இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Boiled Rice Water : சோறு வடித்த நீர் குடித்தால் உடல் எடையை குறைக்கலாமா..?

Boiled Rice Water : சோறு வடித்த நீர் குடித்தால் உடல் எடையை குறைக்கலாமா..?

எல்லோர் வீடுகளிலும் சோறு வடித்த நீர் கிடைப்பது எளிமையான விஷயம். அதை வைத்து செலவே இல்லாமல் உடல் எடையைக் குறைக்கலாம்.

Boiled Rice Water Benefits-newstamilonline

அரிசி வேக வைத்த நீரை வீட்டில் கஞ்சித் தண்ணீர் என்பார்கள். அதை சோறு வடித்ததும் சூடாக எடுத்து அதில் கொஞ்சம் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடிக்கலாம்.

Boiled Rice Water Benefits:

அவ்வாறு இதைக் குடிப்பதால் உணவு சாப்பிட்ட உணர்வு கிடைக்கும். வயிறும் நிறைவாக இருக்கும்.

சோறு சாப்பிடுவதால் 650 – 1000 கலோரிகள் அதிகரிக்கும். இதே கஞ்சித் தண்ணீர் குடிப்பதால் 150 கலோரிகள் மட்டுமே அதிகரிக்கும்.

கலோரி குறைவாக இருப்பது மட்டுமன்றி உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.

அதோடு உடலுக்கு ஆற்றல் அளிக்கும், உடல் நீர் வற்றுவதிலிருந்து பாதுகாக்கும். வயிற்றுப் போக்கு இப்படி மற்ற உடல் உபாதைகளுக்கும் உதவும்.

அரசி தண்ணீரை கண்டிஷ்னராக பயன்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது. இதை ஜப்பானியர்கள் பாரம்பரிய குறிப்பாக செய்து வருகின்றனர்.

மேலும் கஞ்சி தண்ணீர் இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கும். ஆகவே அவ்வப்போது கஞ்சி தண்ணீரைக் குடித்து வாருங்கள்.

சாதம் வடித்த கஞ்சியில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.

வடித்த கஞ்சியில் லேசாக உப்பு போட்டு குடித்தால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் சுலபமான நீங்கும். அன்றய நாள் முழுவதும் மிக புத்துணர்சி கிடைக்கும்.

உடலில் இருக்கும் வெப்பத்தை தணிந்து உடலை மிககுளிர்ச்சி அடைய செய்யும் இதனால் உடல் வெப்பத்தால் வரக்கூடிய எல்லா பிரச்சினைகளும் தீர்வு கிடைக்கும்.

நீரின் அளவு குறையும் பொழுது நீர்கடுப்பு போன்ற பல பிரச்சனைகள் உடலில் ஏற்படுகிறது. இதன் காரணமாக அடிவயிற்றில் அதீத வலியும், சிறுநீர் கழிப்பதில் எரிச்சலும்,வெள்ளை படுதல் பிரச்சனை, கண் எரிச்சலும் அதிகமாக ஏற்படும்.

Also Read: Home Remedies for Grey Hair: இளநரை தோன்றுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்..!

இந்த கஞ்சியை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *