இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Jackfruit Benefits: சர்க்கரை நோய்க்கு மருந்தாக பச்சைப் பலா மாவு – இன்ஜினீயர் ஒருவரின் கண்டுபிடிப்பு..!

Jackfruit Benefits: சர்க்கரை நோய்க்கு மருந்தாக பச்சைப்பலா மாவு – இன்ஜினீயர் ஒருவரின் கண்டுபிடிப்பு..!

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தணுமா… பலா சாப்பிடுங்க! என்று ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் நம்மிடம் சொன்னால் நாம் என்ன செய்வோம் அதை காதில் கூட வாங்காமல் கடந்துபோவோம் தானே!

best medicine for diabetes - newstamilonline

Jackfruit Benefits:

ஆனால், இந்த இன்ஜினீயர் சொன்னதை இப்போது உலகமே கேட்க ஆரம்பித்திருக்கிறது!

“வேணில் சக்க… வேரிலும் காய்க்கும்!” அதாவது “வேண்டும் என்றால் பலா, கிளையில் மட்டுமல்ல வேரிலும் காய்க்கும்” என்று விடாமுயற்சியுடைவர்கள் எப்படியும் வெற்றியடைவார்கள் என்பதைச் சொல்லும் மலையாளப் பழமொழி இது.

இந்தப் பழமொழியைப் போலவே ஒருவரின் விடாமுயற்சியின் மூலம் இப்போது சர்க்கரை நோய்க்கு மருந்து பலாவில் இருந்தே கிடைத்திருக்கிறது.

இந்தியாதான், உலகின் சர்க்கரை நோயாளிகளின் தலைநகரம் என்று சொல்லும் அளவிற்கு, நம்மிடையே சர்க்கரை நோய் அதிகளவு காணப்படுகிறது.

கேரளாவைச் சேர்ந்த பெங்களூர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு இன்ஜினீயர் தான் இந்த ஜேம்ஸ் ஜோசப்.

தினசரி தன்னைச் சுற்றி வேலையிடத்திலும், சொந்தங்களிலும் சர்க்கரை நோயாளிகளைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போயிருந்த ஜோசப்பின் வாழ்க்கையில் திடீரென ஒரு திருப்புமுனை சம்பவம் நடந்தது.

2013-ம் ஆண்டு ஜேம்ஸ் ஜோசப் சந்தித்த பாதிரியார் ஒருவர், தான் அரிசி உணவிற்கு பதிலாக பச்சைப் பலாவை உட்கொண்டதால் தனக்கு சுகர் கன்ட்ரோலில் இருப்பதாக சொல்ல அதைப்பற்றி தொடர்ந்து யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்.

தொடர்ந்து சர்க்கரை நோயையும், பலாவையும் பற்றி பல தகவல்களையும் தேடிப் படிக்கத் தொடங்கினார்.

இரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் ஹார்மோனின் உற்பத்தியின்மையால் ஏற்படுவது டைப் 1 டயாபடிஸ் என்று அழைக்கப்படுகிறது.

இதுவே உடலில் உற்பத்தியாகும் இன்சுலினை உடலின் திசுக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால் அதை டைப் 2 டயாபடிஸ் என்று மருத்துவம் அழைக்கிறது.

சிறு வயதில் ஏற்படும் முதலாவது நோய்வகைக்கு இன்சுலின் ஊசிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆனால், வாழ்க்கைமுறை மாற்றங்களால் நாற்பதுகளில் ஏற்படும் இரண்டாவது நோய்வகைக்கு, உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் என்ற கூட்டு சிகிச்சையே (medical nutrition therapy) பரிந்துரைக்கப்படுகிறது.

பச்சைப்பலா மாவு-எண்ணம் தோன்றியது எப்படி?

பச்சைப் பலாவில், உடனடியாக ஆற்றலைக் கூட்டாத மாவுச்சத்து (low glycemic index) உள்ளது என்பதை அறிந்துகொண்ட ஜோசப் மேலும் இதில் குறைவான கலோரிகள், அதிகளவில் நார்ச்சத்து மற்றும் நீர்த்தன்மை அதனுடன் கூடிய மாங்கனீஸ், மெக்னீசியம் போன்ற கனிமங்கள் உள்ளது என்பதையும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் தேவையான இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் என்பதையும் தெரிந்து கொள்கிறார்.

இதைத் தொடர்ந்து ஜோசப், தனது IT பணியை உதறிவிட்டு, தனது சொந்த மண்ணான கேரளாவின் ஆலுவா நகரில், பச்சை பலாவைப் விளைவிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

சீக்கிரமே பழுத்து அழுகிவிடும் நிலையில் இந்த பலாப்பழம் இருந்ததால், முயற்சிகள் அனைத்தும் எளிதாக அமையாமல் மனம் உடைந்திருந்த நேரத்தில், டாக்டர் அப்துல் கலாம் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது.

அப்படி சந்தித்தபோது தனது முயற்சியையும், அதன் நன்மைகள் குறித்தும் ஜோசப் அவரிடம் பகிர்ந்துகொள்கிறார்.

பொது மக்களின் உணவு பழக்கங்களை பாதிக்காத வகையில் இதையும் உணவாகவே உருவாக்க முயற்சி செய்யலாமே என்று அப்துல் கலாம் சொன்ன வார்த்தைகள்தான் இவரது ஆராய்ச்சியில் மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

ஜோசப் -எட்டு வருட விடா முயற்சி:

பின்பு பச்சைப் பலாவில் இருந்து மாவு தயாரிக்க முடிவுசெய்த ஜோசப் தனது எட்டு வருட விடா முயற்சியில், பழுக்காத, ஆனால் முற்றிய பச்சைப் பலாப்பழத்திலிருந்து, உறைந்து உலர்த்தும் தொழில்நுட்பம் கொண்டு (freeze drying technology) எதிலும் கலக்கக் கூடிய, சுவை மற்றும் மணமற்ற சமநிலை மாவைத் தயாரித்தார்.

இந்த மாவின் மருத்துவ குணங்களை நிரூபிக்க 2019-ம் ஆண்டு மே மாதம் தொடங்கி, 2020 பிப்ரவரி மாதம் வரை நடந்த ஆய்வில், 18 முதல் 60 வயதுவரை உள்ள சர்க்கரை நோயாளர்களை இரு குழுக்களாகப் பிரித்து தேர்வுசெய்தனர்.

அவர்களில் ஒரு குழுவினருக்கு, மருந்துகளுடன் பச்சைப் பலா மாவு ஒரு நாளில் முப்பது கிராம் அளவில் (30g/d) உணவாக கொடுக்கப்பட்டது.

மற்றொரு குழுவினருக்கு மருந்துகள் மட்டுமே கொடுத்து, அதன்பின் தொடர் சர்க்கரை அளவு பரிசோதனைகளும், மூன்று மாத சர்க்கரை கட்டுப்பாட்டைக் காட்டும் HbA1c அளவின் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வின் இறுதியில், பலா மாவை உணவில் உட்கொண்ட சர்க்கரை நோயாளர்களுக்கு, ஃபாஸ்ட்டிங் மற்றும் உணவிற்குப் பின்னான சர்க்கரை அளவுகளும், குறிப்பாக HbA1c அளவும் நன்கு கட்டுக்குள் இருந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வினை அமெரிக்க டயாபடிஸ் அசோசியேஷனுக்கும், ஆஸ்திரேலிய அமைப்பிற்கும் அனுப்பி வைத்ததுடன், சமீபத்தில் இந்திய பிரதமர் மோடியின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார் ஜேம்ஸ் ஜோசப்.

அதனால் இப்போது அதிக கவன ஈர்ப்பை பெற்றுள்ளது. ஜோசப் இந்த பச்சைப்பலாவில் மாவு தயாரிக்க கேரளத்தில் jackfruit365 என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இந்த மாவை நீங்கள் தினமும் உட்கொள்ளும் இட்லி அல்லது ரொட்டியின் அரிசி மற்றும் கோதுமை மாவில், ஒன்று அல்லது இரண்டு டேபிள்-ஸ்பூன் சேர்த்துக் கொண்டால், உங்களது சர்க்கரை அளவு நன்கு கட்டுப்பாட்டுக்குள் வரும்.

கடந்த 2 வருடங்களாக எனது மூன்று வேளை உணவிலும் தலா ஒரு தேக்கரண்டி பலாப்பழப் பொடியை சேர்த்து வருகிறேன்.

Also Read: Benefits of sea food: இளமையான தோற்றம் வேண்டுமா? கடல் உணவுகளே சிறந்த மருந்து..!

ஆனால், ஒரு வருடத்திலேயே இன்சுலினை நிறுத்தி, சர்க்கரை அளவை வெறும் மாத்திரைகளால் கட்டுப்படுத்த முடியும் எனும் அளவுக்கு சர்க்கரை குறைந்துவிட்டது என்கிறார் இந்த மாவின் பயனாளர் ஒருவர்.

தற்சமயம் பச்சைப்பலா மாவு இந்தியா தாண்டி ஆசிய மற்றும் அரபு நாடுகளில், பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது.