இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Unhealthy Foods: பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்னெ தெரியுமா..?

Unhealthy Foods: பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்னெ தெரியுமா..?

சில உணவுகளை சில குறிப்பிட்ட உணவுகளோடு சேர்த்து சாப்பிடக் கூடாது. அவ்வாறு சேர்த்து சாப்பிட்டால் அதுவே விஷமாக மாறிவிடும்.

Unhealthy Foods  - newstamilonline

Milk Side Effects:

சிலருக்கு இரவில் ஒரு டம்ளர் பல சாப்பிட்டால் தான் தூக்கமே வரும். அதேபோல் தான் சிலருக்கு இரவில் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.

அதோடு நம்மில் பல பேர் பால், பழம் இரண்டையும் சாப்பிட்டே ஒரு நேரத்துக்கு உரிய உணவை முடித்துக் கொள்வார்கள்.

இரவில் பால் குடித்தால் சிலருக்கு நிறைவாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் தவறான உணவுகளோடு பாலைச் சேர்த்து அருந்தக்கூடாது.

இரவில் கீரை, தயிர் போன்றவை சாப்பிடக்கூடாது என்பது நமக்குத் தெரியும். ஆனால் சில உணவுகளோடு சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் அதுவே விஷமாக மாறிவிடும்.

அப்படி எந்தெந்த உணவுகளோடு பாலைச் சேர்த்து குடிக்கக்கூடாது என்பதைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வது அவசியம்.

புளிப்பு உணவுகள்:

பால் சாப்பிடும்போது அதனுடன் பழங்கள், இறைச்சி, தேங்காய், வால்நட், தயிர், முட்டை, கொள்ளு, பருப்ப வகைகள் ஆகியவற்றை சேர்த்து உண்ணக்கூடாது.

அவ்வாறு சாப்பிடும் போது, ஜீரண செயலில் ஈடுபட்டிருக்கக்கூடிய என்சைம்களின் செயலைத் தடுத்து, உடலில் பல பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும்.

தயிர், மோர் அல்லது புளிப்பு உணவுகளை ஒரு போதும் பாலுடன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது வயிற்று கோளாறு, வயிற்று வலி போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

பால் மற்றும் புளிப்பு உணவுகளுக்கு இடையில் குறைந்தது அரை மணி நேர இடைவெளி இருக்க வேண்டும்.

நீங்கள் விருந்துக்குச் சென்றாலும் கூட, தயிர் பச்சடி மற்றும் பாயசம் என இரண்டுமே விருந்தில் இருந்தால், அவற்றில் ஒன்றை மட்டுமே சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

Foods Not to Eat with Milk – வாழைப்பழங்கள்:

எடை அதிகரிக்க, பெரும்பாலும் பாலுடன் வாழைப்பழங்களை சாப்பிட்டால் நல்லது என பலர் பரிந்துரைக்கின்றனர்.

ஆனால் வாழைப்பழங்கள் பாலுடன் பால் சேரும் போது ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இது செரிமான பிரச்சினைகளை உண்டாக்கும்.

அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வாழைப்பழ ஷேக்கை அருந்தும்போது, ​​எப்போதும் செரிமானத்திற்கு ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை அல்லது ஜாதிக்காய் பொடியைப் பயன்படுத்தினால், வயிற்று பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.

அசைவ உணவுகளை குறிப்பாக மீன் வகை உணவுகளை சாப்பிட்ட பின்னர் பால் சாப்பிடுவது நல்லதல்ல.

உங்கள் செரிமான அமைப்பில் இது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். இதனால், அமிலத்தன்மை, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கும்.

சிட்ரஸ் பழங்கள்:

சிட்ரஸ் பழங்களை பாலுடன் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளன.

எனவே, இந்த அமிலம் பாலுடன் சேரும் போது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் தவிர்க்கப்பட வேண்டும்.

முள்ளங்கி, பூண்டு, கீரைகள், முருங்கைக்காய் ஆகியவற்றால் ஆன உணவுகளை உண்ட பின்பு, பாலை குடிக்கவே கூடாது.

Also Read: Avoid Drinking Water: எப்போதெல்லாம் நாம் கண்டிப்பாக தண்ணீர் குடிக்கக்கூடாது..!

அதேபோல் பழங்கள் ஆரோக்கியமானவை தான். ஆனால் அவற்றை வேறு எந்த உணவுகளோடும் சேர்த்து சாப்பிடக்கூடாது.

அது நம்முடைய ஜீரண மண்டலத்தை பலவீனமாக்கும். இதனால் உடலில் கபம், பித்தம் பான்றவற்றை உண்டாக்கிவிடும்.