News Tamil OnlineTamil Newsஅறிவியல்கண்டுபிடிப்புசெய்திகள்

Science News: அண்டார்டிகாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ விண்கற்கள்..!

Science News: அண்டார்டிகாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ விண்கற்கள்..!

அண்டார்டிகாவிலிருந்து திரும்பிய சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஐந்து புதிய விண்கற்களை கண்டுபிடித்துள்ளனர்.

பூமியில் மற்ற இடங்களில் விழுந்த விண்கற்களை விட அண்டார்டிகாவில் விழுந்த விண்கற்களை கண்டுபிடிப்பது மிகவும் எளிது.

Science News

Science News:

விண்கல் (Meteorite) என்பது பூமிக்கு வெளியிலிருந்து, பூமியின் மேற்பரப்பை அடையும் பொருளாகும். விண்வெளியில் இருக்கும்போது இது விண்கல் என அழைக்கப்படுகிறது.

பெரும்பாலான விண்கற்கள் அண்டார்டிகாவிலிருந்து கண்டுபிடிக்கப்படுகிறது.

ஏனென்றால், அண்டார்டிகா ஒரு கடுமையான குளிர் பிரதேச பகுதியாகும். இதனால் அண்டார்டிகாவில் மனிதர்கள் வாழ முடியாது.

அண்டார்டிகா மனிதர்கள் வாழ்வதற்கான ஒரு சிறந்த இடமாக இல்லாவிட்டாலும், விண்கற்களுக்கு மிகவும் ஏதுவான ஒரு இடமாக திகழ்கிறது.

அண்டார்டிகாவின் வறண்ட காலநிலையானது பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது, அங்கு விண்கற்கள் எதிர்கொள்ளும் வானிலையின் அளவை குறைக்கிறது.

ஆகையால், விண்கற்கள் வந்து சேர்வதற்கான சிறந்த இடமாக அண்டார்டிகா திகழ்கிறது.

அண்டார்டிகா வேலை செய்வதற்கு மிகவும் கடினமான இடமாக இருப்பினும் , விண்கற்களை வேட்டையாட உலகின் தலைச்சிறந்த இடங்களில் ஒன்றாகும்.

அண்டார்டிகா ஒரு குளிர் பிரதேச பகுதி மற்றும் அதன் வறண்ட காலநிலை, விண்கற்களின் காலநிலையை கட்டுப்படுத்துவதால் இது ஒரு காரணமாகும்.

What is Meteorite

வறண்ட காலநிலை மற்றும் ஆய்வுக்கு ஏற்ற நிலப்பரப்பும் இங்கு உள்ளது.

மேலும் பனி மூடி இருப்பதால் கருப்பு பாறைகள் தெளிவாக தெரிகின்றன.

What is Meteorite?

தற்போது அண்டார்டிகாவில் 5 புதிய விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் மிகப்பெரிய விண்கல் சுமார் 7.6 கிலோ எடையை கொண்டுள்ளது.

கடந்த நூறு ஆண்டுகளில் அண்டார்டிகாவில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 45,000 விண்கற்களில் நூறு விண்கற்கள் ஒரே அளவு என்று ஃபீல்ட் மியூசியத்தின் ஆராய்ச்சியாளர் மரியா வால்டெஸ் மதிப்பிடுகிறார்.

“விண்கற்கள் என்று வரும்போது நமக்கு அளவு அவசியமில்லை, மேலும் சிறிய மைக்ரோ விண்கற்கள் கூட அறிவியல் ரீதியாக நம்பமுடியாத ஒன்றாக இருக்கும்” என்று வால்டெஸ் கூறுகிறார்.

ஆனால், நிச்சயமாக இதைப்போன்ற பெரிய விண்கல்லைக் கண்டுபிடிப்பது அரிதானது.

செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி புதிய விண்கல் தாக்கியத் தளங்களை முதலில் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்கிறார்கள்.

“ஒரு ஆபத்தான பகுதிக்கு செல்வது , தெரியாத பகுதிகளை ஆராய்வது” உற்சாகமாக இருக்கிறது என்கிறார் டெபயில். ஆனால், செயற்கைக்கோள் படங்களின் அழகை விட யதார்த்தம் மிகவும் சிக்கல் நிறைந்தது என்ற உண்மையையும் நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் கூறுகிறார்.

அண்டார்டிகாவில் கோடை காலத்தில் பயணம் மேற்கொண்ட போதிலும், வெப்பநிலை சுமார் 10°C ஆகவே இருந்தது என்கிறார்.

Research in Antarctica

Research in Antarctica:

வால்டெஸ் அவர்கள் தங்கள் நாட்களை ஸ்னோமொபைல்(snowmobile) செய்தும், பனி மூடிய பகுதியில் நடைபயணம் செய்தும், பின்னர் கூடாரத்தில் உறங்கியும் கழித்ததாக குறிப்பிடுகிறார்.

“ஸ்னோமொபைல்” என்பது பனி மற்றும் பனியில் பயணிக்க பயன்படும் ஒரு சிறிய மோட்டார் வாகனம்.

மேலும் இந்த குழுவால் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து விண்கற்கள், ராயல் பெல்ஜிய இயற்கை அறிவியல் நிறுவனத்தில் பகுப்பாய்வு செய்யப்படும்.

சிறிய நுண்ணிய விண்கற்கலில் உள்ள வண்டல்(மண்வகை), ஆராய்ச்சியாளர்களிடையே அவர்களின் நிறுவனங்களில் ஆய்வுக்காக பிரிக்கப்பட்டுள்ளது.

Also Read: Spacecraft to Mars: செவ்வாய் கோளுக்கு பறக்க தயாராகும் முதல் அரபு விண்கலம்..!

விண்கற்களைப் பற்றி படிப்பது பிரபஞ்சத்தில் நமது இடத்தை நன்கு புரிந்துகொள்ள உதவும் மற்றும் நம்மிடம் விண்கற்களின் அளவு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு சிறப்பாக நமது சூரிய குடும்பத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

பண்டைய கால மக்கள், விண்கற்களை கடவுள் அனுப்பிய புனித பொருளாக கருதினர்.

ஆனால் நம் ஆராய்ச்சியாளர்கள் அந்த விண்கற்கள் மூலம் பல்வேறு தகவல்களை நமக்கு அளித்து வருகின்றனர்.