Home Remedies For Tooth Pain: தாங்க முடியாத பல் வலியா..? இந்த வழிய ட்ரை பண்ணி பாருங்க ..!
Home Remedies For Tooth Pain: தாங்க முடியாத பல் வலியா..? இந்த வழிய ட்ரை பண்ணி பாருங்க ..!
பூண்டின் மணத்தை விரும்புபவர்கள் உலகம் முழுவதும் ஏராளமாக உள்ளனர். பூண்டு அதற்கென ஒரு தனி சுவை மற்றும் கடுமையான மணத்தை கொண்டது.
இதில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

உதாரணத்திற்கு, கொழுப்பை கட்டுப்படுத்துதல், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், செரிமானத்தை சீராக்குதல் என சொல்லிக் கொண்டே போகலாம்.
அதிலும், பூண்டு எண்ணெயில் ஏராளமான குணநலன்கள் அடங்கியுள்ளன.
பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு ஏற்படாமல் தடுப்பதோடு, முகப்பரு பிரச்சனையை சரிசெய்யவும் உதவிடுகிறது.

நம் முன்னோர்களே காது வலிக்கு பயன்படுத்தும் ஒரே மருந்து பூண்டு எண்ணெய் தான். காது வலிக்கு முக்கிய காரணம் காதுகளில் ஏற்படக்கூடிய தொற்றுகள் தான்.
சில துளிகள் பூண்டு எண்ணெயை, கடுகு எண்ணெயுடன் கலந்து வெதுவெதுப்பாக சூடேற்றி வலி உள்ள காதில் தொடர்ந்து பயன்படுத்தவும். மீதமுள்ள எண்ணெயை எடுத்து வைத்துக் கொண்டு பின்னர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முடி உதிர்வுக்கு எண்ணற்ற வீட்டு வைத்தியங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் மிகவும் பயனுள்ளது என்றால் பூண்டு எண்ணெய் மசாஜ் தான்.
இப்படி செய்வதன் மூலம் முடியின் வேர்கள் வலுபெற்று முடி உதிர்வு குறையும். அதுமட்டுமல்லாது, தொடர்ந்து பூண்டு எண்ணெய் பயன்படுத்தி வந்தால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் மேம்படுத்தப்பட்டு, ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
முடி உதிர்வு பிரச்சனையில் இருந்து விடுபட, இரவு தூங்குவதற்கு முன்பு பூண்டு எண்ணெயை கூந்தலுக்கு தடவிக் கொண்டு காலை எழுந்து ஷாம்பு போட்டு குளித்திடவும்.
இதன் மூலம் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்பெறும்.
முடி உதிர்வுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று பொடுகு பிரச்சனை. பொடுகு பிரச்சனை தீர வேண்டுமென்றால் நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஹேர் ஆயிலுக்கு பதிலாக, பூண்டு எண்ணெயை பயன்படுத்துங்கள்.

Home Remedies For Tooth Pain:
வலிகளிலேயே பொறுத்துக் கொள்ள முடியாதது என்றால் அது பல் வலி தான். எப்போது வலி ஏற்படுமென்றே தெரியாது.
அப்படிப்பட்ட வலிக்கு இயற்கை மருந்தாக பூண்டு எண்ணெயை பயன்படுத்துங்கள். பூண்டில் காணப்படும் அல்லிசின் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் பண்புடையது.
அதனால் எத்தகைய பல் வலியும், வீக்கமும் சரியாகிவிடும். சொத்தை பல் ஏற்படுவதையும் இது தடுத்திடும்.
Also Read: எப்படி பல் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் வீசுகிறதா..?
வீட்டிலேயே பூண்டு எண்ணெய் தயாரிப்பது எப்படி?
பூண்டு எண்ணெய் செய்வது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் ஒன்றுமல்ல.
- சில பூண்டு பற்களை தோலுரித்து, தட்டி எடுத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் ஆலிவ் ஆயில் அல்லது உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு எண்ணெய் ஊற்றவும்.
- அத்துடன் தட்டி வைத்துள்ள பூண்டை சேர்த்து 2 நிமிடங்கள் சூடேற்றிவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும்.
- எண்ணெய் முற்றிலும் ஆறிய பிறகு சுத்தமான டப்பாவில் ஊற்றி, தேவைப்படும் போது உபயோகித்து கொள்ளலாம்.