Watching Movie: அதிகம் டிவி பார்ப்பவரா நீங்க..?
Watching Movie: அதிகம் டிவி பார்ப்பவரா நீங்க..?
தினமும் 3 மணி நேரத்துக்கு மேல் டிவி பார்க்கும் பழக்கமுடைய சிறுவர், சிறுமியர் நொறுக்குத் தீனியை அதிகமாக உண்ணக்கூடும் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

Watching Movie:
டிவி பார்க்கும் பழக்கம் மற்றும் உணவு முறைக்கு இடையிலான தொடர்பு குறித்து இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வில், அதே நாட்டைச் சேர்ந்த 11 வயது முதல் 19 வயதுக்கு உள்பட்ட 3,348 சிறார் பங்கேற்றனர். ஆய்வில் தெரியவந்ததாவது:
டிவியில் தொடர்கள் அல்லது திரைப்படங்களுக்கு இடையே விளம்பரங்கள் ஒளிபரப்பாகும்போது தான் சிறார் அதிக அளவில் நொறுக்குத் தீனியை உண்கின்றனர். மேலும், அவர்கள் குளிர்பானங்களையும் குடிக்கின்றனர்.
அதே சமயம், குறைவான விளம்பரங்கள் அடங்கிய நிகழ்ச்சிகளைப் பார்த்த சிறார் குறைவான நொறுக்குத் தீனியை மட்டுமே சாப்பிட்டனர்.
இதன்மூலம் டிவியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் நொறுக்குத் தீனி சாப்பிடும் பழக்கத்தை ஊக்குவிப்பது தெரிய வந்துள்ளது.
Also Read: வீட்டின் உட்புறத்தை அலங்கரிக்கவும்..! இதனால் நோய்களை விரட்டலாம்..!
இதுகுறித்து இந்த ஆய்வை மேற்கொண்ட ஜோத்ஸ்னா வோஹ்ரா தெரிவிக்கையில், ‘டிவி பார்க்கும் அனைத்து குழந்தைகளுமே நொறுக்குத் தீனிக்கு அடிமையாகி விடுவார்கள் என்று நாங்கள் கூறவில்லை.
ஆனால், டிவியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களுக்கும், நொறுக்குத் தீனி சாப்பிடும் பழக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இந்த ஆய்வில் நிரூபனம் ஆகியுள்ளது’ என்றார்.