News Tamil OnlineTamil Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Mental Health Issues: அதிக உடற்பயிற்சியா..? வேண்டவே வேண்டாம்..!

Mental Health Issues: அதிக உடற்பயிற்சியா..? வேண்டவே வேண்டாம்..!

ஒரு நாளைக்கு 90 நிமிடங்களுக்கு மேல் சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்பவர்களின் மனநலனில் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mental Health Issues

Mental Health Issues:

இதய நோய்கள், உடல் பருமன், பக்கவாதம், நீரிழிவு போன்ற நோய்கள் இருப்பவர்களுக்கு உடற்பயிற்சி ஓர் சிறந்த பலனை தருவதாக அமைகிறது.

அதேபோல், மிதமான உடற்பயிற்சிகள், நடைபயிற்சி போன்றவை மனதுக்கு இதமளிப்பதாகவே கூறப்படுகிறது.

ஆனால் ‘The Lancet Psychiatry’ என்ற இதழில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று, உடற்ப்பயிற்சி, மனநலம் இரண்டிற்கும் இடையேயான தொடர்பு பற்றிக் குறிப்பிட்டுள்ளது.

அதில், ஒரு நாளைக்கு 90 நிமிடங்களுக்கு மேல் சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்பவர்களின் மனநலனில் பாதிப்பு ஏற்படுவதாக கூறியுள்ளது.

மனதில் உடற்பயிற்சி ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வு செய்யும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட 12 லட்சத்துக்கும் அதிகமானோரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, உடற்பயிற்சியின் வகைகள் , எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும், எவ்வளவு நேர இடைவெளியில் உடற்பயிற்சி செய்யப்படுகிறது,எவ்வளவு தீவிரமாக உடற்பயிற்சி செய்யப்படுகிறது என்பது போன்ற தகவல்கள் திரட்டப்பட்டன.

உடற்பயிற்சியில் ஈடுபடுவோர், ஈடுபடாதவர்கள் ஆகியோரின் மனநிலை பற்றிய தகவல்களும் சேகரிக்கப்பட்டன.

பொதுவாக, உடற்பயிற்சி செய்வதால் உடலை ஃபிட்டாக வைத்து கொள்ள முடிகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கவும் உடற்பயிற்சி சிறந்த பயனாற்றுகிறது.

ஆனால் எப்போது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை நாம் அறிந்து செயல்படுவது மிகவும் சிறந்தது.

பலர் எவ்வகையிலாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சரியான உணவை எடுத்து கொள்ளாமல் வெறும் உடற்பயிற்சி மட்டும் செய்துகொண்டிருப்பர்.

ஒரு நாளில் பாதி நேரம் உடற்பயிற்சி மட்டுமே செய்து வருகின்றனர். இதனால் பல பக்கவிளைவுகளுள் சிக்கி தவிக்கின்றனர்.

சரி வாங்க அதிக நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை பற்றி விரிவாக காண்போம்.

மிகவும் கடினமான உடற்பயிற்சிகள், மராத்தான் போட்டிகளில் தொடர்ந்து ஓடுவது போன்ற செயல்களால் மாரடைப்பு, வாதம், இதயம் சீராக இயங்காமல் போவது, ரத்தக் குழாய்கள் விரிவடைதல் போன்ற பிரச்னைகள் வரவாய்ப்புள்ளது.

இதற்குக் முதற்கட்ட காரணம் அதிகமாக உடலைச் சிரமத்துக்கு உள்ளாக்கும்போது அந்த அழுத்தம் இதயம் மற்றும் ரத்த ஓட்டத்தை நேரடியாகப் பாதிக்கும்.

பெண்கள் வாரம் ஒரு முறை கடின உடற்பயிற்சியை மேற்கொண்டால் போதுமானது.

அதே சமயம் தினமும் அதிக நேரம் உடற்பயிற்சி செய்தால் பெண்களுக்கு மாரடைப்பும், வாதமும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

இந்தக் கடின உடற்பயிற்சி தொடர்ந்தால் மாதவிடாய் ஏற்படாமல் போவது, எலும்புகள் வலுவிழந்து தேய்ந்து போவது, போன்ற நோய்கள் வருவதற்கும் வாய்ப்பு அதிகம்.

ஆண்களுக்கு இதே கடின உடற்பயிற்சியால் உடல் சோர்வு ஏற்பட்டு ஆண்மைக் குறைபாடு ஏற்படவும் வாய்ப்பு அதிகம்.

Also Read: Knuckle cracking side effects: அடிக்கடி நெட்டி முறிப்பது சரியா..?

அளவுக்கு அதிக உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலுக்குக் கிடைக்க வேண்டிய தேவையான அளவு ஊட்டச்சத்தை கூட நாம் இழந்து விடுகிறோம்.

எனவே, மிகத்தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபடுவோரின் மனநிலையில் ஒரு சலனத்தன்மை ஏற்படுவதாக இந்த ஆய்வில் தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *