News Tamil OnlineTamil Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

How to Lose Weight Fast: கொள்ளுப்பயறை முளைகட்டிச் சாப்பிட்டால்…

How to Lose Weight Fast: கொள்ளுப்பயறை முளைகட்டிச் சாப்பிட்டால்…

கொள்ளுப்பயறை(Sprouts) முளைகட்டிச் சாப்பிட்டால் வைட்டமின் ஏ,பி,சி போன்ற சத்துகள் கிடைக்கும்.

How to Lose Weight Fast

How to Lose Weight Fast:

கொள்ளு இது ஒருவகை பயறு வகையாகும். இதற்கு கொள், காணம், முதிரைஎன்று  வேறு பெயர்களும் உண்டு.

கொள்ளுப்பயறை(Sprouts) முளைகட்டிச் சாப்பிட்டால் வைட்டமின் ஏ,பி,சி போன்ற சத்துகள் கிடைக்கும்.

இது தட்டையாக பழுப்பு மற்றும் செம்மண் நிறத்திலும் காணப்படும். இதற்கு ஆங்கிலத்தில் ‘ஆர்ஸ் கிராம்’ (Horse Gram) என்று பெயர். அதற்குக் காரணம் இந்த பயறு குதிரைக்கு தீவணமாகக் கொடுக்கப்பட்டது.

இந்த கொலஸ்ட்ரால், தொப்பை, உடல் பருமன் போன்றவற்றைச் சரிசெய்ய உதவும்.

நரம்பு, எலும்புக்கு ஊட்டமளிக்கும். மூட்டுவலியால் அவதிப்படுவர்கள் முளைகட்டிய கொள்ளுப்பயறைச் சாப்பிடுவது நல்லது.

பல்வேறு பயன்கள்:

முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும். மூட்டுவலி தீரும்.

கொள்ளு பழங்காலத்திலிருந்தே நம்முடைய நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் இது அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

இதனுடைய தாயகம் தெற்காசியா மற்றும் வெப்பமண்டல ஆப்பிரிக்கா என்று கருதப்படுகிறது.

இது, உடல் உஷ்ணம், தொப்பை, உடல்பருமனை குறைக்கிறது. மூட்டுவலியால் அவதிப்படுவர்கள் சாப்பிடுவது நல்லது.

இது மனிதன் மற்றும் விலங்களுக்கு ஆரோக்கிய உணவாகும்.

கொள்ளு உடலில் உள்ள கொழுப்பினைக் குறைக்கும் என்பதை நிரூபிக்கும் விதமாக “இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு” என்ற பழமொழி அமைகிறது.

அந்த வகையில் கொள்ளின் பயன்களை பற்றி மேலும் அறிந்துகொள்வோம்.

செரிமானக் கோளாறுகளை நிறைவு செய்ய:

கொள்ளில் நார்ச்சத்து அதிகம், இவை நம் உடலுக்கு சீரான செரிமானம் நடைபெற உதவுகிறது.

கொள்ளு, குடலில் வாழும் ஒட்டுண்ணிகளை அழித்து செரிமானத்தை ஊக்குவிக்கிறது.

விழிவெண்படல அழற்சியை சீர்செய்ய:

பொதுவாக கண் விழிகளின் வெண்படலத்தில் அழற்சி ஏற்பட்டால்  பன்னீரைக் கொண்டு கண்ணை கழுவுவதை தான் வழக்கமாக கொண்டிருப்பர்.

இவ்வாறு செய்வதற்கு பதிலாக முதல் நாள் இரவு கொள்ளினை ஊற வைத்து அடுத்த நாள் காலையில்  ஊற வைத்த நீரில் கண்ணினைக் கழுவினால்  அழற்சி மற்றும் கண்எரிச்சல் சீக்கிரம் சரியாகும்.

இதற்கு காரணம், ஊற வைத்த நீரில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ஆகும். எனவே கண் எரிச்சல் உள்ளவர்கள்  நாள் ஒன்றுக்கு மூன்று முறை கண்ணினை இந்நீரினைக் கொண்டு கழுவினால் சரியாகிவிடும்.

ஆரோக்கியமான உடல் இழப்பிற்கு:

கொள்ளில் உள்ள நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வினை கொடுப்பதுடன்,  உடலினை உற்சாகமாகவும் வைக்க உதவுகிறது.

இதனால் அதிக உணவு உட்கொள்வது தடைசெய்யப்பட்டு உடல்எடை அதிகரிக்காமல் பாதுகாக்கப்படுகிறது.

பின், சிறுகுடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியேற்றி சீரான உடல் வளர்ச்சிதை மாற்றத்திற்கு வழி ஏற்படுத்துகிறது.

மலச்சிக்கல் மற்றும் மூலப்பாதிப்பினைத் தடுக்க:

பொதுவாக மலச்சிக்கல்  உணவில் நார்ச்சத்து குறைபாடு, தண்ணீர் குறைபாடு, தாது உப்புகள் குறைபாடு, மனஅழுத்தம் போன்ற காரணங்களால் ஏற்படும்.

கொள்ளினை ஊற வைத்து அதனை உண்ணும்போது அதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் மூலப்பாதிப்பிற்கும் நிவாரணம் அளிக்கிறது.

சருமபிரச்சினைகளுக்கு சிறந்தது:

சருமத்தில் உண்டாகும் தடிப்புகள், கொப்புளங்கள் போன்றவற்றிற்கு ஊறவைத்த கொள்ளினை அரைத்து பூசினால் நிவாரணம் கிடைக்கும்.

கொள்ளில் இருக்கும் ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள், தாதுஉப்புக்கள் சருமத்தைப் பாதுகாக்கிறது.

எனவே கொள்ளினைக் கொண்டு பொலிவான சருமத்தைப் பெறலாம்.

சிறுநீரகக் கற்களை வெளியேற்றும்:

சிறுநீரகக் கற்கள் கால்சியம் ஆக்ஸலேட்டுகளால் உருவாகின்றன, இவற்றை கொள்ளில் உள்ள இரும்புச் சத்து மற்றும் பாலிபீனால்கள் போன்ற சத்துக்கள் வெளியேற்ற உதவுகின்றன.

கொள்ளினை ஊறவைத்து தண்ணீரையும், முளைகட்டியாகவும் சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் வெளியேறும்.

குறிப்பு:

கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள், அதிக பித்த உற்பத்தி உள்ளவர்கள், அல்சர் தொந்தரவு உள்ளவர்கள் முளைகட்டிய கொள்ளினை உண்பதை தவிர்ப்பது நலம்.

Also Read: Multani Mitti பயன்படுத்துவதால் கிடைக்கும் Benefits..!

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொள்ளுவை உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.