Health Advice: உடல்நிலை சரியில்லாத போது ஃபேன் காற்றில் தூங்கக்கூடாதா..?
Health Advice: உடல்நிலை சரியில்லாத போது ஃபேன் காற்றில் தூங்கக்கூடாதா..?
தூசியினால் ஏற்படும் சளிக் காய்ச்சல் இருந்தால் அவர்கள் மின் விசிறிக்குக் கீழ் படுத்தால் காய்ச்சலை தீவிரமாக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Health Advice:
தூசியினால் ஏற்படும் காய்ச்சலில் ஒழுகும் சளி, மூக்கு எரிச்சல், தொடர் தும்மல், கண் எரிச்சல், சைனஸ் , இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இருக்கும்.
ஆனால் இது வைரஸால் ஏற்படக்கூடியது அல்ல.
காய்ச்சல் இப்படியும் அதிகரிக்குமா?
புதிய புதிய புயலைப்போல தினம் ஒன்றாக அறிமுகமாவது காய்ச்சலாகத்தான் இருக்கும். உடல் வெப்பநி லையை அதிகரிக்கும் இந்தக் காய்ச்சல், சில நேரங்களில் வந்தது கூட தெரியாமல் போய் விடும்.
சில சமயத்தில் உயிரைப் பறிக்கிற அளவுக்கு கொடிய முகத்தையும் காட்டும். அதனால்தான் குழந்தைகளுக்குக் காய்ச்சல் என்றாலே பல தாய்மார்களுக்கு பயம் தலைக்கேறும்.
உடலின் சராசரி வெப்பநிலையானது 98.6 டிகிரி ஃபாரன்ஹீட். சிலருக்கு இதைவிட சற்று கூடவோ, குறைவாகவோ இருக்கலாம். வெப்பநிலையானது 100 டிகிரி வரை இருப்பது பிரச்னையில்லை. அதைத் தாண்டினால்தான் கவலைப்பட வேண்டும்.
இப்படிப்பட்ட கொடூர காய்ச்சல் ஃபேன் காற்றில் அதிகரிக்கும்.
இப்படி தூசியினால் ஏற்படக் கூடிய காய்ச்சல் என்பதால் மின் விசிறிக்குக் கீழ் படுக்கும்போது அந்தக் காற்றில் சுற்றிக்கொண்டிருக்கும் தூசியை நாம் சுவாசிக்க நேர்ந்தால் அவை நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும் என்பதே தூக்கத்திற்கான ஆலோசகர் மார்க் ரெடிக்ட் கூற்றாகும்.

மேலும் இவர் மின் விசிறி பயன்படுத்துவதால் காய்ச்சல் வெப்பத்தைக் குறைக்கலாம். அது சற்று சௌகரியமாக இருக்கலாம்.
ஆனால் அது மூச்சுக் குழாய், கண்கள், தொண்டை ஆகிய இடங்களை வறட்சியாக்கிவிடும். ஒரு கட்டத்தில் இது ஆஸ்துமாவைக் கூட உண்டாக்கலாம் என்கிறார்.
அதேபோல் ஏற்கெனவே சைனஸ் பிரச்னை, ஆஸ்துமா பிரச்னை இருந்தால் அவர்களுக்கு தூசியினால் ஏற்படும் காய்ச்சல் வந்தால் முற்றிலும் மின் விசிறி காற்றைத் தவிர்த்தல் நல்லது.
காற்றில் பரவியிருக்கும் தூசிகள், துகள்கள் மூக்கு துவாரங்களுக்குள் சென்று காய்ச்சல் தீவிரத்தை அதிகமாக்கிவிடும் என்கிறார்.
Also Read: Hibiscus டீ குடிச்சா உடம்புக்கு இவ்வளவு நன்மைகளா..?
எனவே இனி வரும் காலங்களில் தூசியினால் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் மின் விசிறி பயன்பாட்டை தவிர்ப்பது நல்லது.