இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Coriander Leaves: கொத்தமல்லியில் என்றைக்காவது சருமப் பராமரிப்பு செஞ்சிருக்கீங்களா..?

Coriander Leaves: கொத்தமல்லியில் என்றைக்காவது சருமப் பராமரிப்பு செஞ்சிருக்கீங்களா..?

கருப்பாக இருந்தாலும் சிவப்பாக இருந்தாலும் முகம் பளிச்சென்று இருக்க வேண்டுமென்று தான் அனைவரும் விரும்புவார்கள்.

Coriander Leaves - newstamilonline

ஆனால் அதற்கு விலையுயர்ந்த க்ரீம், ஃபேஷியல் என எதுவும் தேவையில்லை. வீட்டில் சமைக்க வைத்துள்ள ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலையே போதுமானது.

கொத்தமல்லி இலையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

கொத்தமல்லியின் தண்டு, இலை, விதை ஆகியவற்றில் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன.

கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்திருக்கும் கொத்தமல்லியில் வைட்டமின் ஈ யும் அதிக அளவில் நிறைந்திருக்கிறது. வைட்டமின் ஈ சருமப் பராமரிப்புக்கு மிகவும் மிகுந்தது.

மாசுக்கள் மற்றும் தூசுக்களால் சருமப் பிரச்சினைகள் அதிகம் ஏற்படுகின்றன.

சூரிய ஒளியின் அதிகப்படியான வெப்பத்தால், புறஊதாக் கதிர்களின் தாக்கத்தால் நமது சருமம் மிகவும் பாதிப்படைகிறது.

சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை உண்டாகும்.

இந்த பிரச்சினைகளை எல்லாம் சரிசெய்ய கொத்தமல்லி இலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Coriander Leaves:

இளமையை மீட்டுத் தரும் :

யாருக்குதான் இளமை பிடிக்காது. உங்களுக்கும் ஆசை எனில் உங்கள் இளமையான சருமத்தை பாதுகாக்க கொத்தமல்லியை அரைத்து அதனுடன் கற்றாழை ஜெல் கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் போல் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இதனால் முகச் சுருக்கங்கள், தொங்கும் தோல் இறுகி பொலிவாக மாறும்.

நச்சுகளை நீக்கும் :

கொத்தமல்லியில் வைட்டமின் சி இருப்பது சருமத்தில் மறைந்திருக்கும் அழக்கு, நச்சு, இறந்த செல்களை நீக்க உதவும். எனவே கொத்தமல்லியை மைய அரைத்து முகத்தைக் கழுவிவிட்டு இந்த பேஸ்டை அப்ளை செய்யுங்கள். 10 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

பளிச் முகம் :

கொத்தமல்லி பேஸ்டுடன் ஓட்ஸ் மற்றும் முட்டை வெள்ளைப் பகுதி இரண்டையும் சேர்த்து நன்குக் கலக்கிக்கொள்ளுங்கள். அதை முகத்தில் அப்ளை செய்து நன்குக் காய்ந்து உதிரும்போது கழுவுங்கள்.

Also Read: Drink hot water: அதிகமான சுடு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்..!

வறண்ட உதடுகள் :

எலுமிச்சை சாறுடன் கொத்தமல்லி பேஸ்ட் கலந்து இரவு தூங்கும் முன் உதட்டில் பேக் போல் அப்ளை செய்து மறுநாள் காலை கழுவுங்கள். மாற்றத்தை நீங்களே காணலாம்.