all

Amazing Facts About Earth: பெருங்கடல்கள் இல்லாத பூமி எவ்வாறு இருக்கும் ?

Amazing Facts About Earth: பெருங்கடல்கள் இல்லாத பூமி எவ்வாறு இருக்கும் ?

மண்ணில் எத்தனை விந்தைகள் உள்ளனவோ, அதைவிடக் கூடுதலாக ஆழ்கடலுக்கு உள்ளே விந்தைகள் மறைந்து உள்ளன.

Amazing Facts About Earth

Amazing Facts About Earth:

கடல்களைப் பற்றி நாம் அறிய வேண்டிய செய்திகள், கடலைவிட அதிகம் என்றே சொல்லலாம்.

உலக நாடுகளின் மொத்தக் கடற்கரை 3,15,000 மைல்கள் (ஏறத்தாழ 5,50,000 கிலோ மீட்டர்) வரை நீளமாக இருக்குமாம். இந்தியாவின் கடற்கரை 7,517கிலோ மீட்டர்கள் நீளம் கொண்டது. அதில், தமிழ்நாட்டின் கடற்கரை 997 கிலோ மீட்டர்கள் நீளம் என குறிப்பிடப்படுகிறது.

கடலில் உள்ள தண்ணீரின் மொத்த எடை, 1,450,00,00,00,00,000,0000 மெட்ரிக் டன்கள் இருக்கும் என்று கூறுகிறார்கள். அதில் ஒரு பங்காக நாம் எப்படி வசிக்கிறோம் என்று வியப்பாக இருக்கிறதா?

இவ்வளவு டன்கள் இருக்கிறது என்று எண்ணிவிடாதீர்கள், இது, புவியின் மொத்த எடையில், ஒரு விழுக்காடு கூட இல்லை. வெறும், 0.022 விழுக்காடுதான்.

என்ன வியப்பாக இருக்கிறதா? ஆம்; அதுதான் உண்மை.

உலகின் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு கடல் என்றாலும், அந்தக் கடலும், நிலத்தின் மேலேதானே அமைந்துள்ளது.

பூமியின் குறுக்குவெட்டு நீளம் சுமார் 12,700 கிலோமீட்டர்கள் ஆகும். அதில் மேற்பரப்பில், சுமார் ஐந்து முதல் பத்து கிலோ மீட்டர் ஆழத்துக்கு கடல் நீர் மட்டுமே உள்ளது.

நிலத்தில் உள்ள கற்கள், பாறைகள், மலைகள், மணலின் எடைதானே நீரை விட அதிகமாக இருக்கிறது.

எனவே, நாம் நேரில் பார்க்கின்ற கடலின் தோற்றம் நம்மை அச்சுறுத்தினாலும், ஒட்டு மொத்த உலகில், கடல் என்பது ஒரு விழுக்காடு கூட இல்லை என்பதையும் அறிந்துக்கொள்ளுங்கள்.

நமது உடலை எவ்வாறு தோல் மூடி இருக்கிறதோ, அதுபோல, இந்த உலகை கடல் மூடிக்கொண்டு இருக்கிறது. அவ்வளவுதான்.

அதாவது, உட்புறம் நெருப்புக் குழம்பாகக் கொதித்துச் சுழன்றுகொண்டு இருக்கின்ற இந்தப்புவியின் மேற்பரப்பைக் குளிர்விக்கின்ற ஒரு குளிர்விப்பானாகக் கடல் அமைந்துள்ளது. எனவே, கடலை நாம் புவியின் தோல் என்று கூட அழைக்கலாம்.

What are the main causes of tsunami?

கடல்கள் பூமியின் பெரும்பகுதியை தன் வசத்தில் உள்ளடக்கியது, இதில் மிக நீளமான மலைத்தொடர், ஆழமான தாழ்வுப் பகுதி மற்றும் இயற்கையான பழங்கால “பாலங்கள்”போன்ற அனைத்தும் அடங்கியுள்ளன.

உலகின் பெரும்பாலான சுனாமி தாக்குதல்கள், ஜப்பான் பகுதியில்தான் ஏற்படுகின்றது, ஏன் அதன் காரணம் என்ன என்பது தெரியுமா…!

இந்தப்புவி, கிழக்கு நோக்கிச் சுழல்வதால், காற்று மேற்கு நோக்கி வீசும். இடையில் தடுப்புகள் ஏதும் இல்லாததால், பசிபிக் கடலில் காற்றின் வேகம் சற்று அதிகமாகவே இருக்கும்.

இதனால் நில நடுக்கங்கள் அக்கடலுக்கு உள்ளே ஏற்ப்பட்டு அலைகள் பொங்குகின்றன. பொங்கிவரும் அலைகள், ஜப்பானியக் கடற்கரையைத்தான் தாக்குகின்றன.

எனவேதான், கடலின் கோர விளையாட்டுக்கு அடிக்கடி ஜப்பான் இலக்கு ஆகிறது.

பெருங்கடல்களின் உள்ளே, பிரம்மாண்டமான சமவெளிகள், ஏகப்பட்ட எரிமலைகள், படுகுழிகள், மலைத்தொடர்கள் எல்லாம் புதைந்து இருக்கின்றன.

சூரிய ஒளி, கடலுக்கு உள்ளே 100 அடி ஆழம் வரையில் தான் தெளிவாக இருக்கும். அதற்குக் கீழே போகப்போக, சூரிய ஒளி மங்கிக்கொண்டே போகும்.

அண்மைக்காலமாக, புவி வெப்பம் உயர்ந்து வருவதால், பனிமலைகள் உருகத் தொடங்கி வருகின்றன. இதனால் ,கடலில் நீர்மட்டமும் உயர்ந்து கொண்டே வருகிறது.

இவ்வாறே சென்றுக் கொண்டிருந்தால் நாம் வாழ்வதற்கு தேவையான நிலப்பரப்பு இல்லாமல் போய்விடும்.

Also Read: Amazing Facts About Science: உலகம் தட்டையாக [flat] இருந்தால், ஒரு கப்பல் நம் பார்வையில் இருந்து “மறைய” எவ்வளவு தொலைவில் இருக்க வேண்டும்..?

எனவே, கடலின் உயர்மட்டம் உயராமல் தடுக்க இயற்கையினை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *