இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Liver Infection Symptoms: மூச்சு விடும்போது துர்நாற்றம் வீசினால் கல்லீரல் தொற்று ஏற்பட்டிருக்கலாம்! இந்த அறிகுறிகளில் கவனமாக இருங்கள்..!

Liver Infection Symptoms: மூச்சு விடும்போது துர்நாற்றம் வீசினால் கல்லீரல் தொற்று ஏற்பட்டிருக்கலாம்! இந்த அறிகுறிகளில் கவனமாக இருங்கள்..!

அதிகப்படியான குடிப்பழக்கம் உள்ளவர்களை  கொழுப்பு கல்லீரல் நோய் தாக்குகின்றது.

Liver Infection Symptoms

Liver Infection Symptoms:

குடிப்பழக்கம் கொண்டவர் அல்லது எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவராக இருந்தாலும் கூட இந்த ஹெபடிக் ஸ்டீடோசிஸ்(hepatic steatosis) எனப்படும் கொழுப்பு கல்லீரல் நோய் பாகுபாடின்றி அனைவரையும் பாதிக்கிறது.

கொழுப்பு கல்லீரல் நோய் கண்டறியப்பட்டால், உட்புற உறுப்பு பல ஆண்டுகளாக அதிக கொழுப்பை சேமித்து வைத்துள்ளது.

அது இப்போது அதன் இயல்பான செயல்பாட்டிற்கு வர முயற்சிக்கிறது என்று அர்த்தம்.

அதிகப்படியான குடிப்பழக்கம் கொழுப்பு கல்லீரல் நோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும், இந்த நோய் அதன் ஆரம்ப கட்டத்தில் எந்த அறிகுறிகளையும் காண்பிக்காது.

இதன் பொதுவான அறிகுறி சுவாசிக்கும்போது துர்நாற்றம் வெளிப்படுவது ஆகும்.

அறிகுறிகள்:

கொழுப்பு கல்லீரல் நோயின் விசித்திரமான அறிகுறிகளில் ஒன்று “இறந்த உடலிலிருந்து வரும் துர்நாற்றம்” ஆகும், இதை Fetor hepaticus என்றும் அழைக்கின்றனர்.

இறந்த உடலிலிருந்து வரும் துர்நாற்றத்தை போன்ற வாடை நம் மூச்சுக் காற்றில் இருந்து வரும்.

இந்த துர்நாற்றத்தால் நம் அருகில் யாரேனும் வந்தாலும் அவர்களுக்கும் இந்த துர்நாற்றம் வீசும்.

குறிப்பிட்ட உணவை உட்கொண்ட பிறகு அல்லது காலையில் எழுந்ததும் வரும் துர்நாற்றம் என்பது பொதுவானது.

ஆனால் கொழுப்பு கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அந்த துர்நாற்றம் நாள் முழுவதும் எப்போதும் இருக்கும்.

நாள் முழுவதும் உடல் சுவாசம் ஒரு தனித்துவமான துர்நாற்றத்தை வீசிக்கொண்டே இருக்கும்.

அப்படி இருந்தால் அது கொழுப்பு கல்லீரல் நோயின் வெளிப்படையான அறிகுறியாகும்.

கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்பட்டால், கல்லீரலால் இரத்தத்தை வடிகட்டவோ அல்லது ரசாயனங்களை நச்சுத்தன்மையாக்கவோ முடியாது.

மேலும், உடல் உட்கொள்ளும் மருந்துகளை ஜீரணிக்க முடியாமல் போய்விடும்.

கல்லீரல் சரியாக வேலை செய்ய முடியாத காரணத்தால் கல்லீரலில் இருந்து வடிகட்டப்பட வேண்டிய நச்சுப் பொருள், சுவாச அமைப்பு உட்பட உடலின் மற்ற பகுதிகளுக்குச் செல்கிறது.

இது  சுவாசத்தை துர்நாற்றமாக மாற்றுகிறது. மேலும், துர்நாற்றத்திற்கு டைமெதில் சல்பைடு காரணமாக இருக்கலாம்.

Also Read: Immunity Boosting Food in Tamil: உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கும் தேநீர்..!

இக்கொழுப்பு கல்லீரல் நோயுடன் துர்நாற்றமான சுவாசம் தொடர்புடையதாக இருந்தால், குழப்பம் மற்றும் கவனக்குறைவு, எளிதில் இரத்தப்போக்கு, மஞ்சள் தோல், வீங்கிய கால்கள், வயிறு வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

எனவே  சுவாசத்தில் ஒரு தனித்துவமான வாசனையை நீங்கள் கண்டால், அதை அலட்சியமாக விடாமல் பாதிப்பு ஏற்படும் முன்னரே மருத்துவரை அணுகி தீர்வை தெரிந்துகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *