Nattu Sakkarai Benefits: இதய நோய்களில் இருந்து காக்கும் நாட்டுச் சர்க்கரை..!
Nattu sakkarai benefits: இதய நோய்களில் இருந்து காக்கும் நாட்டுச் சர்க்கரை..!
வெள்ளை சர்க்கரை பயன்பாட்டை குறைத்துக் கொண்டு நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தவும். ஏனெனில் இதில் பல நன்மைகள் இருக்கிறது.

நாட்டுச் சர்க்கரை கலோரிகளின்றி உடலின் ஆற்றல் அதிகரிக்கும் சக்தி கொண்டது. ஆனால் தற்போது நாம் பயன்படுத்தும் சர்க்கரையில் கலோரிகள் மிகவும் அதிகம் என்பதை மறக்க வேண்டாம்.
கருப்பட்டி உடலினுள் செல்லும் போது அசிட்டிக் அமிலமாக மாறி, வயிற்றில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை அதிகரித்து, எளிதில் செரிமானமாகச் செய்யும் இதுவே மலச்சிக்கலை தடுக்க உதவும்.
Nattu Sakkarai Benefits:
நாட்டுச் சர்க்கரை இதய நோய்களில் இருந்து காக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டும். புற்று நோய் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்.
இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைந்திருந்தால் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவில் இதுவும் ஒன்று.
நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இந்த கொழுப்பு சேர்மானத்தை தடுக்க முடியும். இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
வெள்ளை சர்க்கரையில் உள்ள சில ரசாயனங்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோயை ஏற்படுத்த கூடும். நாட்டு சர்க்கரை பயன்பாடு இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தாது.
உடல் எடைக் குறையும் :
வெள்ளை சர்க்கரையைக் காட்டிலும் நாட்டுச் சர்க்கரையில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடை குறைக்க நினைப்போர் நாட்டுச் சர்க்கரை பயன்படுத்துதலாம்
ஆஸ்துமா குறையும் :
ஆஸ்துமா பிரச்னை, மூச்சு வாங்குதல், நுரையீரல் போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் நாட்டுச் சர்க்கரையை தினமும் காலையில் டீ, காஃபிக்குக் கூட சேர்ப்பது நல்லது.
கருப்பைக்கு நல்லது :
மாதவிடாய் சமயத்தில் நாட்டுச் சர்க்கரை சாப்பிடுவது மிகவும் நல்லது. காரணம் கருப்பை தசைகளை தளர்வாக்கி வலியில்லா மாதவிடாய்க்கு நாட்டுச் சர்க்கரை வழிவகுக்கிறது.
வயிற்றுக்கோளாறுக்கு நல்லது :
வயிறு தொடர்பான அஜீரணம், வயிற்றுக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கு நாட்டுச்சர்க்கரை தீர்வு தரும்.
Also Read: சமையலுக்கு உகந்த எண்ணெயைத் தேர்வுசெய்வது எப்படி..?
சோர்வை நீக்கும் :
சுருசுருப்பு இல்லாமல் சோர்வாக இருப்பவர்கள் அல்லது தொடர் வேலை களைப்பு இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சாப்பிட்டால் களைப்பு , சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.