Custard Apple Benefits: சுவையும், மருத்துவக்குணமும் நிறைந்த சீதாப்பழம்..!
Custard Apple Benefits: சுவையும், மருத்துவக்குணமும் நிறைந்த சீதாப்பழம்…!
சீதாப்பழமானது சுவையுடன் சேர்ந்து மருத்துவக்குணமும் நிறைந்த ஓர் இனியப் பழமாகும்.

Benefits Of Eating Custard Apple:
சீதாப்பழமானது சுவையுடன் சேர்ந்து மருத்துவக்குணமும் நிறைந்த ஓர் இனியப் பழமாகும்.
இதற்கு, அன்னமுன்னா பழம், கஸ்டர்டு ஆப்பிள், பட்டர் ஆப்பிள் என்ற பெயர்களும் ஆங்கிலத்தில் உண்டு.
இதன் தாவரவியல் பெயர் Annona squamosa என்று பெயர்.
குளுக்கோஸ் வடிவில் நிறைந்த அளவு சர்க்கரைச் சத்தைக் கொண்டிருக்கும் இப்பழம் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப் படக்கூடியது.
இந்த சீதாப்பழம் வெப்பம் மிகுந்த பகுதிகளில் எளிதாக வளரும் ஓர் சிறு மர வகையைச் சார்ந்தது.
சீதாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீதாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.
சீதாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக இருக்கும்,கூடவே மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவையும் ஏராளமாக அடங்கியுள்ளன.
மேலும், இதன் மருத்துவப்பயன்கள் என்ன என்பதை காண்போம் வாருங்கள்…!
Custard Apple Benefits:
சீதாப்பழத்தை உண்டால் செரிமானம் நன்கு ஏற்படும், மலச்சிக்கல் நீங்கும்.
சீதாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பருக்கள் மேல் பூசி வந்தால் பிளவு பழுத்து உடையும்.
இலைகளை அரைத்து புண்கள் மேல் இட்டால் புண்கள் ஆறும்.
இதன் விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு சேர்த்து கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி மிருதுவாகும். பேன்கள் அழிந்து போகும்.
சீதாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீதாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வந்தால் முடி உதிர்வு ஏற்படாது.
சிறு குழந்தைகள் சீதாப்பழம் சாப்பிட்டால், அவர்கள் எலும்பு உறுதியுடன் காணப்படும், பல்லும் வலுவடையும்.
சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவில் ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து, அதனுடன் சீதாப்பழத்தின் விதைப்பொடியையும் கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்துவந்தால் தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.
Does Custard Apple Reduce Weight..?
சீதாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் இதயம் பலப்படும். மேலும், இது மனஅழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
சீதாப்பழத்தில் இருக்கும் வைட்டமின் B6 மூச்சுக்குழாய் அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது. ஆஸ்துமாவை தடுக்கிறது.
நுரையீரல் தொடர்பான சிக்கல் இருப்பவர்களுக்கு சீதாப்பழம் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. மேலும் சளியை போக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.
ஆரோக்கியமான உடல் எடையினை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இல்லையெனில் உடலில் அதிக கொழுப்புகள் சேர்ந்துவிட கூடாது என்று எண்ணுபவர்கள் இந்த சீதாப்பழத்தை சாப்பிடலாம்.
Also Read: Skin Disease Treatment: கோவைக்கீரையின் மருத்துவப் பயன்கள்:
இதில் அதிக ஊட்டச்சத்துக்கள், சரியான அளவு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அதிக புரதங்களும் நிரம்பியுள்ளது.
சீதாப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நீங்களும் ஆரோக்கியமாக உடல் எடையினை பெறலாம்.