Tamil Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Foods For Healthy: இதய நோய்களின் அபாயத்தைத் தடுக்க மீன் சாப்பிடலாமா?..

Foods For Healthy: இதய நோய்களின் அபாயத்தைத் தடுக்க மீன் சாப்பிடலாமா?..

இதய நோய் அல்லது பக்கவாதம் உள்ளவர்கள், மீனை சாப்பிடுவதன் மூலம் இதய சிக்கல்களிலிருந்து தப்ப முடியும் என்று ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Foods For Healthy

Benefits of Eating Fish:

அசைவம் சாப்பிடுபவர்களில் மீனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

ஆடு, மாடு… என மற்ற இறைச்சிகளோடு ஒப்பிடும்போது, மீன் உணவால் அதிகத் தீங்கு இல்லை என்றே சொல்லலாம்.

இதில் புரோட்டீன், வைட்டமின் டி மற்றும் செலினியம் (Selinium) போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

நெத்திலி போன்ற சில வகை மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருக்கிறது.

இது, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்; இதயத் துடிப்பைச் சீராக்கும்; இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை வெகுவாகக் குறைக்கும்.

ஆண், பெண் இருவருக்குமே உகந்தது மீன் உணவு. அதேபோல பக்கவாதம் வராமல் காக்கும்;

மனஅழுத்தத்தைக் குறைக்கும். மனரீதியான பிரச்னைகளுக்குத் தீர்வு தரும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மீன் உணவு சாப்பிட வேண்டியது அவசியம்.

ஏனெனில், இதில் இருக்கும் `டி.ஹெச்.ஏ’ (DHA – Docosahexaenoic acid) எனும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நன்மை தரக்கூடியது.

Health Fish:

வாரத்திற்கு இரண்டு முறை மீன் சாப்பிடுவது இதய நோய் (Cardiovascular Disease (CVD))உள்ளவர்களை அதிக ஆபத்திலிருந்து காக்க உதவும்.

ஏற்கனவே இதய நோய் அல்லது பக்கவாதம் உள்ளவர்கள், மீனை சாப்பிடுவதன் மூலம் இதய சிக்கல்களிலிருந்து தப்ப முடியும் என்று ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மீனில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் முக்கியமான மூலப்பொருள் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

அவை CVDயின் மோசமான நிகழ்வுகளான மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துகளை குறைக்கிறது.

ஒவ்வொரு வாரமும் ஒமேகா -3 நிறைந்த மீன்களை இரண்டு முறைக்கு மேல் சாப்பிட்ட உயர் ஆபத்துள்ள மக்களில் ஆறில் ஒரு பகுதியினருக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதும் வெகுவாக குறைந்துள்ளது என்று ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மீனை சாப்பிடுவது ஒரு நல்ல குறிப்பிடத்தக்க பாதுகாப்பு நன்மையை அளிக்கும்.

வாஸ்குலர் நோயாளிகளில் மீன் நுகர்வு மற்றும் குறிப்பாக எண்ணெய் நிறைந்த மீன்களை சாப்பிடுவது இதய நன்மைகளை ஏற்படுத்தக்கூடும்.

என்று மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரும் ஆய்வின் முன்னணி இணை ஆசிரியருமான ஆண்ட்ரூ மென்டே கூறினார்.

ஒமேகா -3 நிறைந்த மீன்களை சாப்பிடுவதன் மூலம் இதய நோய்க்கு குறைந்த ஆபத்து உள்ளவர்கள் CVDயிலிருந்து ஓரளவு பாதுகாப்பை பெற முடியும் என்று ஆராய்ச்சியாளர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஆனால் அதிக ஆபத்துள்ள நபர்களைக் காட்டிலும் சுகாதார நன்மைகள் குறைவாகவே காணப்படுகின்றன என்ற செய்தியையும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

எளிதாக ஜீரணமாகக்கூடிய ஏராளமான சத்துக்கள் மீனில் இருக்கின்றன. சிறந்த புரோட்டீன் உணவாகவும் மீன் திகழ்கிறது.

உடல் எளிதாக ஏற்றுக்கொள்ளக்கூடிய பி-12 வைட்டமின்கள் அதில் இருக்கின்றன.

பாதிப்புகள் ஏற்படாத அளவுக்கு இதயத்தை காக்கும் ‘ஒமேகா 3 பேட்டி ஆசிட்’டும் மீனில் இருக்கிறது.

பயறு வகைகளை சாப்பிட வாய்ப்பில்லாதவர்களுக்கு தேவைப்படும் சத்தை, மீன் மூலம் பெற்றுவிட முடியும்.

சிறிய வகை மீன்களில் கால்சியமும், நுட்பமான சில வித தாது சத்துக்களும் இருக்கின்றன.

வைட்டமின் ஏ மற்றும் டி, அயோடின் போன்ற வைகளும் மீனில் இருக்கின்றன.

Also Read: High Fiber Vegetables: நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்..!

நினைவாற்றலை வளப்படுத்தும் சக்தியும் மீனில் இருக்கிறது. மீனில் குறைந்த அளவில் கார்போஹைட்ரேட் இருக்கிறது.

இவைகளை தவிர மீதி அனைத்து சத்துக்களும் மீனில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். மேலும் இவை இதய நலனை காத்து நம் ஆயுளை நீட்டிக்கிறது.