இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்விசித்திரமான தகவல்கள்

House Keeping: வீட்டில் எறும்புத் தொல்லையா..?

House Keeping: வீட்டில் எறும்புத் தொல்லையா..?

எறும்புத்தொல்லை இல்லாத வீடுகளே இல்லை. மூலை முடுக்குகள், சுவற்றில் இருக்கும் ஓட்டைகள் என எந்த வழியிலாவது எறும்புகள் வந்துவிடும். ஸ்நாக்ஸ் வகைகளை பாக்கெட் போட்டு வைத்தாலும், பாக்கெட்டை துளைத்துவிட்டு எல்லாவற்றையும் மொய்த்துவிடும். இதனால் உணவில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் எறும்பின் மூலமாக பரவும்.

House cleaning tips

House Keeping :

மற்றொரு புறம் கரையான்கள், இது கதவு, ஜன்னல் போன்ற மரக்கட்டை பொருட்களை அப்படியே அரித்துவிடும்.

இவ்வாறு நம்மைச் சுற்றிலும் 12 ஆயிரம் வகையான எறும்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய எறும்புத் தொல்லையில் இருந்து விடுபட உதவும் சில டிப்ஸ்களை இங்குக் காணலாம்.

Also Read: Healthy popcorn: உங்களுக்குப் பிடிச்ச பாப்கார்னை ஆரோக்கியமாக மாற்றுவதற்கான டிப்ஸ் இதோ..!

House cleaning tips

 1. சாக்பீஸ்
  எறும்புகளை விரட்டுவதற்கு சாக்பீஸ்களைப் பயன்படுத்தலாம். வீட்டு வாசலில் இந்த சாக்பீஸைக் கொண்டு கோடு போடலாம், உணவு பாத்திரங்களை தரையில் வைத்தால், பாத்திரத்தைச் சுற்றிலும் தரையில் கோடு போடலாம். இது ஒரு நல்ல தீர்வாக அமையும்
 2. எலுமிச்சை
  எலுமிச்சை வாடை எறும்புக்கு பிடிக்காது. எனவே தரையை சுத்தம் செய்யும் போது, தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து, தரையைச் சுத்தம் செய்யலாம்.
 3. ஆரஞ்சு
  இதே போல், ஆரஞ்சு வாடையும் எறும்புக்குப் பிடிக்காது. ஒரு கப்பில் வெதுவெதப்பான நீரில் ஆரஞ்சு பழத்தோலை முக்கி, பேஸ்ட் போல செய்துகொள்ளவும். அதை எறும்பு வரும் இடங்களில் தெளிக்கலாம்.
 4. மிளகு
  எறும்புக்கு இனிப்பு எவ்வளவு பிடிக்குமோ, அதற்கு நேர்மாறாக காரம் சுத்தமாகப் பிடிக்காது. குறிப்பாக மிளகு இருந்தால், அந்த வாடைக்கு எறும்பு எட்டிக்கூட பார்க்காது.
 5. உப்பு
  இதே போல், எறும்புத் தொல்லையில் இருந்து விடுபட உப்பைப் பயன்படுத்தலாம். கொதிக்க வைத்த தண்ணீரில், உப்பு சேர்த்து, நன்றாக கலக்கி, ஒரு ஸ்ப்ரே பாட்டில் மூலம் எறும்பு வரும் இடங்களில் தெளிக்கலாம்.
 6. வெள்ளை வினிகர்
  எறும்புக்கு வினிகர் நறுமணம் ஆகாது. எறும்பு வரும் இடத்தில் வினிகரை சிறிதளவு ஊற்றினால் போதும். எறும்புத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
 7. இலவங்க பட்டை
  இலவங்கப்பட்டைத் தூளை வீட்டில் மூலை முடுக்குகளில் தூவினால் போதும். அந்த வாடைக்கு எறும்புகள் வராது.
 8. துளசி
  துளசியின் வாடைக்கும் எறும்புகள் வராது. வீட்டில் துளசி செடி இருந்தால், அதில் இரண்டு இலைகளை பிய்த்து, கையில் வைத்து கசக்கவும். பின்னர், அதை அப்படியே எறும்பு வரும் இடத்தில் போடவும்.