இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Facial Yoga: முதுமையைத் தாமதமாக்கும் ஃபேஷியல் யோகா..!

Facial Yoga: முதுமையைத் தாமதமாக்கும் ஃபேஷியல் யோகா..!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். முக அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்களே இல்லை எனச் சொல்லலாம்.

Facial Yoga
Anti Ageing Face Yoga

Facial Yoga:

முகம் பளிச்சிட நாம் மேற்கொள்ளும் பராமரிப்புகள் பல. இளமையைத் தக்க வைப்பதற்கு காஸ்ட்லியான காஸ்மெட்டிக்ஸ், மாதம் தவறாத பார்லர் விசிட்…. இவற்றின் தேவையே இல்லாமல் செய்கிறது ஃபேஷியல் யோகா.

முகத்துக்கான யோகா பயிற்சிகளான இவை, முதுமைத்தோற்றத்தைத் தள்ளிப்போட்டு உங்களை என்றும் பதினாறாக வைக்கும். அதற்கான பயிற்சிகள் இங்கே…

வானத்துக்கு முத்தம் கொடுங்கள் (Blow kisses)

தலையைப் பின்புறமாகச் சாய்த்து, வானத்தை நோக்கிப் பாருங்கள். இப்போது, உதட்டைக் குவித்து, முத்தம் கொடுப்பதுபோல வைக்க வேண்டும்.

இதேநிலையில் சில நொடிகள் இருக்கலாம். பிறகு, பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும். சிறிது இடைவெளி விட்டு இந்தப் பயிற்சியை 10 முறை செய்யலாம்.

வாய் கொப்பளிக்கலாம் (Gargle)

காற்றை, வாய்க்குள் இழுத்து வைத்துக்கொண்டு உதட்டைக் குவிக்க வேண்டும். இப்போது, காற்றை ஒரு கன்னத்தில் இருந்து மறு கன்னத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

இதேபோல் மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சி கிட்டத்தட்ட நாம் வாய்க் கொப்பளிக்கும் செயல்போல் இருக்கும். இதேபோன்று தொடர்ந்து 10 முறை செய்யலாம்.

பப்பெட் ஃபேஸ் (Puppet Face)

புன்னகைத்த நிலையில் கைகளைக் கன்னங்களின்மேல் வைக்க வேண்டும். இப்போது முகத்தின் மீது கைவைத்து மென்மையாக அழுத்தி மேலும் கீழுமாக அசைக்க வேண்டும்.

இந்தப் பயிற்சியை உதட்டுக்கு மேல் மட்டும்தான் செய்ய வேண்டும். இதை 10 விநாடிகள் வரை செய்யலாம்.

மெல்ல மெல்லப் புன்னகை:

சாதாரணமாக முகத்தை வைத்துக் கொள்ளவேண்டும். மெல்ல மெல்லப் புன்னகை செய்ய வேண்டும். கண்கள் சாதாரணமாக இருக்கட்டும். இதேபோல், ஐந்து முறை செய்யலாம்.

ஆச்சர்யப்படுத்துங்கள்:

சாதாரணமாக முகத்தை வைத்துக் கொள்ளவேண்டும். இப்போது, ஆச்சர்யப்படுவதுபோல் முகத்தின் பாவனையை மாற்ற வேண்டும். மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும்.இதேபோல் மாறி மாறி ஐந்து முறை செய்யலாம்.

கண் சுருக்கத்திற்கு விடைக் கொடுங்கள்:

இது கண்களின் மூலையில் வயதைக் கொண்டு உருவாகும் நேர்த்தியான கோடுகள். நீங்கள் ஆச்சரியப்படுவதைப் போல கண்களை அகலமாகத் திறக்கவும்.

உங்கள் கையின் உதவியுடன் இந்த பயிற்சியைச் செய்யும்போது தோலை மீண்டும் இழுக்கவும்.
இந்த யோகாகள் உங்கள் முகத்தின், பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட, சோர்வான தசைகளுக்கு புத்துயிர் அளிக்க உதவி செய்யும்.

முக யோகாவின் நன்மைகள்:

ஃபேஸ் யோகா அல்லது முக யோகா என்பது உங்கள் முக தசைகளை நிதானப்படுத்தவும் தொனிக்கவும் உதவும் பயிற்சிகளின் தொகுப்பாகும்.

முக யோகாவின் சில நன்மைகள் குறித்து உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம்.

1.வயதான செயல்முறையை மெதுவாக்க உதவுகிறது

உங்களுக்கு வயதாகும்போது, ​​நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களை நீங்கள் காணலாம் மற்றும் உங்களையும் வயதாகக் காணலாம்.

முகம் நீட்சி மற்றும் பிற உடற்பயிற்சிகளால், நீங்கள் இந்த நேர்த்தியான கோடுகளிலிருந்து விடுபட முடியும், மேலும் இறுக்கமான தோலைப் பெறுவீர்கள்.

2.இது பதற்றத்தை வெளியிட உதவுகிறது

யோகா நம்மை அமைதிப்படுத்த உதவுகிறது.

உங்கள் வாழ்க்கை முறைகள் 8 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் உட்கார வழிவகுத்ததுள்ளதா ? இதனால் முதுகெலும்பு, கழுத்து மற்றும் முக்கிய தசைகள் மீது அதிக பாதிப்பு ஏற்படுகிறது.

Also Read: Radish Benefits for Health: இதயத்தின் நண்பன் – சிவப்பு முள்ளங்கி சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்..!

முக யோகா பதற்றத்தை வெளியிட உதவுகிறது மற்றும் ஓய்வெடுக்க உதவுகிறது.