இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Benefits Of Dark Chocolates: Chocolates யார் சாப்பிடலாம்..? யார் சாப்பிடக்கூடாது..?

Benefits Of Dark Chocolates: Chocolates யார் சாப்பிடலாம்..? யார் சாப்பிடக்கூடாது..?

Chocolates சாப்பிட்டால் பற்களில் சொத்தை விழும் என்று குழந்தைகளை பெற்றோர் பயமுறுத்தி வந்த காலம் போய், “சாக்லேட் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வராது’ என மருத்துவ நிபுணர்களே கூறும் காலம் வந்துவிட்டது.

Benefits Of Dark Chocolates

குழந்தைகள், இளைஞர்கள் சாக்லேட் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதில் டார்க் சாக்லேட்டில் நிறைய நன்மைகள் உண்டு. மற்ற இனிப்பு சேர்க்கப்பட்ட சாக்லெட்டில் சர்க்கரையின் அளவு அதிகம் இருக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு கொகோ நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனால் ஏன் அவர்கள் சாக்லேட் சாப்பிடக் கூடாது என்றும் சொல்கிறார்கள்.

ஏனெனில் இயல்பாக டார்க் சாக்லேட்டில் சர்க்கரை அளவு குறைவு. அதை சாப்பிடலாம். ஆனால் இனிப்பு அதிகம் சேர்க்கப்பட்ட சாக்லெட் சாப்பிடக்கூடாது.

கொகோ சாக்லெட்டில் குறைந்த கிளைசெமிக் குறியீடு இருப்பதால் அது அவ்வளவு தீவிரமான தாக்கத்தை உங்களுடைய ரத்த சர்க்கரை அளவில் ஏற்படுத்துவதில்லை.

Benefits Of Dark Chocolates:

Chocolates சாப்பிட்டால் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த முடியும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் சர்க்கரை வியாதியை அதிகப்படுத்தாமல் பார்த்துக் கொள்கிறது.

இதில் அதிக அளவு கொழுப்பும் அதேபோல் அதிக நார்ச்சத்தும் கொண்டிருக்கிறது. இவை இரண்டுமே ஜீரண சக்தியைத் தாமதப்படுத்தும்.

மில்க் சாக்லெட் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட டார்க் சாக்லெட்டுகளில் கிளைசெமிக் குறியீடு மிக அதிகமாக இருக்கிறது.

ஆனாலும் அதில் சர்க்கரை சேர்க்கப்பட்டதால் குறைந்த கிளைசெமிக்கும் அதிக சர்க்கரையும் இருக்கிறது.

அதனால் தான் சாக்லேட் சாப்பிடக் கூடாது என்று சொல்லப்படுகிறது.

Chocolates

​டைப் 2 நீரிழிவு உள்ளவர்கள் சாக்லேட், சர்க்கரை சேர்க்காத சாக்லேட் சாப்பிடுகிற பொழுது, இன்சுலின் சுரப்பைத் தூண்டப்படுகிறது.

உடலில் உள்ள பீட்டா செல்களைத் தூண்டி, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. இவையிரண்டும் ரத்த சர்க்கரையின் அளவைக் குறைப்பதோடு கட்டுப்பாட்டுடனும் வைத்திருக்க உதவுகிறது.

அதிலும் குறிப்பாக நீங்கள் உணவு எடுத்துக் கொள்ளும் அதேவேளையில் சாக்லேட்டை சேர்த்து சாப்பிட்டால் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவின் அளவும் கலோரியும் வெகுவாகக் குறையும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

Chocolates

மூளை சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட டார்க் சாக்லேட்டில் உள்ள ஒரு காரணி ஆனது பெரிதும் உதவுகிறது.

டார்க் சாக்லேட்டில் உள்ள மற்றொரு காரணியானது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

சருமத்திற்கு தேவைப்படும் நீர்ச்சத்தைப் பாதுகாத்து எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்கிறது.

Also Read: பாதம் வெடிப்பு நீங்க சில இயற்கை வைத்தியம்..!

இதனால் தோல் சுருக்கம் அடைவதை குறைக்கலாம். அதனால் பெண்கள் சாக்லேட் வேக்ஸ், சாக்லெட் பேஸ்பேக் போன்றவற்றில் சாக்லெட் பயன்படுத்தப்படுகிறது.

டார்க் சாக்லெட்டில் உள்ள ஒரு சில மூலக்கூறுகள் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. அதுமட்டுமல்லாமல் சர்க்கரை வியாதியையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது.

டார்க் சாக்லேட் சாப்பிடும் பொழுது, உங்களுக்கு அதிக பசி எடுப்பதை தடுத்து விடுகிறது. எனவே அதிகம் சாப்பிடுவதையும் குறைத்து விடுகிறது.

இதனால் ஒரு சிலருக்கு உடல் எடையை குறைந்துள்ளதாக கூறுகின்றனர். அதனால் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் சர்க்கரை சேர்க்காத டார்க் சாப்பிட பரிந்துரைக்கிறார்கள்.