Eating Curd Benefits: தயிருடன் எந்த உணவுகளை சேர்ப்பது ஆபத்து என்று தெரியுமா?

Eating Curd Benefits: தயிருடன் எந்த உணவுகளை சேர்ப்பது ஆபத்து என்று தெரியுமா?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று இந்த குளிர்ச்சியான தயிர்.

Eating Curd Benefits

Eating Curd Benefits:

இதை நாம் எல்லோரும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வோம்.

ஆனால் இதில் சில பொருள்களை கலந்து உண்பது ஆபத்தை உண்டாக்கும்.

உடனடியாக நமக்கு  மனதளவிலும் புத்துணர்ச்சியாக வேண்டும் என்று நினைத்தால் தயிரை விட புத்துணர்ச்சி தரும் உணவு ஏதும் இல்லை.

இவ்வகையில் தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை காணலாம்;

தயிர் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் ப்ரோ-பயோடிக் பண்புகள் அதிகம்.

நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை நம்முடைய உடல் உறிஞ்சிக் கொள்வதற்கு தயிர் உதவுகிறது.

தயிரில் வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளதால் அதை உண்பதன் மூலம் உடலில்  நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது.

இதிலுள்ள புரதம் மற்றும் கால்சியம் நம்முடைய அன்றாட புரத, கால்சியத்தின் தேவையை நிறைவு செய்ய உதவியாக இருக்கும்.

இனி எவ்வகை உணவுகளை தயிரில் சேர்க்கக்கூடாது என்பதை  அறியலாம்;

மீனும் தயிரும்:

மீன் உணவுகளை சமைக்கும்போதும் சாப்பிடும் போது எவ்வகையிலும்  அதனுடன் தயிர் சேர்த்துக் கொள்ளவே கூடாது.

“இவ் இரண்டுமே அதிக புரதங்கள் கொண்ட உணவுகள் “

எனவே, இது இரண்டும் சேரும்போது ஒருவித நச்சுத்தன்மை உடலில் ஆபத்தை உண்டாக்கும்.

அவ்வகையில் உண்ணும் போது, நம்முடைய ஜீரண மண்டலம் ஜீரணிப்பதற்கு மிகவும் சிரமப்படும்.

இரண்டையும் சேர்த்து சாப்பிடும்போது வயிற்றுப் பொருமல் உள்ளிட்ட வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

எண்ணெய் உணவுகளும் தயிரும்:

பரோட்டா, பூரி போன்ற எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளுடன் தயிரை சேர்த்து சாப்பிடும்போது அது செரிமானத்தின் வேகத்தை மெதுவாக்கும்.

உடல் சோர்வை ஏற்படுத்தி நாள் முழுக்க சோம்பலாகவே வைத்திருக்கச் செய்யும்.

எண்ணெய் உணவுகளுடன் தயிரை எப்போதும் சேர்த்து சாப்பிடக் கூடாது.

மாம்பழமும் தயிரும்:

மாம்பழம் உடல் சூட்டை அதிகரிக்கக் கூடியது.ஆனால் தயிர் குளுர்ச்சியாக்க கூடியது.

இவை இரண்டும் ஒன்றாகச் சேரும்போது வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும்.

குறிப்பாக லஸ்ஸி(lassi) போன்றவற்றில் மாம்பழத்தை சேர்த்து சாப்பிடும்போது அது தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை உண்டாக்குவதோடு செரிமானக் கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

அதுமட்டுமின்றி உடலில் நச்சுத்தன்மையை அதிகரிக்கும். குடல் பெருக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படவும்  வாய்ப்புண்டு.

தயிருடன் வெங்காயம்:

தயிர் பச்சடி என்று தயிருடன் வெங்காயத்தை சேர்த்து ஊறவைத்து எல்லா வகை உணவுக்கும் எடுத்துக் கொள்கிறோம்.

குறிப்பாக பிரியாணி போன்ற மசாலாக்கள் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளோடு சேர்த்து சாப்பிடுகிறோம். ஆனால் அது மிகவும் தவறு.

மாம்பழத்தைப் போலவே வெங்காயமும் இயற்கையாக உடல்சூட்டை அதிகரிக்கக் கூடியது.

அதனால் தயிருடன் வெங்காயத்தை சேர்த்து சாப்பிடும்போது சருமத்தில் அரிப்பு, சொரியாசிஸ் போன்ற அழற்சி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும்.

அதோடு வாயில் கெட்ட துர்நாற்றம் வீசும்.

தயிருடன் பால்:

இதைக் கேட்கும் போதே இவ்வாறு சாப்பிடுவார்களா என்று தோணுகிறதா!

நம்மில் நிறைய பேர் தயிர் சாதம் செய்யும்போது அதில் பால் நிறைய சேர்த்து, தயிருடன் கலந்து செய்வார்கள். ஆனால் அப்படி செய்யக் கூடாது.

பால் மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் மற்றும் உடல் வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Also Read: Kandankathiri Uses: முட்கள் நிறைந்த கண்டங்கத்திரியில் இவ்வளவு மருத்துவப் பயன்களா..!

ஏனெனில் இரண்டு பால் பொருட்களிலும் அதிக கொழுப்பு மற்றும் புரதம் உள்ளது. இது அதிக கலோரிகளையும் உடலில் சேர்க்கும்.

அதிக கலோரி நிறைந்த இந்த தயிரை எவ்வாறு உண்பது என்று அறிந்து உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *