What are Symptoms of Allergy: தோல் நிபுணர்கள் தலையணை உறையை வாரந்தோறும் மாற்ற பரிந்துரைப்பது ஏன்..?
What are Symptoms of Allergy: தோல் நிபுணர்கள் தலையணை உறையை வாரந்தோறும் மாற்ற பரிந்துரைப்பது ஏன்..?
பிரபல அழகுசாதன நிபுணரும், தோல் பராமரிப்பு நிபுணருமான டாக்டர் கீதிகா மிட்டல் குப்தா கூறுவது தோல் பராமரிப்பு வழக்கத்தை நீங்கள் பின்பற்றாவிட்டால், இது உங்களுக்கு தீங்கு விளைவிப்பதோடு உங்கள் பல செயல்களையும் பயனற்றதாக மாற்றுகிறது.
மேலும் நாம் நமது சருமத்தைப் பராமரிக்கும் போது நாம் செய்ய வேண்டிய சிறிய மற்றும் முக்கியமான சுகாதார மாற்றங்களை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இதில் ஒவ்வொரு வாரமும் உங்கள் தலையணை உறைகளை மாற்றுவது முதன்மையானது.

What are Symptoms of Allergy:
உங்கள் தலையணை உறைகளை அடிக்கடி மாற்ற ஆரம்பித்தவுடன் உங்கள் சருமத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கண்டு நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள் என்கிறார் கீதிகா.
இந்த தெளிவான தோல் ஹேக்(skin hack) பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், இறந்த சரும செல்கள் மற்றும் பாக்டீரியாக்களுடன் நீங்கள் இவ்வளவு நாளும் தூங்கியிருக்கலாம் என்கிறார் கீதிகா.
வாரம் ஒருமுறை தலையணை உறையை மாற்றுவது சருமத்திற்கு மிகவும் சிறந்தது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் அவை கழுவப்பட வேண்டும் அல்லது உலர் சுத்தம் செய்யப்பட வேண்டும், என்று கூறினார்.
தூசி, பூச்சிகள், செல்லப்பிராணிகளின் முடி, எண்ணெய், இறந்த தோல், குப்பைகள் மற்றும் பாக்டீரியாக்கள் போன்ற பல தீங்கு விளைவிக்கும் கூறுகளை நமது தலையணை உறைகள் சுமந்து கொண்டிருக்கிறது .
இவையனைத்தும் நம்முடைய சருமத்திற்கு கேடு விளைவிக்கும்.

Skin Allergy:
பட்டுத் தலையணை உறைகளைப் பயன்படுத்துவது எப்படி சருமத்திற்கு சிறந்ததாக வழிவகுக்கும் மற்றும் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவக்கூடும் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வில் பருத்தி படுக்கையைப் பயன்படுத்துபவர்களுடன் ஒப்பிடும்போது, பட்டுப் படுக்கைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு பருக்களின் எண்ணிக்கை குறைவு என்று கூறப்படுகிறது.
மற்ற துணிகளுடன் ஒப்பிடும்போது பட்டு, சருமத்தில் கனிவாகவும் மென்மையாகவும் இருப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பருத்தியை விட நம் முகத்தில் இருக்கும் எண்ணெய்யை அதிகமாக உறிஞ்சும்.
சென்னையின் ரெண்டர் ஸ்கின் அண்ட் ஹேர்(Render skin and hair), தலைமை ஆலோசகர் டாக்டர் ரெனிதா ராஜன் கூறுவது “தலையணை உறைகளை மாற்றுவது ஒரு நல்ல விஷயம்.
வியர்வை மற்றும் நமது சருமம் எல்லாம் சுகாதாரத்துடன் இணைந்தவையே. எனவே, நாம் எப்படி ஆடைகளை மாற்றுகிறோமோ, அதைப் போல நம் தலையணை உறைகளையும் மாற்ற வேண்டும் என்கிறார்.
Skin Care:
வழக்கமாக ஒரு வாரத்திற்கு ஒரு முறை மாற்றினால் போதும். இருப்பினும், உங்களுக்கு முகப்பரு அதிகமாக இருந்தால் அல்லது முகத்தில் கொப்புளங்கள் இருந்தால், சிறந்த சுகாதாரத்திற்காக தலையணை உறையை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வரை மாற்றலாம்.
உங்களுக்கு பொடுகு பிரச்சனை இருந்தாலும் இந்த முறையை பின்பற்றலாம்.
Also Read: Future Of Artificial Intelligence: ஏலியன் ஆய்வுகள் மேற்கொள்ளும்போது நடப்பது என்ன ?
ஆனால் அது தலையணை உறைகளில் மட்டுமல்ல! நமக்குத் தெரியாமல் தீங்கு விளைவிக்கும் பிற பொருட்களைப் பட்டியலிட்டார் டாக்டர் கீதிகா.
மேலும் படுக்கை விரிப்புகள், மேக்கப் பிரஷ்கள்(Makeup brush), அழகு கலப்பான்கள் மற்றும் துண்டுகள் ஆகியவை அடிக்கடி துவைக்க வேண்டிய சில விஷயங்கள். ஆனால் அழகு சாதனப் பொருட்கள் சுத்தம் செய்யும் போது புறக்கணிக்கப்படும். அதாவது அழகு சாதனப் பொருட்களை யாரும் முறையாக சுத்தம் செய்வதில்லை.
“இந்த அழகு சுகாதார பழக்கவழக்கங்கள் பருக்கள், தோல் அலற்ஜி(Allergy) மற்றும் அரிக்கும் தோல் அலற்ஜியை தடுக்கும்” என்று அவர் கூறினார்.
இன்றைய கால கட்டத்தில் எல்லோரும் வேலை வேலை என்று ஓடி கொண்டிருக்கிறோம் . நம் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு சுகாதாரமான முறையில் இருப்போம்.