Today Tamil News Onlineஇயற்கையோடு வாழ்வோம்சமையல் குறிப்புகள்செய்திகள்

Body Cooling Drink: உடலுக்கு குளிர்ச்சியூட்டும் அரியவகை மங்குஸ்தான் கற்றாழை ஜூஸ்..!

Body Cooling Drink: உடலுக்கு குளிர்ச்சியூட்டும் அரியவகை மங்குஸ்தான் கற்றாழை ஜூஸ்..!

நம் உலகில், ஒவ்வொரு நாட்டின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப செடிகள், மரங்கள் வளர்கின்றன.

Body Cooling Drink

Also Read: Benefits Of Carrot Juice: கோடைவெயிலை விரட்டியடிக்க கேரட் ஜூஸ்யை இந்த மாதிரி குடிச்சி பாருங்க! சோர்வு பறந்து போகும்..!

How To Cool Our Body ?

அத்தகைய நிலையை கொண்ட மரங்கள் மனிதர்கள் உண்பதற்கு சுவையான பழங்களை தருகின்றன.

அந்த வகையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விளையும் பழமாகவும், மக்களுக்கு சாப்பிடுவதற்கு அதிகம் விரும்பத்தக்க ஒரு பழமாக மங்குஸ்தான் பழம் இருக்கிறது.

இந்த கோடைக்காலங்களில் நம் உடல் குளிர்ச்சியாக இருப்பதற்கு இந்த மங்குஸ்தான் கற்றாழை ஜூஸ் உதவுகிறது.

இந்த ஜூஸ் செய்ய தேவையான பொருள்களை காணலாம் வாருங்கள்.

தேவையானவை:

மங்குஸ்தான் – 1/4

கற்றாழை – 2 ஸ்பூன் அளவு  

தேன் – தேவைக்கு ஏற்ற அளவு

 நீர், ஐஸ் கட்டி – தேவைக்கேற்ப

முதலில் மங்குஸ்தானை உரித்து உள்ளே உள்ள பழத்தை மட்டும் எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து கற்றாழையை வெட்டி உள் இருக்கும் சதையை எடுத்து நன்கு கழுவி வைக்க வேண்டும்.

மிக்சியில் மங்குஸ்தானையும், கற்றாழையையும், தேனையும் சேர்த்து நன்கு அரைத்து பின் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐஸ்கட்டி போட்டு குடித்து பாருங்கள்.

வெயிலின் தாக்கம் தெரியாத அளவிற்கு உடலை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்ளும்.

Also Read : Summer Juice Recipes: வெயில் காலத்தில் உடலுக்கு சக்தியை அள்ளித்தரும் தரும் பல வகை காய்கறி ஜூஸ்கள்..!

mangosteen benefits :

இதன் பயன்கள்:

1. உடலுக்கு குளிர்ச்சியை தந்து, அதில் உள்ள வைட்டமின் சி உடலுக்கு சரியான நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கிறது.

2. உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது. எனவே அனைத்து வயதினரும் மங்குஸ்தான் பழங்களை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது.

3. சராசரியான உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

4. நம் உடலில் ஏற்படும் கொலஸ்ட்ரால் பிரச்சனையை போக்க மங்குஸ்தானில் உள்ள பெக்டின் எனப்படும் நார்ச்சத்து உதவுகிறது.

5. கற்றாழை நம் உடலில் ஹார்மோன் சுரப்பதை சீர் படுத்துகிறது. மேலும் அஜீரண கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.

6. மங்குஸ்தான் சரும வறட்சி, வயதான தோற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

7. சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த உதவுகிறது, கல்லீரல்வீக்கத்தை சரி செய்ய உதவுகிறது.

8. தினமும் வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடிப்பதால் உடலில் உள்ள பாதிக்கப்பட்ட திசுக்கள் எல்லாம் புத்துணர்ச்சியை பெற்று சீராக வைத்துக்கொள்ளும்.

9. மங்குஸ்தான்பழங்களில், நம்  கண்களின் பார்வை திறன் தெளிவாக இருக்க தேவையான வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகம் இருக்கின்றன.

Also Read: Panam Kilangu Benefits: பனங்கிழங்கு சாப்பிடுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு கிடைக்கும் பலன்.!

10.மங்குஸ்தான் பழம் அதிக சத்து வாய்ந்தது. இந்த ஜூஸ் நம் உடல் சருமத்தை பாதுகாக்கும். மேலும், நம் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. கற்றாழை உடம்பை மிகவும் குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.