இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Curd: தயிருடன் இவற்றை மட்டும் சாப்பிட வேண்டாம்..!

Curd தயிருடன் இவற்றை மட்டும் சாப்பிட வேண்டாம்..!

பாலில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களுமே ஆரோக்கியமானது தான். அதிலும் குறிப்பாக தயிரை நமது தினசரி உணவில் சேர்த்து கொள்வதினால் நமக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. உதாரணமாக தினமும் தயிர் சாப்பிட்டால் மாரடைப்பு என்பது நமக்கு வரவே வராது.

Curd

How To Eat Curd?

இத்தகைய தயிரில் கால்சியம், வைட்டமின் B12, வைட்டமின் B2, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் தினமும் தயிர் சாப்பிடும் நாம் அதனுடன் சேர்த்து எந்தெந்த உணவுகளை சாப்பிட கூடாது என்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். இந்த கேள்விக்கான பதில் இந்த பதிவில் உள்ளது.

தயிருடன் அனைத்து உணவு பொருட்களும் ஒத்து போகாது. இதனால் நமக்கு நிறைய பக்க விளைவுகள் வரக்கூடும். இது ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்துள்ளது.

ஆனால் தயிர் சாப்பிடுவோர் கட்டாயமாக இந்த விஷயத்தை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.

Curd சாதத்துடன் ஒரு சில மாம்பழத்தை தொட்டு கொண்டு சாப்பிடுவார்கள். இது சாப்பிட சுவையாக இருந்தாலும் இதனால் நம் உடலுக்கு எதிர் விளைவுகள் உண்டாகலாம்.

உடலுக்கு அதிக சூட்டை ஏற்படுத்தும் மாம்பழம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே இனியும் இவை இரண்டையும் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

இரண்டாவதாக தயிருடன் மீன் கண்டிப்பாக சாப்பிட கூடாது. மீனில் அதிகப்படியான புரத சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதனை தயிருடன் சாப்பிடும் பொழுது செரிமான கோளாறுகள் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக வயிறு வலி கூட ஏற்படலாம்.

Curd :

தயிர் என்பது பாலில் இருந்து தனியாக எடுக்கப்படும் ஒரு உணவுப்பொருள் என்பதால் இதனை பாலோடு சேர்த்து நிச்சயம் சாப்பிட கூடாது. இது ஒவ்வாமையை உண்டாக்கும்.

மேலும் நெஞ்செரிச்சல், அசிடிட்டி, வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.

உங்களால் முடிந்த வரை எண்ணெயில் பொரித்த பொருட்களோடு தயிர் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.

அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் இந்த பல பரிட்சையை மேற்கொள்ள வேண்டாம். இதனால் செரிமான பிரச்சனைகள் உண்டாகும்.

Also Read: Coffee: மஞ்சள் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

பிரியாணி என்றாலே அதற்கு சைடு டிஷ்ஷாக நாம் எடுத்து கொள்வது தயிர் பச்சடி தான். பிரியாணியில் அதிகப்படியான மசாலா பொருட்கள் சேர்க்கப்படுவதால் அது நம் உடலுக்கு எந்த வித தீங்கும் தராமல் இருக்க வெங்காயத்துடன் தயிர் சேர்த்து தரப்படுகிறது.

ஆனால் இதில் விஷயம் என்னவென்றால் குளிர்ச்சியை தரக்கூடிய தயிரையும், சூட்டை உண்டாக்கக் கூடிய வெங்காயத்தையும் ஒன்றாக எடுத்து கொள்ள கூடாது.

எதிர்மாறான தன்மை கொண்ட பொருட்களை எடுத்து கொள்வதினால் சில சமயங்களில் உடலுக்கு தீங்கு நேரிடும். எனவே கூடுமானவரை பிரியாணி சாப்பிடும் போது தயிர் பச்சடியை குறைவாகவே எடுத்து கொள்ளுங்கள்.