Immunity booster: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேதிக் பானம்..!
Immunity Booster: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேதிக் பானம்..!
ஆயுர்வேதம் இந்தியாவின் பழமையான வைத்திய முறைகளுள் ஒன்று. இந்தியாவில் காணப்படும் ஏகப்பட்ட மூலிகைகளை கொண்டு நோய்களை விரட்டும் அற்புத மருத்துவம்.
ஏனெனில் நம் நாட்டில் காணப்படும் ஒவ்வொரு மூலிகைகளிலும் அதன் இலைகள், பட்டைகள் என எல்லாவற்றிலும் மருத்துவ குணம் பொதிந்துள்ளது.

கொரோனா நோயை முற்றிலுமாக இன்னமும் குணப்படுத்த முடியவில்லை. ஆனால் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் அதை நாம் தடுக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
சுகாதாரத்தை கடைபிடிப்பது, நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, சமூக தூரம் கடைபிடிப்பது போன்றவற்றின் மூலம் இந்த கொரோனாவை தடுக்க முடிகிறது.
எனவே இந்த தொற்று காலத்தில் நம் நோயெதிரிப்பு சக்தி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுகள் உட்கொண்டால் மட்டும் போதாது.
இயற்கையாகவே உங்க நோயெதிர்ப்பு சக்தியை பூஸ்ட் செய்ய சில ஆயுர்வேத பானங்கள் கிடைக்கின்றன.
இதற்காக நீங்கள் மூலிகைகளை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே உங்க நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கும் பானங்களை தயாரிக்க முடியும்.
இதோ உங்களுக்கான எளிமையான ஆயுர்வேதிக் பானம்.

Immunity Booster:
இந்த நோயெதிர்ப்பு பானங்கள் நம் உடலில் நோயால் அழியும் செல்களை பாதுகாத்தல், வயதாகுவதை தடுத்தல், உடல் ரீதியாகவும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
இது உங்க உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நோய்களுக்கு காரணமான கிருமிகளை எதிர்த்து போராடுவதற்கு உங்க உடலை தயார் செய்கிறது. இந்த பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் போதும்.
தேவையான பொருட்கள்:
இரவில் ஊற வைத்த 10 பாதாம் பருப்பு (தோல் நீக்கியது)
இரவில் ஊற வைத்த 5 பேரீச்சம் பழம் (விதை நீக்கியது)
1 கப் பசும் பால்
1/4 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
1/8 டீ ஸ்பூன் ஏலக்காய்
1 டீ ஸ்பூன் நெய்
1 டீ ஸ்பூன் தேன்

பயன்படுத்தும் முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த பாதாம் பருப்பு, பேரிச்சம்பழம், மஞ்சள் தூள், ஏலக்காய் தூள், நெய், பால் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். 2-3 தடவை அரைத்து நன்றாக வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
Also Read: இளநீர் அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!
அரைத்த கலவையை ஒரு கிளாஸில் ஊற்றி அதில் தேன் கலந்து கொள்ளுங்கள். இதோ உங்களுக்கான நோயெதிர்ப்பு பானம் ரெடி.
பாதாம் பருப்பு, பேரீச்சம் பழம், மஞ்சள் தூள், ஏலக்காய் மற்றும் தேன் எல்லாமே அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. எனவே இந்த பொருட்கள் அடங்கிய பானத்தை குடிக்கும் போது உங்க நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.