Fenugreek tea benefits: நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்ற தினமும் இந்த டீயை குடிங்க..!
Fenugreek tea benefits: நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்ற தினமும் இந்த டீயை குடிங்க..!
ஒருவரது சுவாசத்தில் இரண்டு நுரையீரல்களும் முக்கிய பங்கை வகிக்கின்றன.
தற்போது உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் மற்றும் காற்று மாசுபாடு, புகைப்பிடித்தல், குப்பைகளை எரித்தல், கெமிக்கல்களின் பயன்பாடு போன்றவை நுரையீரலின் சரியான செயல்பாட்டிற்கு இடையூறை ஏற்படுத்துபவை.

Fenugreek tea benefits:
ஒருவரது நுரையீரலை நோய்கள் அதிகமாக தாக்கும் போது, அது சுவாச மண்டலத்திற்கு மீளமுடியாத சேதத்தை ஏற்படுத்தி, நுரையீரலின் சுவாசத் திறனைக் குறைக்கிறது.
எனவே அவ்வப்போது நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வது அவசியம்.
எல்லாவற்றிற்கும் மேலாக கொரோனா வைரஸ் போன்ற வைரஸ்களில் இருந்து இரட்டிப்பு பாதுகாப்பை நுரையீரலுக்கு அளிக்க, ஒட்டுமொத்த உலகமும் மாற்று சிகிச்சைகளை தேடி வருகிறது.

இன்று பலரது நுரையீரலில் சளி அதிகம் தேங்கியுள்ளது. இப்படி சளி வெளியேறாமல் நுரையீரலிலேயே தங்கியிருந்தால், இருமலால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.
அதே சமயம் அதிகப்படியான சளித் தேக்கம் உடலின் நோயெதிர்ப்பு திறனை எவ்வாறு குறைக்கும் என்பது தெரியுமா?
உடலில் சளி அதிகம் தேங்கும் போது, அது பாக்டீரியா, கிருமிகள், வைரஸ்கள் போன்றவற்றை உடலிலேயே தங்க வைத்து, உடலின் நிலைமையை மோசமாக்குகிறது.
பொதுவாக நுரையீரலில் உள்ள அதிகப்படியான சளியை அகற்ற உடலில் நடைபெறும் சில வேறுபட்ட வழிமுறைகள் தான் இருமல், தும்மல் மற்றும் மூக்கு ஒழுகல்.
சிலருக்கு வழக்கத்திற்கு அதிகமாக சளி தேங்கியிருக்கும். இப்படி அதிகப்படியான சளியைக் கொண்டவர்கள் மாதக்கணக்கில் இருமல் பிரச்சனையால் அவஸ்தைப்படுவார்கள்.
உடலில் தேங்கியுள்ள சளியை வெளியேற்றுவதற்கு, முதலில் அதை உடைக்க வேண்டும். அதற்கு சிறப்பான வழி சுடுநீர் ஆவி பிடிப்பது.
சளியால் அவஸ்தைப்படுபவர்கள் ஆவி பிடிக்கும் போது, வெதுவெதுப்பான காற்றை நாசிகளின் வழியே உள்ளிழுக்கும் போது, இறுகிய நிலையில் இருந்த சளி இளகி, எளிதில் வெளியேறுவதற்கு ஏற்றவாறு மாறும்.
சளியை உடைதெறிவதற்கான மாற்று வழி நுரையீரலில் இறுகிய நிலையில் உள்ள சளியை எளிதில் உடைதெறிய உதவும் அற்புதமான ஓர் பொருள் தான் வெந்தயம்.
இது அனைவரது சமையலறையிலும் இருக்கக்கூடிய ஒரு மசாலாப் பொருள். மேலும் இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தன்னுள் கொண்டது.
இப்போது சளியை எளிதில் இளகச் செய்ய வெந்தயத்தை எப்படி உட்கொள்வது என்று காண்போம்.
வெந்தய டீ செய்முறை:
- ஒரு ஸ்பூன் வெந்தயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் வடிகட்ட வேண்டும்.
- வேண்டுமானால், இத்துடன் சிறிது மிளகையும் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளலாம்.
- சிறப்பான பலன் கிடைக்க வெந்தய டீயை தினமும் காலையில் ஒரு கப் மற்றும் மாலையில் ஒரு கப் என குடிக்க வேண்டும்.
Also Read: Bamboo rice benefits: உங்கள் வீட்டிற்கு மூங்கில் அரிசியை கொண்டு வாருங்கள்..!
- மிளகை இந்த பானத்துடன் சேர்ப்பதால் இந்த பானத்தின் நன்மை இரட்டிப்பாகும். மிளகில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வலி நிவாரணப் பண்புகள் உள்ளது மற்றும் இது சளியை எளிதில் உடைத்தெறிந்து வெளியேற்றும்.