அறிவியல்செய்திகள்தொழில்நுட்பம்

What is Crude Oil: உங்களுக்கு தெரியுமா? கச்சா எண்ணெய் இப்படி தான் உருவாகிறது..!

What is Crude Oil: உங்களுக்கு தெரியுமா? கச்சா எண்ணெய் இப்படி தான் உருவாகிறது.

கச்சா எண்ணெய் ஒரு தனிப்பட்ட, மிகவும் பயனுள்ள பொருள் ஆகும்.

What is Crude Oil

What is Crude Oil:

கடல் வாழ் உயிரனங்கள், தாவரங்கள், விலங்குகள் இறந்து அவைகளின் மேல் மணல் பரவி, கொஞ்சம் கொஞ்சமாக மணல் மேடுகளாகி, வண்டல் பாறைகளாக மாறுகின்றன.

இறந்த உரினங்களுக்கும், மணல் மற்றும் வண்டல்களுக்கும்(Sediments) இடையே  வேதிபிணைப்பு  (Chemical reaction) நடைபெறும்.

பின்பு மேற்பாறைகளின்  அழுத்தமும், கீழே புவியின் வெப்பமும் சேர்ந்து, பாறைகளுக்கு இடையே ஹைட்ரோகார்பன்ஸ்(Hydrocarbons)யை  உருவாக்குகிறது.

புவியின் வெப்பம் 260 டிகிரி இருந்தால், ஹைட்ரோகார்பன்ஸ், இயற்கை எரிவாயுவாக(Gas) உருவாகும்.

அதே போன்று வெப்ப நிலை 177 டிகிரி கீழ் இருந்தால் கச்சா எண்ணெய்யாக(Crude Oil) உருவாகும்.

சரியான அளவிலான வெப்பநிலையை பொறுத்தே இயற்கை எரிவாயும், கச்சா எண்ணெய்யும் உருவாகிறது.

இவை எல்லாம் நடக்க கிட்ட தட்ட 3 மில்லியன் முதல் 300 மில்லியன் வருடங்கள் ஆகும்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பெருங்கடல்களாக இருந்த உலகின் சில பகுதிகளில் கச்சா எண்ணெய் அதிகமாக இருந்தது.

பண்டைய காலங்களில் கரிம பொருள்கள் ஆழமாக புதைக்கப்பட்டன.

அந்த கரிமப்பொருள்களே அதிக வெப்பநிலைக்கு எண்ணெயாக மாற்றம் பெறுகின்றன.

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்புகள் வெனிசுலாவில் கிட்டத்தட்ட 300.9 பில்லியன் அளவில் உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.

266.5 பில்லியன் பீப்பாய்களுடன் சவூதி அரேபியா தோராயமாக இரண்டாவது இடத்தில் உள்ளது.

கனடா 169.70 பில்லியன் எண்ணைக்கிடங்குகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

ஒரு ‘பீப்பாய்'(barrel) என்பது 42 அமெரிக்க கேலன்கள் அல்லது 159 லிட்டர்கள் ஆகும்.

பீப்பாய் என்றால் உருளை வடிவ பாத்திரம் ஆகும்.

1 பீப்பாய் = 42 கேலன்கள்

1 கேலன் = 3.785 லிட்டர்.

ஒரு பீப்பாய் ஏறத்தாழ 159 லிட்டர்(liter) அளவு உடையது.

கச்சா எண்ணெய் பிரித்தெடுக்கப்படும் முறை:

இந்த பூமியில் பல்லாயிரம் அடியில் இருக்கும் கச்சா எண்ணெய்யை கண்டறிவது கடினம் ஆகும்.

Geologist:

ஜியோலஜி(Geology) அதாவது புவியியல் படித்த வல்லுநர்கள், செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் பூமியின் மேற்பரப்பை வைத்தே, பூமிக்கடியில் இருக்கும் பாறைகளை பற்றி கணக்கிடுவர்.

எந்தெந்த பாறைகளின் இடையே ஹைட்ரோகார்பன்ஸ் இருக்கும் என்பதை கணக்கிட்டு அடுத்த கட்டமாக நில அதிர்வு ஆய்வை மேற்கொள்வர்.

அடுத்தக்கட்டமாக பூமிக்கு அடியில் ஒரு குறிப்பிட்ட ஆழத்தில் டயனமைட் வெடி பொருளை வெடிக்க வைப்பர். அதன் மூலம் ஏற்படும் ஒலி அலைகள், கீழ் இருக்கும் பாறைகளின் மேல் மோதி reflect ஆகும்.

இந்த ஒலிகளை ஜியோபோன்ஸ்(Geophones) கருவியின் மூலம் பதிவு செய்யப்படும்.

பதிவு செய்ய பட்ட ஒலி அலைகளை, தொழில்நுட்பத்தின் மூலம் எலக்ட்ரிக் இம்பல்ஸ் அதாவது மின்சமிக்கைகளாக (Electric Signal)மாற்றப்படும்.

மின் சமிக்கைகள் மூலம் ஹைட்ரோகார்பன் எங்குள்ளது என்பது   தெரியவரும்.

இது தெரிந்ததும் அடுத்து ஆழ்துளை இடும் பணி ஆரம்பமாகும்.

அந்தந்த நாட்டின் அரசாங்கமே ஆழ்துளை இடும் பணியை செய்யும்.

ஆழ்துளை இடுவதில் Off -Shore எனப்படும் கடலுக்கடியில் ஆழ்துளை இட்டு கச்சா எண்ணெயை எடுக்கும் பணி மற்றும் On-Shore எனப்படும் நிலத்திற்கு அடியில் ஆழ்துளை இட்டு கச்சா எண்ணெயை எடுக்கும் பணி என இரண்டு வகைகள் உண்டு.

ஆழ்துளை இட்டு முடித்தபின், பூமிக்கடியில் இருக்கும் அழுத்தத்தின் காரணமாக, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு, உற்பத்தி குழாயின் மூலம் மேலே வந்துவிடும்.

Also Read: China Long March Rocket: லாங் மார்ச் 8 ராக்கெட்டை இரண்டாவது பணிக்கு தயார் செய்யும் சீனா..

சில சமயங்களில் பூமிக்கடியில் அழுத்தம் போதுமான அளவு இல்லாத நிலையில், மேலிருந்து அழுத்தத்தை உருவாக்கி அல்லது தூண்டி, கச்சா எண்ணெய்(crude oil) மற்றும் எரிவாயு எடுக்கப்படும்.

பூமியில் இருந்து எடுத்த கச்சா எண்ணெய்யை உடனே  பயன்படுத்த முடியாது.

இதை பயன்படுத்த பல்வேறு செயல்முறைகளை கையாள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *