இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Black Salt : கருப்பு உப்பின் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா..?

Black Salt : கருப்பு உப்பின் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா..?

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று ஒரு பழமொழி உண்டு என்பது நினைவிருக்கிறதா? உப்பு என்பது ருசிக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல அது, உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கின்றது.

black salt benefits - newstamilonline

நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, ‘சோடியம் குளோரைடு’ என்று பெயர். ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று மருத்துவக் குறிப்புகள் கூறுகிறது.

வீட்டில் வெள்ளை உப்பு தவிர, கருப்பு உப்பு கூட சமையலறையில் எளிதில் காணப்படுகிறது.

உவர்ப்பு என்னும் சுவை உப்பின் மூலம் மட்டுமே கிடைக்கும். பொதுவாக கடல் நீரிலிருந்துதான் உப்பு பெறப்படுகிறது. ஆனால், பாறைகள் மூலமும் உப்பு பெறப்படுகிறது.


இமய மலைப் பகுதிகளிலிருந்தும், நேபாளப் பகுதியிலிருந்தும் ஒரு வகை உப்பு எடுக்கப்படுகிறது. இவ்வகை உப்பிற்கு கருப்பு உப்பு [Black Salt] என்று பெயர். இதில் இருப்பதும் சோடியம் குளோரைடு தான்.

கருப்பு உப்பில், கடல் உப்பைவிட சோடியம் குறைவாகக் காணப்படுகிறது. வட இந்தியாவில் கருப்பு உப்பையே அதிகம் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

Black salt(கருப்பு உப்பு) benefits:

கருப்பு உப்பு உட்கொள்வதன் மூலம் வாந்தி, அமிலத்தன்மை அல்லது மலச்சிக்கல் போன்ற சிக்கல்களை எளிதில் சமாளிக்க முடியும். கருப்பு உப்பு ஆக்ஸிஜனேற்றத்தை நீக்குகிறது. கருப்பு உப்பு இதுபோன்ற பல மருத்துவ பண்புகளில் நிறைந்துள்ளது.

கால் பாதங்கள் வீங்கி, வெடிப்புக்கள் இருந்தால், சிறிது கருப்பு உப்பை, வெந்நீரில் கலந்து, பாத்திரத்தில் நிரப்பி, பாதத்தினை நீருக்குள் மூழ்கினாற்போல் வைத்திருந்தால், வீக்கமும் குறையும். வெடிப்புக்களும் மறையும்.

உடல் எடை பிரச்சனையை குணமாக்க இந்த கருப்பு உப்பு பயன்படுகிறது. கடல் உப்பை நீங்கள் உணவில் சேர்த்துக்கொண்டு வரும் பொழுது உங்களுடைய உடல் எடையானது மிக வேகமாக அதிகரிக்கும்.

ஆனால் இந்த கருப்பு உப்பை நீங்கள் உணவில் சேர்த்து வரும் பொழுது உங்களுடைய உடல் எடையை குறைக்கும். பல உடல் எடை குறைக்கும் ஆயுர்வேத மருந்துகளில் இந்த கருப்பு உப்பே பயன்படுத்தப்படுகிறதாம்.

மூக்கு அடைப்பு மற்றும் தொண்டை புண் காரணமாக சுவாசிப்பதில் சிரமங்களை அனுபவிக்கிறீர்களா. உங்களுக்கு கருப்பு உப்பு நல்ல பலனை தரும்.

சளி , சைனஸ், ஒவ்வாமை அல்லது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு கருப்பு உப்பை ஆவி பிடிப்பதால் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பலருக்கு பயனளிக்கிறது.

கருப்பு உப்பு இரைப்பை பிரச்சனைகளை சீராக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். உணவு ஜீரணமாகாமல் அமிலம் மேலெழும்புவதை குறைக்கும்.

குடலிலிருந்து அமிலம் உணவுகுழாய்க்கு வருவதை தவிர்க்க ஒரு செப்பு பாத்திரத்தில் சிறிதளவு கருப்பு உப்பை போட்டு அடுப்பில் வைத்து உப்பு நிறம் மாறும் வரை வறுத்து பின்னர் அதில் சிறிதளவை 1 கப் தண்ணீரில் சேர்த்து பருக அமில மேலெழும்புதல் பிரச்னை குணமாகும்.

கருப்பு உப்பில் இத்தனை நன்மைகள் இருந்தாலும் தென் இந்தியாவில் இதன் உபயோகம் மிகமிகக் குறைவு என்றே சொல்லலாம்.

ஆனால் நன்மை பயக்கும் கருப்பு உப்பை அதிகமாக உட்கொள்வதும் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

Also Read: Symptoms of low oxygen: இரத்தத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!

ஒரு குறிப்பிட்ட அளவு கருப்பு உப்பை சாப்பிடுவதில் எந்தத் தீங்கும் இல்லை, ஆனால் அதை அதிக அளவில் உட்கொள்வது இந்த குறைபாடுகளை ஏற்படுத்தும்.

கடல் உப்பு போலவே இதைப் பயன்படுத்தலாம். நீங்கள் விரும்பினால், உப்புடன் சம அளவு கலந்து உணவு தயாரிக்கவும் இதைப் பயன்படுத்தலாம்.

ஒரு நாளைக்கு 2,300 மில்லிகிராம் (ஒரு டீஸ்பூன்) கருப்பு உப்பை மட்டுமே பயன்படுத்துங்கள். உடலில் அத்தியாவசிய தாதுக்களை வழங்க இந்த அளவு உப்பு போதுமானது.