இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Sudden Cardiac Arrest Symptoms: திடீர் மாரடைப்பு வருவதற்கு முன் என்னென்ன அறிகுறிகள் உண்டாகும்..?

Sudden Cardiac Arrest Symptoms: திடீர் மாரடைப்பு வருவதற்கு முன் என்னென்ன அறிகுறிகள் உண்டாகும்..?

தற்போது மாரடைப்பு என்பது வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் பாதிக்கும் நோயாக மாறி வருகிறது. சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டது கூட தெரியாமல் இருக்கின்றனர்.

Sudden Cardiac Arrest Symptoms

Sudden Cardiac Arrest Symptoms:

திடீரென்ற மாரடைப்பு உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. எனவே அதை கவனமாக அறிந்து சிகிச்சை மேற்கொள்வது அவசியம். நிறைய பேருக்கு மாரடைப்பு அறிகுறிகள் தெரிவதில்லை.

எனவே லேசாக முன்கூட்டியே தெரியும் அறிகுறிகளைக் கூட நீங்கள் அறிந்து வைத்திருப்பது அவசியம்.

மாரடைப்பின் முந்தைய அறிகுறிகள்

உங்களுக்கு மாரடைப்பு ஏற்படும்போது, உங்கள் இதய தசையின் ஒரு பகுதி திடீரென தடுக்கப்பட்டு, செயல்பட வேண்டிய ஆக்சிஜன் நிறைந்த இரத்தத்தை இதயம் தடுக்கிறது.

இத்தகைய சந்தர்ப்பங்களில் சரியான நேரத்தில் சிகிச்சை செய்வது மிகவும் முக்கியமானதாகும். ஒருவேளை நீங்கள் சிகச்சை செய்யாவிட்டால் தடுக்கப்பட்ட இதய தசை நிரந்தர சேதத்திற்கு ஆபத்துள்ளாக வாய்ப்பு உள்ளது.

இது இரத்த ஓட்டத்தை துண்டிக்கிறது. எனவே மாரடைப்பு அறிகுறிகளை நாம் எல்லோரும் அறிந்து கொள்வது அவசியம்.

​முச்சு விடுவதில் சிரமம்

நீங்கள் உடற்பயிற்சி செய்த பிறகு அல்லது படிக்கட்டுகளில் ஏறிச் சென்ற பிறகு சுவாசத்தை பெறுவதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறீர்கள் என்றால் அது அடைபட்ட அல்லது தடுக்கப்பட்ட தமனிகளின் அறிகுறியாக இருக்கலாம்.

இது சில நாட்களில் மாரடைப்புக்கு வழி வகுக்கும். அடைபட்ட / தடுக்கப்பட்ட தமனிகள் உங்கள் இயல்பான சுவாச சுழற்சியில் தலையிடுகின்றன. இதனால் திடீர் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

​அதிகப்படியாக வியர்த்தல்:

உங்க தமனிகள் அடைப்பட்டு இருக்கும் போது இதயத்திற்கு இரத்தத்தை செலுத்துவது கடினம்.

இதயத்திற்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்த ஓட்டம் இல்லாததால் நீங்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடும்போது உங்கள் இதயத்திற்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

இதனால் இதயம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதனால் சின்ன வேளை செய்தால் கூட உங்களுக்கு அதிகப்படியாக வியர்க்க ஆரம்பிக்கும்.

​மார்பக வலி

கைகள், தோள்கள் மற்றும் உங்கள் தாடைகளில் பெரும்பாலும் தொடரக்கூடிய மார்பு வலியை நீங்கள் உணரலாம்.

மார்பு வலி என்பது மாரடைப்பின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். உங்க தமனி அடைப்பட்டு இருந்தால் அல்லது மாரடைப்பு ஏற்பட்டால் மார்பில் வலி, இறுக்கம் அல்லது அழுத்தத்தை உணரலாம்.

இந்த இறுக்க உணர்வு பொதுவாக சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும். நீங்கள் ஓய்வில் இருக்கும்போது அல்லது உடல் ரீதியாக ஏதாவது செய்யும்போது இது நிகழலாம்.

​குமட்டல்

உங்கள் இதயம் சரியாக செயல்படாதபோது, செரிமான மண்டலத்திற்கு இரத்த ஓட்டம் பாதிக்கப்படலாம்.

இது இரைப்பை குடல் பிடிப்புகள் மற்றும் குமட்டல் போன்ற எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

வாந்தி அல்லது செரிமான உணர்திறனுடன் நீங்கள் குளிர் வியர்வை மற்றும் தலைச்சுற்றலை போன்றவை ஏற்படலாம்.

இந்த அறிகுறிகள் தமனிகள் அடைப்பட்டு இருப்பதை காட்டுகிறது. இது காலப்போக்கில் மாரடைப்பை உண்டாக்கும்.

​ஒழுங்கற்ற இதயத்துடிப்பு

நீங்கள் பதட்டமாக அல்லது உற்சாகமாக இருக்கும்போது உங்கள் இதயத் துடிப்பு தாறுமாறாக இருப்பது இயல்பானது.

ஆனால் சில நொடிகளுக்கு மேல் உங்கள் இதயம் வேகமாக துடிப்பதைப் போல நீங்கள் உணர்ந்தால் அது அடிக்கடி நடந்தால் உங்க மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

Also Read: Why Bitter Taste in Mouth? ஏன் இந்த வாய் கசப்பு..? காரணங்கள் மற்றும் அதை போக்கும் வழிகள்..!

விழிப்புணர்வு பெறுங்கள்

நினைவில் கொள்ளுங்கள், இந்த அறிகுறிகளையும் முன்கூட்டியே கண்டறிவது அடைபட்ட தமனிகளின் சிகிச்சையை மேம்படுத்துவதோடு மாரடைப்பு ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும் என அறிந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *