News Tamil OnlineToday Tamil News Onlineஇயற்கையோடு வாழ்வோம்கீரைகள்

Mudakathan Keerai Benefits: அனைத்து நோய்களையும் தீர்க்கும் கீரை..!

Mudakathan Keerai Benefits: அனைத்து நோய்களையும் தீர்க்கும் கீரை..!

முடக்கத்தான் ஒரு கொடி வகையைச் சேர்ந்த மருத்துவ மூலிகை கீரையாகும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது.

இதன் இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிறத்தில் இருக்கும்.

Mudakathan Keerai Benefits

உடலில் ஏற்படும் முடக்குகளை வேரறுக்கும் தன்மை இருப்பதால், இம்மூலிகை முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) எனப் பெயர் பெற்றது.

இது வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் ஏறுகொடியாக வளருகின்றன.

இதன் காய்கள் பலூன் போன்ற அமைப்பை உடையவை, அவற்றை கைகளுக்கு இடையில் வைத்துத் தட்டும்போது பட்டாசு வெடிப்பதைப் போன்ற ஒலி உண்டாக்கும். இதன் காரணமாக சிறுவர்கள் இதன் காய்களை, ‘பட்டாசுக் காய்’ என்றும் ‘டப்பாசுக் காய்’ என்றும் அழைப்பர்.

மேலும், இந்த முடக்கற்றான் மூலிகை வாயு பகவானின் மூலிகை என அழைக்கப்படுகிறது. இது உடலில் ஏற்படும் வாய்வு பிரச்சனைகளை விரட்டி அடிக்கும் அருமருந்தாகும்.

முடக்கத்தான் வேறு பெயர்கள்:

இதற்கு முடர்குற்றான், முடக்கறுத்தான் போன்ற வேறு பெயர்களும் உண்டு. இதன் இலை, வேர் என அனைத்துமே மருத்துவ தன்மை கொண்டதாகும்.

முடக்கத்தான் காயின் அமைப்பு:

முடக்கத்தான் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து மூன்று தனித் தனி அறைகளைக் கொண்டதாக அமைந்திருக்கும்.

ஒவ்வொரு அறையிலும் ஒரு விதை வைத்து, அவ்வாறு ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். காயின் தோலை உறித்தால் உள்ளே மிளகளவு, பச்சை நிறமான விதைகள் காணலாம்.

காய் முற்றிய பின் பழுப்பு நிறமாக மாறிக் காய்ந்து விடும். இதை மற்ற கீரை வகைகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம். இதை தனியாக மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

Mudakathan Keerai Benefits:

சுகபிரசவம் உண்டாகும்:

முடக்கத்தான் இலையுடன் தண்ணீர் சேர்த்து, மைப்போன்று அரைத்து, சுக பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவந்தால், கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும்.

மருத்துவமனை இல்லாத கிராமங்களில் உள்ள வைத்தியர்கள் இந்த மருந்து முறையினை கையாளுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

நாள்பட்ட இருமல் குணமாகும்:

முடக்கத்தான் இலை மற்றும் வேர் இரண்டையும் நீரில் கலந்து மூன்று வேளை அறுபது மில்லி வீதம் தொடர்ந்து சில நாட்கள் குடித்து வந்தால் இருமல் சரியாகும்.

மாதவிலக்கு பிரச்சனை தீரும்:

பெண்கள் மிகவும் அசௌகரியாமாக உணரும் பிரச்சனைகளில் ஒன்று மாதவிடாய் பிரச்சனை.

சில பெண்களுக்கு மாதந்தோறும் சரியாக மாதவிலக்கு ஏற்படாது மற்றும் அடிவயிற்றில் மிகுந்த வலி உண்டாகும்.

அத்தகைய பிரச்சனை உள்ளவர்கள் முடக்கத்தான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு பிரச்சனை சரியாகும் மற்றும் அடிவயிற்று வலி குறையும்.

வாய்வு பிரச்சனை சரியாகும்:

மூன்று நாட்களுக்கு ஒரு முறை முடக்கத்தான் இலையில் ரசம் காய்த்து குடித்து வந்தால் உடலிலுள்ள தேவையற்ற வாயு வெளியேறி விடும்.

கண்வலி குணமாக:

முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து அதனுடன் நெய் கலந்து வதக்கி சாப்பிட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் எல்லாம் குணமாகும்.

முடக்கத்தான் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி அகலும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.

மேலும், முடக்கத்தான் கீரையின் துவையலை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.

How To Get Rid Of Knee Pain Fast?

மூட்டு வலியை அகற்றும் முடக்கத்தான்:

முடக்கத்தான் கீரையானது மூட்டு வலி, முடக்கு வாதம் , கைகால் குடைச்சல் போன்றவைகளை தீர்க்கும் மருந்தாக உள்ளது.

இதன் இலைகளை பறித்து ரசம் வைத்து சாப்பிடலாம். மேலும் தோசை மாவில் முடக்கத்தான் இலைகளை கலந்து தோசையாக ஊற்றியும் உண்ணலாம்.

முடக்கத்தான் கீரையினை நம் வீட்டின் அருகிலே கூட பார்க்கலாம். எளிதில் கிடைக்கும் ஒரு அற்புதமான மூலிகை ஆகும்.

நாம் மூட்டு வலி , கை கால் வலி என்று மருத்துவரிடம் செல்வதை விட வாரம் ஒரு முறை இதை சாப்பிட்டாலே மூட்டு சம்பந்தப்பட்ட நோய்கள் எல்லாம் பறந்து போகும்.

Also Read: Andrographis Paniculata Benefits: எவ்வித காய்ச்சலையும் குணப்படுத்துமாம் நிலவேம்பு..!

Foods To Reduce Constipation:

மலச்சிக்கல் குணமடையும்:

முடக்கத்தான் இலைகளை, பறித்து வெள்ளைப் பூண்டு ஐந்து, அரைத் தேக்கரண்டி அளவு மிளகு சேர்த்து இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

பின் அந்த கஷாயத்தை வடிகட்டி தினமும் விடியற் காலையில் குடித்தால் பலமுறை கழிவு வெளியேரும்.

இதனால் வயிற்று பூச்சிகள் அழிந்து, வயிறு சுத்தமாகும். மேலும், மலச்சிக்கல் பிரச்சனை முற்றிலும் தீரும்.

இதன் விளைவால் அதிகமாக பேதி வெளியேறினால் ஒரு எலுமிச்சை பழச்சாறு குடித்தால் போதும் பேதி உடனே நின்று விடும்.

எனவே, இதன் விளைவினை அறிந்து உணவில் அளவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *