செய்திகள்தொழில்நுட்பம்

Spacecraft to Mars: செவ்வாய் கோளுக்கு பறக்க தயாராகும் முதல் அரபு விண்கலம்..!

Spacecraft to Mars: செவ்வாய் கோளுக்கு பறக்க தயாராகும் முதல் அரபு விண்கலம்..!

செவ்வாய் கோளுக்கு முதல்முறையாக அரபு விண்கலம் ஒன்று பயணம் மேற்கொள்ளத் தயாராகி வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படும்.

Spacecraft to Mars-newstamilonline

Spacecraft to Mars:

செவ்வாய் கிரகத்தை சென்றடைய 493 மில்லியன் கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள வேண்டும்.

எனவே ஏழு மாதங்கள் பயணித்த பிறகே செவ்வாய் கோளைச் சுற்றிவருவதற்காக திட்டமிடப்பட்ட வட்டப் பாதையை இந்த விண்கலம் சென்றடையும்.

செவ்வாய் கோளுக்கு சென்றடைந்தவுடன் காலநிலை மாற்றம் மற்றும் செவ்வாயின் சுற்று சூழல் குறித்த தரவுகளை இந்த விண்கலம் அனுப்ப துவங்கிவிடும்.

பிறகு 687 நாட்களுக்கு செவ்வாய் குறித்த தரவுகளை இது புவிக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும்.

செவ்வாய்க்கோள்:

செவ்வாய் (Mars) சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோள் ஆகும். இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது. இக்குடும்பத்தில் மிகச்சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக இரண்டாவது சிறிய கோளாக செவ்வாய் இருக்கிறது. மேனாட்டினர் இக்கோளுக்கு போர்க்கடவுளின் பெயரைச் சூட்டியுள்ளனர்.

அரபு எமிரேட் விண்கலம்:

ஐக்கிய அரபு எமிரேட் இந்த விண்கலத்தை(Spacecraft to Mars) ஏவுகிறது. செவ்வாய் கோளை ஒரு முறை சுற்றிவர 55 மணிநேரம் ஆகும். இளம் அரபு விஞ்ஞானிகள் விண்வெளிப் பொறியியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு இந்த திட்டம் ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும்.

மேலும் தண்ணீரை உருவாக்கத் தேவையான ஹைட்ரஜன், ஆக்சிஜன் இரண்டுமே செவ்வாயில் இருந்து வெளியேறிக்கொண்டே இருப்பதால், தங்கள் ஆராய்ச்சி இதில் தான் அதிக கவனம் செலுத்தும் என திட்ட இயக்குனர் சாரா அல் அமிரி கூறுகிறார்.

”நாமேட் அமல்” என இந்த அரபு விண்கலத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ”நாமேட் அமல்” என்பதன் பொருள் நம்பிக்கை.

Also Read: சீனாவில் வருகிறது மணிக்கு 620 கிமீ வேகத்தில் பயணிக்கும் மிதக்கும் அதிவேக ரயில்..!

ஜப்பானிய தீவு ஒன்றில் இருந்து இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 2117 ஆம் ஆண்டுக்குள் செவ்வாயில் மனிதர்கள் குடியேறுவதை சாத்தியமாக்கி காட்ட வேண்டும் என்ற லட்சியத்துடன் ஐக்கிய அரபு எமிரேட் செயல்படுகிறது.