Horror movies: அதிகம் பார்ப்பவரா நீங்கள்..?
Horror movies : அதிகம் பார்ப்பவரா நீங்கள்..?
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான விருப்பங்கள் இருக்கத்தான் செய்கிறது.

இதில் சில வித்தியாசமான மனிதர்கள் இருப்பார்கள். அவர்களின் முழு பொழுதுபோக்கே படங்கள் பார்ப்பதுதான்.
குறிப்பாக திகில் வகையை சார்ந்த பேய் படங்களை பார்க்க எப்போதும் அதிகப்படியான மக்கள் விரும்புவார்கள்.
காரணம் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற சுவாரஸ்யமும், ஒருவித சாகச உணர்வும் தான் பயந்தாலும் கூட தொடர்ந்து பேய் படம் பார்க்க சிலரை தூண்டுகிறது.
Horror movies:
சரி, horror movies பார்க்கும் போது நமக்குள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படும் தெரியுமா?
இல்லை என்று நமக்கு தெரிந்த ஒரு விஷயத்தை, உண்மை என்பது போலவே காட்சி படுத்தி நம்மை பயமுறுத்தும் படி தான் படங்களை உருவாக்குகிறார்கள்.
ஆனால் அவை எல்லாம் படம் பார்க்கும் வரை தான். படம் முடிந்த பிறகு பெரும்பான்மையான மக்கள் அதில் இருந்து வெளியே வந்து விடுவார்கள்.
சிலர் மட்டும் அதன் பிறகும் சில நாட்கள் பயந்து கொண்டே இருப்பார்கள்.
மேலும் மூளையில் இருக்கும் அமைக்டலா (Amygdala) என்ற பகுதி தான் இவை அனைத்திற்கும் காரணம். கீழே உள்ள படத்தில் உள்ள சிவப்பு நிற பகுதி தான் அமைக்டலா.

இந்த அமைக்டலா பகுதியில் பல நியூரான்கள் சேர்ந்து கொத்தாக இருக்கும். இதனால் மூளையின் பகுதிகளான ஹைப்போதலாமஸ் மற்றும் ஹிப்போகேம்பஸ் பகுதிகளுடன் தொடர்பு கொள்ள முடியும்.
அமைக்டலா பகுதி மூளையில் உள்ள பரிவு நரம்பு மண்டலம் (sympathetic nervous system) பகுதியை ஹைப்போதலாமஸ் மூலம் முடுக்கி விடும்.
பயத்தை ஏற்படுத்தும் விஷயங்களுக்கு எதிர்வினை ஆற்றுவதற்கான பொறுப்பு இந்த ஹைப்போதலாமஸிடம் தான் உள்ளது. பயம் வந்தவுடன் கத்தி வேகமாக தப்பித்து ஓட வலியுறுத்தும்.
விளைவு இது நமது சிறுநீரகத்தின் மேல்பரப்பில் இருக்கும் அட்ரீனல் சுரப்பியை அட்ரினலின் ஹார்மோனை சுரக்க தூண்டும்.
இப்படி அட்ரினலின் ரத்தத்தில் கலந்தவுடன் ரத்தக் குழாய்களைச் சுருக்கி, தசைகளுக்கு அதிக ரத்தம் கிடைக்கச் செய்யும்.
எனவே தான் நம்முடைய இதயம் துடிக்கும் வேகம் வழக்கத்தை விட அதிவேகமாகும், வியர்வையும் அதிகமாகும், உள்ளங்கைகள் ஜில் என்று இருக்கும், வாய் உலர்ந்து சுவாசம் ஆழமாகும்.
இவ்வளவு மாற்றங்கள் நிகழ்வதால் தான் இந்த நேரத்தில், உடலில் ஏற்படும் வலி கூட நமக்குப் பெரியதாகத் தோன்றாது.
இதனால் தான் ஒரு திகில் படமோ பேய் படமோ பார்ப்பவர்கள் கத்துவார்கள், குதிப்பார்கள் அல்லது அதிக சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
த்ரில்லர் படங்கள்
மேலும் த்ரில்லர் படங்கள் பார்ப்பதால் வாழ்வில் ஏற்படும் பயங்கரமான சூழ்நிலைகளை சமாளிக்கும் திறமை வளர வாய்ப்புள்ளது என்று சில ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
ஆனால் கண்டிப்பாக எல்லாருக்கும் இல்லை.
எண்ணம் என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடும் என்பதால் அதாவது ஒரே படத்தை இருவர் பார்க்கும் போது அது இருவருக்கும் முற்றிலும் ஒரே மாதிரியான விளைவை தான் ஏற்படுத்தும் என்றும் சொல்ல முடியாது.
தொடர்ந்து திகில் படங்கள் பார்ப்பது பயத்தை ஒரேயடியாக விரட்டவும் வழி செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
தொடர்ந்து பேய் படங்களை பார்க்க பார்க்க ஒரு கட்டத்தில் அது நமக்கு போர் அடித்து பயம் முற்றிலுமாக தெளிந்து விடும்.
இது போன்ற படங்கள் பதட்டத்தையும், சிலருக்கு கலோரிகளை கூட குறைப்பதாகவும் சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Also Read: Bananas:வாழைப்பழங்களை இப்படி சாப்பிடவே கூடாதாம்..!
மேலும் பேய் படங்களை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் ஏற்படவும் நிறைய வாய்ப்புண்டு.
அதே போல பேய் படங்களை குழந்தைகள் பார்க்க அனுமதிக்கவே கூடாது.
ஏனெனில் பொய் என்று தெரிந்தாலும் கூட தங்களை மீறி பெரியவர்களே பயப்படும் போது குழந்தைகள் உண்மை என்று நம்பி மன ரீதியாக பாதிக்கப்படுவார்கள்.
எனவே மொத்தத்தில் பேய் மற்றும் திகில் படங்களால் நன்மையும் வரலாம், தீமையும் வரலாம்.
அது பார்ப்பவரின் மன நிலையின் தீவிரத்தை பொறுத்தது.
அதனால் எந்த மன ரீதியான பாதிப்பிற்கும் இடம் கொடுக்காத அளவிற்கு பார்ப்பது மட்டும் தான் அனைவருக்குமே நல்லது.