Foods To Lose Weight: உங்கள் வீட்டிற்கு மூங்கில் அரிசியை கொண்டு வாருங்கள்..!
Foods To Lose Weight: உங்கள் வீட்டிற்கு மூங்கில் அரிசியை கொண்டு வாருங்கள்..!
பல தலைமுறைகளாக கொடைக்கானல், கன்னியாகுமரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள காடுகளில் பழங்குடி சமூகங்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் மூங்கில் அரிசி நவீன சமையலறைகளில் ஊடுருவி வருகிறது.

மூங்கில் அரிசி என்பது காடுகளில் விளைகின்ற மூங்கிலின் பூபகுதியில் இருந்து சேகரிக்கப்படும் விதையாகும்.
மூங்கில் அரிசி என்பது அதிகபடியான ஊட்டச்சத்துகள் மற்றும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இது நாம் உண்ணும் அரிசிக்கு மாற்றாக சமைத்து உண்ண ஏற்றதாக உள்ளது.
அதிக நெருக்கமான காடுகளில் வளரும் மூங்கிலில் இருந்து சேகரிக்கப்படும் அரிசி என்பது மிக குறைந்த அளவிலேயே கிடைக்கின்றது. இதனை காடுகளில் வாழும் பழங்குடியினர் சேகரித்து நகரப்பகுதிகளுக்கு வழங்கி வருகின்றனர்.
மேலும் நன்கு நீண்ட ஆண்டுகள் வளர்ந்த மூங்கிலில் மட்டுமே பூக்கள் பூக்கும். அதிலிருந்து மட்டுமே மூங்கில் அரிசியை சேகரிக்க முடியும்.
இனிப்பு சுவையுடன் கூடிய மூங்கில் அரிசி உறுதியானது என்பதுடன், ஊட்டச்சத்து நிறைந்த அரிசியாகும்.
உடலில் உள்ள வாத, பித்த, கப தோஷங்களை நிவர்த்தி செய்வதுடன் உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்டது. அதாவது சிறுநீர் வழியே உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் வகையில் இதன் செயல்பாடு அமைகிறது.
Bamboo rice:
கோதுமை தானியங்களைப் போலவே தோற்றமளிக்கும் இந்த சத்தான, மெல்லிய அரிசி அதன் சுவைக்கு மட்டுமல்ல, அதன் அற்புதமான ஊட்டச்சத்து மதிப்புகளுக்கும் தனித்துவமானது.
கடினமான கழுத்து வலி, முதுகுவலி மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுர்வேதத்தால் பரிந்துரைக்கப்படுகிறது.
மூங்கில் அரிசியில் கார்போஹைட்ரேட் அளவு என்பது மிக முக்கியமான சத்தாக உள்ளது. அதாவது ஒரு கப் மூங்கில் அரிசியில் மட்டுமே 34 கிராம் அளவுக்கு கார்போஹைட்ரேட்ஸ் இருக்கின்றது.
விளையாட்டு செயல்பாடுகள் கொண்ட நபருக்கு தேவையான அதிகபட்ச கார்போஹைட்ரேட்ஸ் வழங்குகிறது.
ஒரு கப் மூங்கில் அரிசியில் சுமார் 3 கிராம் அளவு புரதசத்து உள்ளது. இந்த புரோட்டீன் சத்து மூலம் உடல் செல்கள் மற்றும் தசை கட்டமைப்புகளை சரிசெய்ய முடியும்.
கொழுப்பு சத்து எனும்போது மூங்கில் அரிசியில் கொழுப்பு சத்தே இல்லை. அதனால் உணவு கட்டுப்பாடு மேற்கொள்பவர்கள் இந்த அரிசி உணவை உட்கொண்டால் சிறப்புற இருக்கும்.
மூங்கில் அரிசி – உடலுக்கு உறுதி:
மூங்கில் அரிசியை வாரத்தில் இரண்டு முறை பொங்கலாகவோ அல்லது கஞ்சியாகவோ செய்து சாப்பிட்டு வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகிது. இதனால் உடல் எடை மற்றும் தொப்பை குறைய ஆரம்பிக்கும்.
இந்த மூங்கில் அரிசியை தினமும் காலையில் கஞ்சியாக செய்து உட்கொள்வதன் மூலம் குழந்தையின்மை பிரச்சினை தீர்வாகிறது.
மூங்கில் அரிசியை நாம் சாதம் வடித்து வைக்க முடியாது. பெரும்பாலும் கஞ்சி போன்றுதான் செய்து சாப்பிடுவர்.
அதுபோல் மூங்கில் அரிசியை கொண்டு இட்லி மாவு தயாரித்து இட்லி, தோசை போன்ற உணவுகளை செய்யலாம்.
குழைய வேகவைத்தே மூங்கில் அரிசியை உணவில் சேர்க்க முடிகிறது என்பதால் விதவிதமான பாயசங்கள் செய்யும்போது மூங்கில் அரிசியை பயன்படுத்திடலாம்.
Also Read: Knuckle cracking side effects: அடிக்கடி நெட்டி முறிப்பது சரியா..?
மேலும் . மூங்கில் அரிசி மாவை கொண்டு அதிரசம், மாவிளக்கு மற்றும் விதவிதமான காரங்கள் செய்து சாப்பிடலாம்.
மூங்கில் அரிசி உணவை சாப்பிடும்போது உடலுக்கு உறுதி கிடைப்பதுடன் அதிக சுறுசுறுப்புடன் உடல் உறுப்புகள் செயல்படவும் முடிகிறது.