Achyranthes Aspera: நாயுருவி மூலிகையை சாப்பிட்டால் பல நோய்கள் தீருமா..!
Achyranthes Aspera: நாயுருவி மூலிகையை சாப்பிட்டால் பல நோய்கள் தீருமா..!
நாயுருவி அல்லது அபமார்க்கி இதன் தாவரவியல் பெயர்; அசய்ரந்தெஸ் அஸ்பெர (Achyranthes aspera) என்பதாகும்.
இது ஓர் மருத்துவ மூலிகைச் செடியாகும்.

Achyranthes Aspera:
இச்செடி ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வரை நிமிர்ந்து வளரும் தன்மைக் கொண்டது.
இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் அதிகம் காணப்படுகிறது.
நாயுருவிக்கு “அபமார்க்கி, காஞ்சரி, சரமஞ்சரி, சேகரீகம், நாயரஞ்சி, மாமுனி” போன்ற மாற்றுப் பெயர்களும் உண்டு.
இதன் நெற்றுகள் ஒட்டும் தன்மை உடையவை, அவை விலங்குகளின் மேல் ஒட்டிச் சென்று வேறு இடங்களில் பரவும்,
இவ்வாறு தன் வாழிடத்தை பெருக்கிக் கொள்ளும்.
தன் இலை மற்றும் வேர்களுக்கென தனித்துவமான மருத்துவக் குணங்களை கொண்டுள்ளது.
அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய ஒரு வகையான சிறுசெடி ஆகும்.
நாயுருவி இலைகள் முட்டை வடிவமானவை, எதிரடுக்கிலே அமைந்தவை.
நாயுருவி தண்டுகள் பட்டையானவை, நாயுருவி மலர்க்கொத்துகள் நீண்டவை, நுனியிலோ கிளைகளிலோ காணப்படும்.
மலர்கள் சிறியவை மற்றும் இருபால் தன்மையானவை.
நாயுருவி விதைகளினை சுற்றி முட்கள் இருப்பதால், இவை எளிதில் ஒட்டிக்கொண்டு பரவும் தன்மை உடையது.
தமிழகமெங்கும், தரிசு நிலங்கள், சாலையோரங்கள் மற்றும் ஈரப்பாங்கான பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றன.
நாயுருவியினை எரித்தால் கிடைக்கும் சாம்பலில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது.
மலைப்பகுதியில் வளரும் செடிகள் சிவப்பான தண்டுகளுடன், சிவந்த இலைகளுடன் காணப்படும்.
இவற்றுக்கு செந்நாயுருவி அல்லது படருருக்கி என்று பெயர்.
Achyranthes Aspera Uses:
நாயுருவியின் முழுத்தாவரமும் கசப்பு, துவர்ப்பு, மற்றும் காரச் சுவைகள் கொண்டது. மேலும் வெப்பத் தன்மையுடையது.
இது, பிரசவித்த தாய்மார்களின் வயிற்று அழுக்கினை வெளியேற்றப் பயன்படும்.
நாயுருவி இலை மற்றும் வேர்களுக்கென தனித்தனியே மருத்துவக் குணங்கள் உள்ளன.
இலைகள் நரம்புகளை வலுவாக்கும்.
காய்ச்சலைத் தடுக்கும், கழிச்சல், வெள்ளைப்படுதல், அதிக வியர்வை போன்றவற்றைக் குணமாக்கும்.
நீர் கட்டு உள்ளவர்கள் நாயுருவிச் செடியின் இலையையும், காராமணிப் பயிரையும் சம அளவு எடுத்து மையாக அரைத்து நீர்க்கட்டு உள்ளவர்களின் தொப்புள் மீது பற்றுப் போட்டால் நீங்கி குணமாகும்.
நாயுருவிச்செடியின் இலைகளை எடுத்துச் சாறு எடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.

Which Food is Good for Piles?
இரத்த மூலம் இருப்பவர்கள் நாயுருவி இலையை நன்கு அரைத்து அதை ஓர் நெல்லிக்காய் அளவு எடுத்து, எருமைத் தயிரில் கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
நாயுருவியின் இலையினை பருப்புடன் சேர்த்து சமைத்து ஒரு வாரத்தில் இருமுறை சாப்பிட்டு வந்தால் நுரையீரலினை ஒட்டிய சளி, இருமல் நீங்கிவிடும்.
விட்டுவிட்டு வரும் காய்ச்சலுக்கு நாயுருவி இலைகளுடன் மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து மாத்திரைகளாக உருட்டி, உலர்த்திக் கொடுத்தால் குணமாகும்.
மூல நோய்க்கு நாயுருவி இலைக் கொழுந்தைப் பறித்து அதனுடன் சிறிது மஞ்சள் கலந்து அரைத்து மூலத்தில் வைத்துக் கட்டி வர இதம் தரும்.
நாயுருவி வேரினை தூள் செய்து அதை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர உடல் பலமடையும்.
நாயுருவி வேர் அல்லது இலையை நன்கு அரைத்து பசையாக்கி, கொப்பளத்தின் மேல் பூசினால் குணமாகும்.
Also Read: Psoriasis Treatment: புன்னை மரத்தில் இவ்வளவு மருத்துவ பயன்களா..!
குறிப்பு:
மேல் குறிப்பிட்ட செய்திகள் எல்லாம் தெரிந்துகொள்வதற்காக மட்டுமே, எனவே இவ்வைத்தியதை கையாளும் போது, சித்தர் அல்லது மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று பின்பற்றவும்.