இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Omega 3 Benefits: உடல் நலனை காக்கும் மத்தி மீனில் இருக்கும் நன்மைகள்..!

Omega 3 Benefits: உடல் நலனை காக்கும் மத்தி மீனில் இருக்கும் நன்மைகள்..!

வாரத்தில் ஒரு நாள் நாம் மத்தி மீனை சாப்பிட்டால், நோய்கள் எல்லாம் நம்மிடம் இருந்து தள்ளியே நிற்கும்.

Mathi fish benefits - newstamilonline

Omega 3 Benefits:

பொதுவாக வாரத்தில் ஒரு முறையாவது அசைவ உணவை நாம் எடுத்துகொள்ளவேண்டும்.

அசைவ உணவு என்று கூறும் வகையில் கோழி, ஆடு போன்றவற்றின் இறைச்சியை விட மீன் உணவை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

மீன் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு மிகச்சுவையான உணவாகும்.

அதிலும் புதிய தூய்மையான(Fresh), மீனில் உள்ள சுவை வேறு எதிலும் கிடைக்காது.

மீன் என்று கூறும் வகையில் எந்த மீனில் அதிக சத்துக்கள் உள்ளது.எந்த மீன் உடலுக்கு மிகவும் நல்லது என்று சந்தேகமும் வரும்.

மீன்களில் மிகவும் குறைவான விலையில் கிடைப்பது நெத்திலி மீனும், மத்தி மீனும் தான்..

இதன் விலை குறைவு என்பதற்காக இதன் சுவையில் குறைவு இருக்கும் என்று நினைத்து விட வேண்டாம். இது சுவை மிகுந்தது ஆகும்.

மத்தி மீன்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இப்பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

மேலும் தோல்நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும்.

நம் செல்களின் செயல்பாட்டிற்கு தேவையான வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து மத்தி மீனில் உள்ளது.

மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது. மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது

சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.

மேலும் அதிலுள்ள பாஸ்பரஸ் சத்து எலும்புகளுக்கு வலிமை தருகிறது.

மத்தி மீனில் வைட்டமின் பி 12 உள்ளது. இது உடலில் ஹோமோசைஸ்டீனின்(homocysteine) அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

கால்சியம் மாத்திரைகள் மத்தி மீனின் செல்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம்:

இந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும்.

மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது அதை உட்கொள்ளும் வயதானவர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கிறது.

தொடர்ந்து நாம் மீன் உண்ணுவதால் எலும்புத்தேய்வு, சொறிச்சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றை குறைக்க வழி செய்கிறது.

பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும்கூட மீன் உணவு பயன்படுகிறது.

மேலும் குழந்தைகளை தாக்கும் ஆஸ்துமா நோயிலிருந்து விடுபட மீனை தங்கள் சாப்பாட்டில் அதிக அளவு எடுத்துகொண்டால் போதும் இதனால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

மீன் உணவு மட்டுமே ஆரோக்கிய வாழ்விற்கான தனிச்சிறப்பு வாய்ந்த ஓர் முக்கிய மாமிச உணவாகும்.

Also Read: Neerkatti home remedies: கருப்பை நீர்கட்டி பிரச்சனையை சரிசெய்யும் இயற்கை வழிகள்..!

தொடர்ந்து மீன் உட்கொள்ளுவதால் அறிவாற்றல் அதிகரிக்கும். மேலும், பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளைத் தவிர்க்கவும் இது வழிசெய்கிறது

மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.