What is Credit Card: முதல்முறையாக கிரெடிட் கார்டு வாங்கப் போறீங்களா? எந்த கிரெடிட் கார்டு பாதுகாப்பானது?
What is Credit Card: முதல்முறையாக கிரெடிட் கார்டு வாங்கப் போறீங்களா..? எந்த கிரெடிட் கார்டு பாதுகாப்பானது?
இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் கார்டு என்பது தவிர்க்க முடியாத விஷயம்.

What is Credit Card:
ஆனால் அதை வாங்குவதில் பலருக்கும் எப்படி வாங்குவது என்ற குழப்பம் இருந்து வருகிறது. ஏனெனில் அதனை வாங்கிய பின் பலரும் படும் நஷ்டங்களை காது பட கேட்டிருப்போம்.
கிரெடிட் கார்டினை முதல் முறையாக பயன்படுத்தும் நபர்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய சில விஷயங்களை பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.
கிரெடிட் கார்டு எதற்கு? எல்லோரும், எல்லா சமயத்திலும் பணத்தை கையில் வைத்துக் கொண்டு இருப்பதில்லை.
பலருக்கும் பணக் கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்கிறது. அதிலும் மாதாந்திர சம்பளம் பெற்று வாழ்க்கை நடத்துபவர்களுக்கு கிரெடிட் கார்டு ஒரு வரப் பிரசாதம் தான்.
சரி. இப்போது தான் முதல்முறையாக நீங்கள் கிரெடிட் கார்டு வாங்க இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.
சந்தையில் ஏராளமான கிரெடிட் கார்டு நிறுவனங்கள் உங்களுக்காக காத்திருக்கும் நிலையில், எந்த நிறுவனத்தை தேர்வு செய்வது என்று குழப்பம் ஏற்படும்.
எந்த வங்கியின் கிரெடிட் கார்டு பாதுகாப்பானது?
எந்த நிறுவனத்தின் அல்லது எந்த வங்கியின் கிரெடிட் கார்டு பாதுகாப்பானது? யார் அதிக சலுகை அளிப்பார்கள்?
யார் எவ்வளவு கேஷ்பேக் தருவார்கள்? ஆண்டுக் கட்டணம் எவ்வளவு? என்றெல்லாம் பல கேள்விகள் உங்களுக்குள் கண்டிப்பாக எழும். அதற்கெல்லாம் பதில் இதோ!
நீங்கள் இதுவரை கிரெடிட் உபயோகிக்கவில்லை எனில், குறைந்த வருடாந்திர கட்டணம் உள்ள கார்டுகள் உண்டு.
அவற்றை வாங்கி நீங்கள் பயன் பெறலாம். கிரெடிட் கார்டு வரம்புகள் உங்களின் வருமானத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும்.
நீங்கள் புதியதாக கிரெடிட் கார்டு வாங்கும் போது ஆண்டு கட்டணம் உண்டா? அப்படி இருந்தால் எவ்வளவு என்பதை பார்க்க வேண்டும்.
பெரும்பாலான வங்கிகள் தங்களுடை கிரெடிட் கார்டுகளுக்கு வருடாந்திர கட்டணம் வசூலிக்கின்றன.
குறிப்பாக சில வங்கிகள் கார்டுகளை வாங்க வைக்கும் பொருட்டு, முதல் ஆண்டுக்கு மட்டும் எந்த கட்டணமும் வசூலிப்பது இல்லை.
ஆனால் இரண்டாம் ஆண்டில் இருந்து கட்டணம் வசூலிக்கும். எனவே அதனையம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
முக்கியமானது என்னவெனில் கிரெடிட் கார்டில் பணம் எடுக்கும் வசதியும் உண்டு. ஆனால் அதனை பயன்படுத்தி பணம் எடுப்பதை முடிந்த அளவு தவிர்க்கவும்.
ஏனெனில் அதற்கு அதிகளவிலான கட்டணம் வசூலிக்கப்படும். கடனை கட்டாமல் சிக்கலில் மாட்டிக் கொண்டால், உங்களது சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும்.
ஒரே நிறுவனத்தின் அல்லது பிராண்டட் கார்டினை வாங்குவதைவிட, நீங்கள் வாங்கும் புதிய கார்டு இன்னொரு பிராண்டினாலும் (Co-branded) அங்கீகரிக்கப்பட்டதாக இருப்பது நல்லது.
இதன் மூலம் அதிகம் சுற்றுலா செல்பவர்கள், ஷாப்பிங் செய்கிறவர்களுக்கு பல்வேறு நிறுவனங்களிலிருந்து அதிக சலுகைகள் கிடைக்கும் வட்டி இல்லாத காலத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் வட்டி இல்லாத காலத்தை கிரேஸ் பீரியட்(Grace Period) என்பார்கள்.
இதைத் தவிர ரிவார்ட் பாயின்ட் மற்றும் கேஷ் பேக் ஆஃபர் போன்றவற்றையும் உங்கள் செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்கள் வாழ்க்கை முறைக்கேற்ப உங்கள் கிரெடிட் கார்டு கோ பிராண்டட் கார்டாக இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்ளவும். அதுவே சிறந்தது.
அனைத்து வகை கிரெடிட் கார்டுகளையும் அலசி ஆராய்ந்து நல்ல பலன், ரிவார்ட் பாய்ண்ட்ஸ்(reward points) ஆகியவற்றை வழங்கும் 5 நிறுவனங்களை உங்களுக்கு பரிந்துரைக்கிறது பைசா பசார் நிறுவனம்.
அமேசான் பே ஐசிஐசிஐ (Amazon Pay ICICI Bank) கிரெடிட் கார்டு வாங்குபவர்கள், அமேசான் பிரைம் மெம்பர்களாக இருந்தால் உங்களுக்கு 5 சதவீத கேஷ் பேக் கிடைக்கும்.
SBI Simple Click Credit Card:
நான் – பிரைம் மெம்பர் என்றாலும் விமான பயணச்சீட்டு முன்பதிவு, ரீசார்ஜ், பில் பேமெண்ட் போன்ற பரிவர்த்தனைகளில் உங்களுக்கு 2 சதவீத கேஷ் பேக் கிடைக்கும். இது லைப் டைம் ஃப்ரீ கார்டு ஆகும்.
ஆக்சிஸ் வங்கி ஏஸ்(Axis Bank Ace) கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, கூகுள் பே மூலமாக யுடிலிட்டி வகை பில்களை செலுத்தும்போது 5 சதவீத கேஷ்பேக் கிடைக்கும்.
ஸ்விக்கி, சொமேட்டோ, ஓலா போன்ற ஆப்களை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்தால் 4 சதவீதம், பிற வகை செலவினங்களுக்கு 2 சதவீதமும் கேஷ் பேக் கிடைக்கும்.
இது மட்டுமல்லாமல், ஆக்சிஸ் உடன் இணைந்து நடத்தப்படும் நாடு முழுவதிலும் உள்ள 4000+ ஹோட்டல்களில் உங்களுக்கு 20 சதவீதம் சலுகை கிடைக்கும். இதற்கு ஆண்டுதோறும் ரூ.499 கட்டணம் செலுத்த வேண்டும்.
எஸ்பிஐ சிம்ப்ளி கிளிக் கிரெடிட் கார்டு(SBI Simple Click Credit Card) முதன் முதலில் வாங்கும்போது அமேசானில் ரூ.500 மதிப்புள்ள கிப்ட் கார்டு வழங்கப்படுகிறது.
அமேசான், கிளியர் டிரிப், புக் மைசோ, லென்ஸ்கார்ட் போன்ற நிறுவனங்களில் பரிவர்த்தனை செய்தால் 10 எக்ஸ் ரிவார்ட் பாய்ண்ட்ஸ் கிடைக்கும். இதற்கான ஆண்டு கட்டணம் ரூ.499 ஆகும்.
ஃபிளிப்கார்ட் – ஆக்சிஸ் கிரெடிட் கார்டு(Flipkart – Axis Card) பயன்படுத்தி ஃபிளிப்கார்ட் மற்றும் மந்த்ரா நிறுவனங்களில் பரிவர்த்தனை செய்கையில் 5 சதவீதமும், கிளியர் ட்ரிப், ஸ்விக்கி, ஊபர், பிவிஆர் போன்ற நிறுவனங்களில் 4 சதவீதமும், இதர வகை செலவினங்களில் 1.5 சதவீதமும் சலுகை கிடைக்கும்.
இதுதவிர கேஷ்பேக் கிடைக்கும். இதற்கான ஆண்டு கட்டணம் ரூ.500.
Also Read: Cryptocurrency in India Budge: இந்தியாவில் கிரிப்டோ கரன்சியின் எதிர்காலம்
HSBC கிரெடிட் கார்டு மூலம், வாலட் ரீசார்ஜ்(Recharge) தவிர்த்து, அனைத்து வகையான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு 1.5 % கேஷ்பேக் கிடைக்கும்.
பிற செலவினங்களுக்கு 1 சதவீத கேஷ்பேக் வசதியும் உண்டு. இதற்கான ஆண்டு கட்டணம் ரூ.750 ஆகும்.