இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Benefits Of Castor Oil: ஆமணக்கு எண்ணெய்யில் உள்ள அற்புத பயன்கள்..!

Benefits Of Castor Oil: ஆமணக்கு எண்ணெய் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கிய எண்ணெய் வகை ஆகும்;

ஆமணக்கு விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெயை விளக்கெண்ணெய் என்றும் கூறுவர். இதனால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்.

Benefits Of Castor Oil

Benefits Of Castor Oil:

Castor oil பொதுவாக வயிற்றைச் சுத்தம் செய்வதற்காகவும், வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றுவதற்காகவும் பயன்படுத்தப்டுகின்றது.

ஆயுர்வேத மருத்துவத்தில் வாயுத் தொல்லைகளை விலக்க உதவுகின்றது.

உடல் வெப்பத்தினால் கண்கள் சிவந்திருந்தால், சுத்தமான விளக்கெண்ணெய் 2 துளியை கண்களில் விட குணம் கிடைக்கும்.

ஆமணக்கு இலை, வாத நோயாளிகளுக்குச் சிறப்பான மருந்து. ஆமணக்கு இலையை, விளக்கெண்ணெயிலேயே லேசாக வதக்கி, மூட்டுகளின் வீக்கம், வலிக்கு ஒத்தடம் இட்டால் வலி நீங்கும்;

வீக்கம் வடியும். பச்சிளம் குழந்தைகளைத் தாய்போல வளர்க்கும் பண்பினை ஆமணக்கு எண்ணெய் கொண்டுள்ளதாக நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆமணக்கு விதையின் மேல்தோலை நீக்கி, பருப்பை அரைத்து, பசையாக்கி, கட்டிகளின் மீது பூசிவர கட்டிகள் உடையும்.

ஆமணக்கு இலையுடன் சம அளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து வெண்ணெய் போல அரைத்து எலுமிச்சம்பழம் அளவிற்கு காலையில் மட்டும் உள்ளுக்குள் கொடுக்க வேண்டும்.

3 நாட்கள் இவ்வாறு செய்ய மஞ்சள் காமாலை குணமாகும். இந்த நாட்களில் உணவில் புளி, உப்பு நீக்கிப் பத்தியம் கடைபிடிக்க வேண்டும்.

4 தேக்கரண்டி அளவு ஆமணக்கு எண்ணெய், 1 தேக்கரண்டி அளவு தேன் ஆகியவற்றை நன்றாகக் கலந்து உள்ளுக்குள் சாப்பிட சுகபேதியாகும்.

சிறுவர்களுக்கு இந்த அளவில் பாதியும், கைக்குழந்தைகளுக்கு இந்த அளவில் நான்கில் ஒரு பங்கும் தரலாம். இது ஒரு சிறந்த கை மருந்தாகும்.

Also Read: சமையலுக்கு உகந்த எண்ணெயைத் தேர்வுசெய்வது எப்படி..?

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க பசுமையான ஆமணக்கு இலையை நெய் தடவி, அனலில் இலேசாக வதக்கி, இளஞ்சூடான நிலையில் மார்பில் வைத்துக் கட்டலாம்.

அல்லது ஆமணக்கு இலையைச் சிறு துண்டுகளாக அரிந்து, தேவையான அளவு துவரம் பருப்பு சேர்த்து கீரையாகச் செய்து சாப்பிட்டு வர வேண்டும்.

ஆமணக்கு விதைகளைப் பச்சையாக / காய்ந்த நிலையில் அப்படியே சாப்பிடுவது மிகவும் நச்சுத்தன்மையானது, மரணம் கூட சம்பவிக்கலாம்.