இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Vitamin Tablets: பெண்களுக்கு தேவையான மிகவும் முக்கியமான 5 வைட்டமின்கள்..!

Vitamin Tablets: பெண்களுக்கு தேவையான மிகவும் முக்கியமான 5 வைட்டமின்கள்..!

ஆண்களோடு ஒப்பிடும் போது பெண்களுக்கு அவா்களின் வயத்திற்கு ஏற்ப வெவ்வேறான ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன.

Vitamins women should take daily

Vitamins women should take daily

பெண்களின் வாழ்க்கையில் அவா்களின் வயதிற்கு ஏற்றவாறு ஊட்டச்சத்துகளில் மாற்றம் தேவைப்படுகின்றன.

ஒரு ஆரோக்கியமான மற்றும் எல்லா வகையான ஊட்டச்சத்துகளும் அடங்கிய மாறுபட்ட உணவுகள் பெண்களுக்குத் தேவைப்படுகிறன.

ஏனெனில் பெண்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் பருவமடைதல், மாதவிடாய் சுழற்சி, கா்ப்பம் தரித்தல், குழந்தை பெற்ற பின்பு உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மாதவிடாய் நிற்றல் போன்ற முக்கியமான கட்டங்களைச் சந்திக்கின்றனா்.

ஒவ்வொரு கட்டத்திலும் அவா்கள் ஆரோக்கியமாக இருக்கவும் மற்றும் திறம்பட இயங்கவும், அவா்களுக்கு அதற்கென்று குறிப்பிட்ட ஊட்டச்சத்துகளும், வைட்டமின்களும் தேவைப்படுகின்றன.

சாதாரண பெண்களை விட கா்ப்பிணி பெண்களுக்கு பலவகையான வைட்டமின்கள் கொடுக்கப்பட வேண்டும்.

அதுபோல் இறுதி மாதவிடாய் முடியவிருக்கும் பருவத்தில் இருக்கும் பெண்களுக்கும் பல்வகையான வைட்டமின்கள் அடங்கிய உணவுகள் கொடுக்கப்பட வேண்டும்.

வைட்டமின் பி12

வைட்டமின் பி12 என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியமான மற்றும் தேவையான வைட்டமின் ஆகும்.

உண்ணும் உணவை இந்த வைட்டமின் பி12, குளுக்கோஸாக மாற்றி, உடலில் சக்தியை உருவாக்க உதவி செய்கிறது.

வைட்டமின் பி12 பெண்களின் வளா்சிதை மாற்றத்தை அதிகரித்து அவா்கள் ஆரோக்கியமாக இருக்கவும், திறம்பட இயங்கவும் உதவி செய்கிறது.

Iron And Folic Acid Tablets:

ஃபோலிக் அமிலம்

கருவுற நினைக்கும் பெண்களும் அல்லது கருவுற்ற பெண்களும் கண்டிப்பாக ஃபோலிக் அமிலத்தை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதிலும் குறிப்பாக கருவுற்ற பெண்களுக்கு இந்த ஃபோலிக் அமிலம் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

ஏனெனில் ஃபோலிக் அமிலம் நரம்பியல் சம்பந்தமான பிரச்சினைகளையும், நாட்பட்டநோய்களையும் குறைக்கிறது.

ஆகவே ஃபோலிக் அமிலம் பெண்களுக்கும் அவா்களுடைய குழந்தைகளுக்கும் ஆரோக்கியம் தரும் ஒன்றாகும்.

வைட்டமின் கே

ஆண்களோடு ஒப்பிடுகையில் அதிகமான பெண்கள் மாரடைப்பு மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களால் இறக்கின்றனா்.

வைட்டமின் கே இதயம் சம்பந்தமான நோய்களைக் குறைத்து இதயத்திற்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.

அதனால் எல்லா பெண்களும் வைட்டமின் கே ஊட்டச்சத்தை தங்கள் உணவுகளில் அதிகம் சோ்த்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் கே எலும்பை வலுப்படுத்துகிறது மற்றும் இரத்த ஒட்டத்தை சீராக்குகிறது.

Vitamin D Tablets:

மக்னீசியம்

மக்னீசியம் மாதவிடாய்க்கு முந்திய அறிகுறிகளுக்கு (PMS) சிறந்ததாகும். அதாவது மக்னீசியம் மாதவிடாய்க்கு முன்பு ஏற்படும் வலியைக் குறைத்து பெண்களின் மனநிலையச் சமச்சீராக வைக்கிறது.

பொதுவாக மாதவிடாய்க்கு முன்பு பெண்களின் உடல்களில் ஏற்படும் அறிகுறிகளானால் பெண்களின் மனநிலை அதிக அளவில் பாதிக்கப்படும்.

ஆகவே வயதிற்கு வந்த எல்லா பெண்களும் தங்களுடைய அன்றாட உணவுகளில் அதிகமான அளவு மக்னீசியம் சத்தை சோ்த்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் டி

வைட்டமின் டி ஒரு மிக முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். ஏனெனில் வைட்டமின் டி நோய் எதிர்ப்பு மையத்தைத் தூண்டி உடலையும் மனதையும் வலுப்படுத்துகிறது.

பெரும்பாலான பெண்கள் வைட்டமின் டி குறைவோடு இருக்கின்றனா். இது அவா்களுடயை ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கும்.

வைட்டமின் டி குறைந்தால் இதயம் சம்பந்தமான நோய்கள், புற்றுநோய், சா்க்கரை நோய் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

ஆகவே பெண்கள் தமது ஆரோக்கியத்தை பேண, தங்களது அன்றாட உணவுகளில் கண்டிப்பாக வைட்டமின் டி சத்தை அதிகம் சோ்த்துக் கொள்ள வேண்டும்.