Food High in Fiber: காலிஃபிளவர் இலைகளில் இவ்வளவு நன்மைகளா..!
Food High in Fiber: காலிஃபிளவர் இலைகளில் இவ்வளவு நன்மைகளா..!
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு காய்கறி காலிஃபிளவர்.
இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

Cauliflower Leaves Benefits:
ஆனால், இதன் இலைகள் பற்றி நாம் அறிந்ததில்லை.
இதன் இலைகளும் நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
பல்வேறு விதங்களில் நாம் அனைவரும் காலிஃபிளவரை சமைத்து சாப்பிட விரும்புவோம்.
இருப்பினும், இந்த குளிர்ச்சி நிறைந்த காய்கறியின் தண்டு மற்றும் இலைகள் இரண்டிலும், ஊட்டச்சத்துகள் உள்ளன என்பதை உணராமல் நாம் இவற்றை நீக்குவோம்.
இந்த இலைகளின் நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்:
இவற்றின் இலைகளில் இயற்கையான ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது, மேலும் இவை புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.
கூடுதலாக, அடர்ந்த பச்சை இலைகளைச் சேர்த்து கொள்வது உங்கள் இரவு உணவை இன்னும் ஆரோக்கியமாக்கும்.
ஏனெனில், அவைகள் அதிக அளவு பைட்டோநியூட்ரியன்களை (phytonutrients) கொண்டுள்ளது.
பைட்டோநியூட்ரியன் என்பது தாவரங்களில் காணப்படும் இயற்கை சேர்மங்களாகும்.
புரதச்சத்து நிறைந்தது:
புரதம் மற்றும் தாதுக்கள் காலிஃபிளவர் இலையில் அதிகம் காணப்படுகிறது.
இவைகள் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும், இவை குழந்தைகளின் உயரம், எடை மற்றும் ஹீமோகுளோபின் (hemoglobin) வளர்ச்சிக்கு உதவுகிறது.
எனவே உங்கள் குழந்தைகளுக்கு காலிஃபிளவர் இலைகளை வைத்து உணவு மற்றும் தின்பண்டங்கள் செய்து கொடுங்கள்.
Food High in Fiber:
ஃபைபர்(Fiber) நிறைந்தது:
இத்தகைய இலையில் நார்ச்சத்து அதிக அளவு காணப்படுகிறது.
இது உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு ஏற்ற உணவாகும். சாலட்(salad), சிக்கன் டிஷ்(chicken dish), சூப்(soup) போன்ற உணவுகளிலும் சேர்த்து சாப்பிடலாம்.
வைட்டமின் ஏ அதிகம் :
ஆய்வுகளின்படி, காலிஃபிளவர் இலைகளில் வைட்டமின் ஏ காணப்படுகிறது.
ரெட்டினோலின் அளவை திறம்பட உயர்த்துகின்றன.
ரெட்டினோல் எனப்படுவது உடல் செயல்பாடு மற்றும் ஆரோக்கியமாக இருக்க சிறிய அளவில் தேவைப்படும் ஒரு ஊட்டச்சத்தாகும்.
மேலும், இது கண் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் இரவில் ஏற்படும் பார்வை குறைப்பாட்டை தடுக்கவும் பயனுள்ளதாக இருக்கிறது.

What is Free Radicals?
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் :
அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.
ஃப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் நிலையற்ற அணுக்கள், செல்களை சேதப்படுத்தும் நோய் மற்றும் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும்.
ஆனால் காலிஃபிளவர் இலைகள், இந்த ஃப்ரீ ரேடிக்கல்(Free radical) சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
ஆதலால், காலிஃபிளவர் இலைகளை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
கால்சியம் நிறைந்தது :
இந்த இலைகளில் கால்சியம் அதிக அளவு காணப்படுகிறது.
அவைகள் மாதவிடாய் நின்ற பெண்களின் பிரச்சனைகளை குறைக்க உதவுவதால் பெண்களுக்கு நல்லது.
ஆதலால், பெண்கள் தங்கள் உணவுகளில் காலிஃபிளவர் இலைகளைச் சேர்த்துக்கொள்வது அவசியம்.
இலைகளின் நன்மைகள்:
நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகிய இரண்டிற்கும் காலிஃபிளவர் இலைகள் ஒரு நல்ல மூலக்கூறாகும்.
இதில் வைட்டமின் ஏ, ஃபோலேட்(Folate), கால்சியம் மற்றும் பொட்டாசியம் மற்றும் செலினியம்(Selenium) ஆகியவை உள்ளது.
Also Read: Ayurvedic Medicine: பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த நிலவேம்பு கசாயத்தின் நன்மைகள்..!
இவை வைட்டமின் சி உடன் இணைந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இதனால், நோய்தொற்று ஏற்படுவது குறையும்.
குழந்தைகள் மற்றும் உங்கள் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குவதால் காலிஃபிளவர் இலைகளை உங்கள் உணவில் எடுத்துக்கொள்ளுங்கள்.