Facts About Sugar : செயற்கை இனிப்பான பானங்களால் இதய பிரச்சனைகள் ஏற்படுகிறதா..?
Facts About Sugar : செயற்கை இனிப்பான பானங்களால் இதய பிரச்சனைகள் ஏற்படுகிறதா..?
சர்க்கரையுடன் கூடிய இனிப்பான பானங்கள் மற்றும் உணவுகள் கார்டியோ-வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

Facts About Sugar :
2019ம் ஆண்டு ஆய்வில், ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேற்பட்ட சர்க்கரை பானங்களை கண்ணாடி பாட்டில்களிலோ அல்லது கேன்களிலோ உட்கொண்ட பெண்களில் அகால மரணத்திற்கு 63% ஆபத்துகள் ஏற்படுவதாகவும்,
இதே இரண்டு முறைகளுக்கு மேல் உட்கொண்ட ஆண்களுக்கு 29% ஆபத்து ஏற்படுவதாகவும் கூறுகிறது.
அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியின் ஜர்னலில் திங்களன்று வெளியிடப்பட்ட புதிய ஆராய்ச்சி, 100,000க்கும் மேற்பட்ட, வயது வந்த பிரெஞ்சு தன்னார்வலர்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்தது.
தன்னார்வலர்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அவர்கள், பானங்களை பயன்படுத்தாதவர்கள்,
குறைந்த அளவு நுகர்பவர்கள் மற்றும், உணவு அல்லது சர்க்கரை பானங்களை அதிகம் நுகர்பவர்கள் என வகைப்படுத்தப்பட்டனர்.
இவர்களை செயற்கையாக இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்களை குடிக்காத மக்களுடன் ஒப்பிடும்போது, அதிக நுகர்பவர்கள் எந்த நேரத்திலும் இதய நோய்க்கு 20% பாதிப்படைய வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சர்க்கரை பானங்களை அதிகம் பயன்படுத்தாத மக்களிடம் ஒப்பிடும்போது இதேபோன்ற முடிவுகள் தான் இருந்தது, என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
2019ல் எடுக்கப்பட்ட மற்றொரு ஆய்வில், ஒரு நாளைக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செயற்கை இனிப்பு பானங்களை குடிப்பதால் பக்கவாதம், மாரடைப்பு மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களின் இறப்பு ஆகியவவை நிகழ்வதாக கூறுகின்றனர்.
Health issue இதய நோய் அல்லது நீரிழிவு நோய் இல்லாத பெண்கள் மற்றும் பருமனான பெண்களுக்கு அபாயங்கள் அதிகமாக ஏற்படுகிறது.
இயல்பாக நமது நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் இனிப்பு சுவையை சாப்பிட வேண்டுமென்று பரிந்துரைக்கும் அதற்கேற்ப நம் மூளையும் உடனடியாக செயல்பட்டு இனிப்பு கலந்த உணவு பொருட்களை உண்ணுமாறு நமது நாக்கிற்கு கட்டளையிடும்.
Also Read: Side effects காய்கறிகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் தெரியுமா..?
அப்போது நீங்கள் குறைந்த அளவிலான இனிப்பு பொருட்களை சாப்பிட்டும் சிறிது நேரம் கழித்து இனிப்பு கலந்த சத்தான பானங்களை அல்லது பழச்சாறுகளை அருந்துவதன் மூலம் பின்னர் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க முடியும்.
வெளியில் கடைகளில் கிடைக்கும் பானங்களை அருந்துவதை தவிர்த்து வீட்டிலேயே பழச்சாறுகளை தயாரித்து பருகுவது மிகவும் உகந்தது.