அறிவியல்இயற்கையோடு வாழ்வோம்கீரைகள்செய்திகள்

Gongura Leaves Benefits:புளிச்சக்கீரையின் மருத்துவப் பயன்கள்..!

Gongura Leaves Benefits:புளிச்சக்கீரையின் மருத்துவப் பயன்கள்..!

புளிச்சக்கீரை புளிப்பு சுவை மிகுந்த கீரை வகைகளில் ஒன்று.

இந்த புளிச்சக்கீரையை பயிரிடுவதற்கு நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்து கடைசி உழவின் போது ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்து மண்ணை சமன் படுத்த வேண்டும், அதன் பின் பாத்திகள் அமைத்து விதைகளை விதைக்க வேண்டும்.

Gongura Leaves Benefits:

விதைத்த மூன்றாம் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு நான்கு நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சி வந்தாலே போதும்.

பிறகு முக்கியமாக கீரையின் இடையே நிற்கும் களைகளை அகற்ற வேண்டும்.

பயிரிட்டபின் பூச்சிகளின் தாக்குதல் இருந்தால், நொச்சி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து இடித்து ஒரு லிட்டர் மாட்டு கோமியத்தில் அதனுடன் கலந்து ஒரு 10 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லிகரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளித்தால் போதும், பூச்சிகள் அண்டாது.

நன்கு முற்றுவதற்கு முன்பு அறுவடை செய்துவிட வேண்டும். கீரையை ஐந்து சென்டிமீட்டர் உயரம் விட்டு அறுவடை செய்வது தான் சரியானது.

புளிச்சகீரையானது பெயருக்கு தகுந்தாற்போல் மிக அதிக புளிப்பு சுவையுடையது. ஆந்திராவில் இக் கீரையின் பயன்பாடு மிகவும் அதிகம்.

ஆந்திராவில் இந்த கீரையை “‘கோங்குரா’ என அழைக்கிறார்கள். புளிச்சகீரைக்கு புளிச்சிறுகீரை, காயச்சுரை, காசினிக்கீரை, கைச்சிரங்கு, சனம்பு, காய்ச்சகீரை, “போன்ற பெயர்களும் உண்டு.

Gongura Leaves Benefits:

புளிச்சக்கீரையில் நிறைந்துள்ள சத்துக்கள்:

புளிச்சகீரையில் தாது உப்புக்கள், இரும்புச் சத்து, விட்டமின்கள் ஃபோலிக் அமிலம் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் என உடல் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன.

அதனால் தான் நம் முன்னோர்கள் இந்தக் கீரையை வாரம் இருமுறையாவது சமைத்து உடல் வலிமை குன்றிய குழந்தைகளுக்கு சாப்பிடத் தருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

மேலும், புளிச்சக்கீரை காசநோயை குணமாக்குவதுடன் சேர்த்து ரத்தத்தை சுத்தப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், உடல் உஷ்ணத்தை சீராக வைத்திருக்கிறது. அதனால்தான் இந்தகீரையை உடலுக்கும், குடலுக்கும் வளமூட்டும் கீரை என்று கூறுவார்கள்.

புளிச்சக்கீரையின் வகைகள்:

புளிச்சக்கீரையில் பச்சைத்தண்டு, சிவப்பு தண்டு புளிச்சக்கீரை என இரு வகைகள் உள்ளன.

பச்சை தண்டு வகை ஆங்கிலத்தில் Kenaf என்றும், சிவப்பு தண்டு வகையை ஆங்கிலத்தில் Roselle என்றும் அழைக்கப்படுகிறது.

இதில், சிவப்பு தண்டு வகை புளிச்ச கீரை பல்வேறு பகுதிகளில் தேநீர் தயாரிப்பதற்கு பயன்படுகிறது. மேலும், அதனை செம்பருத்தி தேநீர் அல்லது ரோசெல்லே தேநீர் என்றும் குறிப்பிடுவர்.

புளிச்சக் கீரையில் உள்ள சத்துக்கள் :

புளிச்ச கீரையில் புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவை நிறைந்துள்ளன. மேலும் பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் சி ஆகியவை இதில் நிறைந்து காணப்படுகின்றன.

புளிச்ச கீரை விதையின் எண்ணையில் பால்மிடிக் மற்றும் ஸ்டீரிக் என இரண்டு முக்கிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மேலும் இதில் நிறைவுறா கொழுப்பு அமிலம் மற்றும் லினோலிக் அமிலம் ஒலிக் அமிலமும் காணப்படுகின்றன.

புளிச்சக் கீரை நன்மைகள் :

ஸ்பாஸ்மோடிக் எதிர்ப்பு பண்புகள்:

புளிச்சக் கீரை தவர பூவின் சாற்றில் அற்புதமான ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் பண்புகள் காணப்படுகின்றன. மேலும் புளிச்சக்கீரையினை பயன்படுத்தி தயாரிக்கப்படும் தேநீர் மாதவிடாய் வலிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

இதில் உள்ள பாலிபீனால் காரணமாக ஸ்பாஸ்மோடிக் எதிர்ப்பு பண்புகள் உருவாகிறது.

பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு பண்புகள்:

புளிச்சக் கீரையை வெயிலில் உலர வைத்து, பின் அதை தண்ணீருடன் கொதிக்க வைத்து, அதிலிருந்து உருவாகும் சாறு Escherichia coli, S. aureus, Micrococcus luteus போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக சக்திவாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாட்டைக் கொண்டுள்ளதாக அமைகிறது.

How To Reduce The Cholesterol?

கொலஸ்ட்ராலை குறைக்கிறது:

பல ஆய்வுகளில் புளிச்சக் கீரையில் கொழுப்புச் சத்துக்களை குறைக்கும் பண்புகள் இருப்பதாக கூறியுள்ளனர்.

இது இருதயத்தில் வாஸ்குலர் நோய் ஏற்படுவதை தடுக்கிறது. புளிச்சக் கீரை சாறு LDL, ட்ரைகிளிசரைடு மற்றும் உடலின் மொத்த கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.

Reduce The Blood Pressure:

இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது:

சிவப்பு தண்டு புளிச்சக் கீரையில் இருந்து தயாரிக்கப்படும் கோங்குரா தேநீர் உலகின் பல பகுதிகளில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறுகின்றனர்.

மேலும் இது பாரம்பரிய மருத்துவத்தில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும் பயன்படுகிறது.

Also Read: Best Food For Thyroid Patients: தைராய்டுக்கு உதவும் பருப்புக்கீரை..!

புளிச்சக் கீரை தீமைகள் :

புளிச்சக் கீரை மிதமான அளவு சாப்பிடுவது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் கெடுதல்கள் ஏற்படும்.

ஏதேனும் உடல் நல கோளாறு உடையவர்கள் இப் புளிச்சக் கீரையினை மருத்துவரின் ஆலோசனை படி உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

மேலும், பித்த சம்பந்தமான நோய்களை உடையவர்கள் இந்த கீரையை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இது பித்ததை அதிகப்படுத்தும் குணமுடையது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *