Interesting FactsTamil Newsஅறிவியல்இயற்கையோடு வாழ்வோம்கண்டுபிடிப்புசெய்திகள்

Sea Animals: கடல் சிலந்திகள் தங்கள் ஆசனவாய்களை மீண்டும் வளர்க்கும் தன்மை உள்ளன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்..!

Sea Animals: கடல் சிலந்திகள் தங்கள் ஆசனவாய்களை மீண்டும் வளர்க்கும் தன்மை உள்ளன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்..!

ஒரு புதிய ஆய்வு ஒன்றில், சில இளம் கடல் சிலந்திகளின் உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்டன.

ஆனால், அந்த கடல் சிலந்திகளால் அதன் உடல் பாகங்களை மீண்டும் வளர்க்க முடிந்தது.

what is arthropods

What is Arthropods?

இது இந்த கடல் கணுக்காலிகளில் சாத்தியமற்றது என்று முன்னர் கருதினர்.

ஆசனவாய்கள் எனப்படுவது உடலின் திடக்கழிவுகள் வெளியேறும் துளை அல்லது மலத்துளையாகும்.

கடல் சிலந்திகள் அதிக திறனைக் கொண்டுள்ளது. சிலந்திகளால் அவற்றின் பின்புற முனைகளை மீண்டும் வளர்க்க முடியும்.

தொடர்ச்சியான சோதனைகளில், பைக்னோகோனம் லிட்டோரேல்(Pycnoconum littorale) என்ற கடல் சிலந்தியின் பின்னங்கால்கள், குடல் பகுதிகள், இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் அவற்றின் ஆசனவாய்கள் உட்பட, துண்டிக்கப்பட்ட பல உடல் பாகங்களை அவைகளால் முழுமையாக மீட்டெடுக்க முடிந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பைக்னோகோனிடா(Pycnoconida) வகையைச் சேர்ந்த கடல் சிலந்திகள், எட்டு கால்களைக் கொண்ட சுமார் 1,300 கடல் ஆர்த்ரோபாட்களின்(arthropods) குழுவாகும்.

ஆர்த்ரோபாட் என்பது முதுகெலும்பற்ற கெட்டியான உடலும், இணைப்புகளில் வளையக்கூடிய ஒன்றுக்கு மேற்பட்ட கால்பகுதிகளும் கொண்ட விலங்கு வகையாகும்.

சிலந்திகள் மற்றும் நண்டுகள் போன்ற பிற உயிரினங்களும் தங்களை வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிக்க உடல் உறுப்புகளை மீண்டும் உருவாக்குகின்றன.

இருப்பினும், கடல் சிலந்திகளுக்கு இந்த திறன் இல்லை என்று நீண்ட காலமாகவே கருதப்பட்டு வருகிறது.

ஏனெனில் விஞ்ஞானிகள் விலங்குகளின் செயல்களை ஒருபோதும் கவனித்ததில்லை, மேலும் கடல் சிலந்திகள் வேட்டையாடுபவர்களிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள கடினமான வெளிப்புற எலும்புக்கூடுகளை உருவாக்கியுள்ளன.

இதன்மூலம், அவைகளுக்கு வேறு எந்த பாதுகாப்பும் தேவையில்லை என்று பரிந்துரைத்தனர்.

அதன்பின் ஒரு புதிய ஆய்வில், 23 இளம் கரையோரக் கடல் சிலந்திகளின் உடல் பாகங்களை துண்டித்து ஆராய்ச்சியாளர்கள் சோதித்தனர்.

Sea Spiders

Sea Spiders:

சோதனையின் போது, கடல் சிலந்திகளின் பின்னங்கால்கள், ஆசனவாய், பல்வேறு தசைப் பாகங்கள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள், பெண் சிலந்திகளின் குழாய்பகுதி மற்றும் ஆண் சிலந்திகளின் குழாய்பகுதி போன்ற பல்வேறு பகுதிகளை அகற்றினர்.

முதிர்ச்சி அடைந்த சிலந்திகளால் இழந்த உடல் பாகங்களை மீண்டும் உருவாக்க முடியவில்லை.

ஆனால், ஆச்சரியமூட்டும் விதமாக பெரும்பாலான இளம் சிலந்திகள்தங்கள் பாகங்களை மீண்டும் உருவாக்க முடிந்ததாக குறிப்பிடுகின்றனர்.

16 இளம் சிலந்திகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தப்பிப்பிழைத்தன.

14 சிலந்திகளின் இழந்த உடல் உறுப்புகளை முழுமையாக மீட்டெடுக்க முடிந்தது.

“முதிர்ச்சி அடைந்த சிலந்திகளின் இழந்த உடல் பாகங்களை மீண்டும் வளர்க்க இயலாமையால், கடல் சிலந்திகளின் வளர்ச்சி திறன் இப்போது வரை கவனிக்கப்படாமல் உள்ளது” என்று ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடல் சிலந்திகளின் மீளுருவாக்க சக்திகளை பத்திரப்படுத்துவது இதுவே முதல் முறை என்றாலும், மற்ற விலங்கு குழுக்களில் மீளுருவாக்கம் செய்வதற்கான பதிவுகளை விஞ்ஞானிகள் கவனித்து வருகின்றனர்.

மார்ச் 2021 இல், “கடல் நத்தைகள் வேண்டுமென்றே தங்களைத் துண்டித்து, அதன் பின் துண்டிக்கப்பட்ட தலையில் இருந்து முற்றிலும் புதிய உடலை மீண்டும் வளர்க்கின்றன” என்று ஆராய்ச்சியாளர்கள் தற்செயலாகக் கண்டுபிடித்தனர்.

Sea Animals:

அதில் சில கடல் நத்தைகள் தங்கள் வாழ்நாளில் இரண்டு முறை இந்த வித்தையை நிகழ்த்தியதாக கூறுகின்றனர்.

செப்டம்பர் 2022 இல் மற்றொரு குழு, ஆக்சோலோட்ல்ஸ் எனப்படும் நீர்வாழ் சாலமண்டர்கள் தங்கள் மூட்டுகள், இதயம் மற்றும் முதுகுத் தண்டு ஆகியவற்றை மீண்டும் உருவாக்குவது பற்றிய தகவலை வெளிப்படுத்தியது.

Also Read: Coronavirus origin history: COVID-19 ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்பதற்கான கூடுதல் ஆதாரங்கள் கிடைத்தன..!

கடல் சிலந்திகள் மற்றும் பிற விலங்குகளின் மீளுருவாக்கம் திறன்களை அறிவதன் மூலம் “ஒரு நாள் இழந்த மனித உடல் பாகங்களை மீண்டும் வளர்ப்பதை பற்றிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்” என்று ஆராய்ச்சியாளர்கள் குழு கூறுகிறது.

“கடல் சிலந்திகளில் நாம் கண்டறியும் வழிமுறைகள் அனைத்தும் மூட்டு இழப்பு, விரல் இழப்பு மற்றும் மனிதர்களில் மருத்துவ சிகிச்சைக்கு உதவும்” என்றும் “இது என்னுடைய நம்பிக்கை” என்றும் ஷால்ட்ஸ் கூறினார்.