Cryptocurrency in India Budget: இந்தியாவில் கிரிப்டோ கரன்சியின் எதிர்காலம் கேள்விக்குறியே..!
Cryptocurrency in India Budget: இந்தியாவில் கிரிப்டோ கரன்சியின் எதிர்காலம் கேள்விக்குறியே..!
கிரிப்டோ ஆதரவாளர்கள், பல்லாயிரம் கோடிகளில் புரளும் இந்திய கிரிப்டோ சந்தையை நெறிமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

Cryptocurrency in India Budget:
கிரிப்டோவை அனுமதித்தால் அது ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் நிறுத்திவிடும் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் சிலர் காலத்திற்கேற்ப இதை அனுமதித்து ஆகதான் வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
கிரிப்டோ கரன்சியை எதிர்ப்பவர்கள் அதனை பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.
இந்திய ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் கொண்டால், “I PROMISE TO PAY THE BEARER THE SUM OF ….. RUPEES” என்ற RBI Governor கையொப்பமிட்ட வாசகம் இருக்கும்.
அவரது உத்தரவாதத்தால், அச்சடிக்கப்படும் மதிப்புக்கான விலையை அந்த நோட்டு பெறுகிறது என்பதுதான் இதற்கு அர்த்தம்.
ஆனால் கிரிப்டோ கரன்சிக்கு அப்படி ஒரு மதிப்போ, எந்தவொரு அரசு அல்லது உலகின் முக்கிய அமைப்புகளின் உத்தரவாதமோ இல்லை.
இருந்தாலும், அது ஒரு புதுவிதமான சொத்தாக அல்லது பணமாக தான் இந்த காலத்தில் அனைவராலும் கருதப்படுகிறது.
கிரிப்டோ கரன்சிகள், பொருளாதாரம் மற்றும் நிதி நிலைத்தன்மைப் பார்வையில் பார்க்கும் போது, ஆர்பிஐ-க்கு(RBI) ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தெரிவிக்கின்றார்.
இந்தியாவில் கிரிப்டோ கரன்சி:
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக கருதப்படும் இந்தியா, 2021 – 22 நிதியாண்டில் அறிவித்த ஒட்டுமொத்த பட்ஜெட் தொகை 34,83,236 கோடி ரூபாய்தான்.
வங்கிகளைப் பொருத்தவரை ஒரளவுக்கு நிலையான சொத்துக்களுக்கு எதிராகத் தான் கடன் கொடுத்து தங்களின் வங்கி வியாபாரங்களை முன்னெடுத்துச் செல்லும்.
கிரிப்டோ போன்ற அதீத விலை காணும் நாணயங்களை வங்கித் துறைக்குள் அனுமதிப்பது, வங்கித் துறையையே சிரமத்துக்கு உள்ளாக்கிவிடும்.
ஆர்பிஐயைப் பொறுத்தவரை கிரிப்டோ கரன்சிகளை ஒரு சொத்தாகக் கூட அனுமதிக்கப்படக் கூடாது, என்று தெரிவிக்கிறது. அப்படி வெறும் சொத்தாக தற்போது வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டால், நாளை அது பணப்பரிமாற்றமாக மாறிவிடும்.
அப்படி அது மாறிவிட்டால், பிறகு அப்பரிமாற்றங்களை கட்டுப்படுத்த முடியாது என உறுதியாகத் தெரிவிக்கிறது.
உலகின் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்கிறார்கள். இந்தியாவில் கிரிப்டோ கொண்டு வரப்பட்டால், அது ஒரு சூதாட்டம் போலத் தான் கையாளப்படும்.
கிரிப்டோ கரன்சியை இந்தியா காலப்போக்கில் ஏற்றுக்கொண்டாலும் அதனால் இந்தியாவில் 5 – 10 சதவீத மக்கள் மட்டுமே பலனடைவர்.
ஆனால் 90% பேர் பாதிக்கப்படலாம். உதாரணமாக வங்கி பெயரில் நடக்கும் போலி அழைப்புகள் மற்றும் மோசடி முயற்சிகளைக் குறிப்பிடலாம்.
இன்று வரை வங்கி விஷயத்தில் எளிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
கிரிப்டோ கரன்சிகள், பொருளாதாரம் மற்றும் நிதி நிலைப்புத்தன்மைப் பார்வையில் பார்க்கும் போது, ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது அச்சம் என தெரிகிறது.
உதாரணமாக டாலரில் முதலீடு செய்தால், அதை அச்சடித்தது அமெரிக்கா என்று தெரியும். ஆனால் கிரிப்டோவில் அதை யார் உருவாக்கினார்கள் என்பது யாருக்குமே தெரியாது.
அமெரிக்க டாலரில் ஒரு பிரச்சனை என்றால் அதை ஃபெடரல் ரிசர்விடம் பேசலாம். கிரிப்டோவில் ஒரு பிரச்னை என்றால் யாரைத் தொடர்பு கொள்வது? இதுவே மக்கள் அச்சம் அடைவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
மேலும், வட்டி விகிதத்தை உயர்த்துகிறார்கள் என்றால், பணத்தின் வரவை குறைக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக புரிந்து கொள்ளலாம். ஆனால் கிரிப்டோவில் இப்படி ஒரு விஷயம் இல்லை.
பங்குச் சந்தை பயனாளிகள் முதலீடு செய்வதை கடந்த பல ஆண்டு காலமாக இந்தியாவில் நெறிமுறைப்படுத்தப்பட்டு வருவதை குறித்து போதிய அளவுக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாதபோது கிரிப்டோ கரன்சியை மக்கள் எப்படி புரிந்து கொண்டு செயல்படுவார்கள், என கேள்வி எழுப்புகிறார்கள்.
Also Read: Meta AI Supercomputer: உலகின் மிகப்பெரிய AI-சார்ந்த சூப்பர் கம்ப்யூட்டர்-உருவாக்கும் மெட்டா..!!
எனவே, கிரிப்டோ கரன்சி(Cryptocurrency) அனுமதிக்கப்பட்டால், அது குறித்து போதிய அறிவு பரவல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர் இந்த கரன்சியை எதிர்ப்பவர்கள்.