ஆழத்தில் வாழ முடிவதில்லை.

எனவே, மூழ்கிய கப்பல்களை மீன்கள் சேதப்படுத்துவதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *