Knuckle cracking side effects: அடிக்கடி நெட்டி முறிப்பது சரியா..?
Knuckle cracking side effects: அடிக்கடி நெட்டி முறிப்பது சரியா..?
கைகளை நெட்டி முறிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. ஒரு சிலர் நெட்டி முறிக்கும் அந்த ஒலியை கேட்ட பின் நிம்மதி அடைகிறார்கள். ஒரு சிலருக்கு இது ஒரு புதுவித புத்துணர்ச்சியை அளிக்கிறது.

ஆனால் இந்த பழக்கம் உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை அழிக்கக்கூடும் என்று உங்களுக்குத் தெரியுமா?
விரல் எலும்புகளின் மூட்டுகளுக்கு இடையில் சுற்றி வரும் ஒருவகையான திரவமே உங்களை நெட்டி எடுக்கத்தூண்டுகிறது.
டென்ஷன் அதிகமாக இருப்பவர்களும் நெட்டி முறிப்பார்கள்.
Knuckle cracking side effects:
மன அழுத்தம் உள்ளவர்களும், மனநோய் சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களும் நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள்.
எப்போதோ ஒன்றிரண்டு முறை நெட்டி முறிப்பதால் மிகப்பெரிய விளைவு எதுவும் ஏற்படாது என்றாலும் அடிக்கடி தொடர்ந்து செய்யக்கூடாது.
எந்தப் பழக்கமுமே அளவுக்கு அதிகமானால் ஆபத்தில்தான் முடியும். இரண்டு எலும்பு மூட்டுகளின் இடையில் உள்ள தசைநார்களே மூட்டுகள் உராய்வதைத் தடுக்கின்றன.
தொடர்ந்து அவ்வாறு செய்யும்போது இந்த தசைநார்கள் கிழிந்துவிடும் அபாயம் உள்ளது.
விரல்களை அளவுக்கு அதிகமாக மடக்கும் போது தசைநார்களின் வேலையை முடக்கிவிடும்.
அதுவே ஆர்த்ரைடிஸ் என்று சொல்லக்கூடிய முடக்குவாதம் வரக் காரணமாகிவிடும்.
அமெரிக்க எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் அகாடமியின் செய்தித் தொடர்பாளரும் எலும்பியல் வல்லுநருமான டாக்டர் லியோன் பென்சன்
நீங்கள் அடிக்கடி நெட்டி முறிப்பவர்களில் ஒருவராக இருந்தால், இது உங்களுக்கு ஏன் மோசமானது என்பதை இப்போது தெரிந்து கொள்வீர்கள்.
Knuckle cracking side effects – மூட்டு வலி:
இதைச் செய்வதன் மூலம் உங்கள் வலி குறைகிறது என்று நீங்கள் நினைத்தால் அது உண்மை கிடையாது. அதற்கு பதிலாக, உங்கள் விரல்களிலும் மணிக்கட்டிலும் அதிக வலியை ஏற்படுத்துகிறீர்கள்.
வீக்கம்:
பொதுவாக நெட்டி முறிக்கும் போது வீக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
அடிக்கடி நெட்டி முறிப்பது உங்கள் மூட்டுகளுக்கு இடையில் குழிகளை உருவாக்குகிறது. இதனால் விரல்கள் பலவீனமாக மாறலாம்.
பலவீனமான விரல்கள்:
காலப்போக்கில் கைகளில் செயல்பாடு குறைவு ஏற்படுகிறது.
இது பெரும்பாலும் கடுமையான நிகழ்வுகளில் ஏற்படுகிறது. குருத்தெலும்பு தடித்து போகலாம்.
எலும்பு வடிவத்தை மாற்றுகிறது வளைந்த விரல்களை உண்டாக்குகிறது.
எனவே எப்போதாவது நெட்டி முறிப்பதால் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. அடிக்கடி இதனை செய்து வந்தால் மட்டுமே சிக்கல் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.