Causes Of Cancer: பெண்கள் Hair coloring செய்து புற்றுநோயை உண்டாக்குமா..?
Causes Of Cancer: பெண்கள் Hair coloring செய்து புற்றுநோயை உண்டாக்குமா..?
இளநரையை மறைக்க பெண்கள் பயன்படுத்தும் நிரந்தர hair coloring செய்து கொள்வது பெண்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் என சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

Causes Of Cancer:
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வு BMJ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் 1,17,200 பெண்களை ஆய்வு செய்துள்ளது. அந்த பெண்களின் குடும்ப வரலாற்றிலும் யாருக்கும் புற்றுநோய் என்பதே இல்லை.
இருப்பினும் அவர்களுக்கு புற்றுநோய் அறிகுறி உண்டாகியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆய்வில் இந்த நிரந்தர ஹேர் டை பயன்படுத்துவதே காரணம் என அறியப்பட்டுள்ளது.
அதுவும் மிகவும் மென்மையான முடி கொண்ட பெண்களுக்கு இந்த ஆபத்து இன்னும் கூடுதலாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஹேர் டையானது, கருப்பை-யையும் பாதிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
எனவே அடர்த்தி நிறத்தை உண்டாக்கும் ஹேர் டைகளில் அதிக பாதிப்பை உண்டாக்கும் கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது அவற்றில் தீங்கு விளைவிக்கக் கூடிய அமோனியா, பெராக்சைட், ஃபெனைலென்டைமின் (phenylenediamine), டை அமினோபென்சீன் (diaminobenzene),டோல்யுஎன் -2 toluene-2, 5-டையாமின் (5- diamine) மற்றும் ரிசோர்சினோல் (resorcinol) போன்றவை பயன்படுத்தப்படுவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் தீவிர ஆபத்தை உண்டாக்கக் கூடியது. அதுவும் தோல், கண்கள், நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும்.
Also Read: Avoid Drinking Water: எப்போதெல்லாம் நாம் கண்டிப்பாக தண்ணீர் குடிக்கக்கூடாது..!
தலைமுடி வேர்கள் எரிச்சல், தலைமுடி உதிர்தல் மட்டுமல்லாது தீவிர புற்றுநோயையும் உண்டாக்கும் என கூறப்பட்டுள்ளது.
எனவே முடிந்த வரை பெண்கள் hair coloring செய்வதை தவிர்த்தல் ஆரோக்கியத்திற்கு நல்லது.