இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Hair Growth Tips: முடி கருகருன்னு நீளமாக இருக்க நெல்லிப் பொடி பயன்படுத்துங்க..!

Hair Growth Tips: முடி கருகருன்னு நீளமாக இருக்க நெல்லிப் பொடி பயன்படுத்துங்க..!

தலைமுடி நன்கு கருப்பாக வளர வேண்டும் என்று விரும்பாதவரே கிடையாது. நடுத்தர வயதுக்கு பிறகும் முடி கருப்பாகவே இருக்க வேண்டுமென்றால் அதற்கு முதல் சாய்ஸ் ஆம்லா நெல்லிதான்.

Hair Growth Tips - newstamilonline

Hair Growth Tips:

உடல், சருமம், கூந்தல் என மூன்றுக்குமே அதிக ஆரோக்கியம் தரும் சூப்பர் ஃபுட் என்று நெல்லிக்காய் சொல்லப்படுகிறது. இளமையை தக்க வைக்கும் சிறந்த கனி என்பது போல இது முடி உதிர்தல், இளநரை, முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளையும் தீர்க்கும் வல்லமை கொண்டது.

கூந்தலின் கருமையான நிறத்தை பாதுகாக்க நெல்லிப்பொடி உதவும். ஆயுர்வேத மருத்துவத்தின் படி பித்தம் காரணமாக தலைமுடி அதிகமாக நரைக்க தொடங்குகிறது.

Hair Growth Tips முடி கருகருன்னு நீளமாக இருக்க நெல்லிப் பொடி பயன்படுத்துங்க..! பெரும்பாலும் இயற்கை மற்றும் செயற்கை ஹேர் டை என இரண்டிலும் பெருமளவு நெல்லிக்காய் பயன்படுத்தப்படுகிறது.

முடியை கருமையாக்க செய்வதால் எல்லாவிதமான கூந்தல் பிரச்சனைக்கும் ஏற்றதாக உள்ளது.

வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டிருப்பதால் இது சிறப்பாக செயல்படுகிறது இந்த நெல்லிக்கனியை வைத்து கூந்தலுக்கு என்னவிதமான பராமரிப்பு செய்யலாம் என்று பார்க்கலாம்.

Hair Growth Tip- newstamilonline

​நெல்லிப்பொடி:

நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி ஆனது எப்போதும் எல்லா காலங்களிலும் எப்படி பயன்படுத்தினாலும் அவை சத்து குறையாது என்பதால் இதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

நெல்லிக்காயை கொட்டை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

இதை ஆறுமாதங்கள் வரை வைத்திருக்கலாம். நெல்லிப்பொடியை கூந்தலுக்கு ஹேர் டை போடும் போதெல்லாம் பயன்படுத்தலாம்.

எப்போதெல்லாம் ஹேர்டை வீட்டில் தயாரிக்கிறீர்களோ அப்போதெல்லாம் இதையும் இரண்டு முதல் 3 டீஸ்பூன் வரை சேர்க்கலாம். நெல்லிப்பொடியை பயன்படுத்தினால் இளநரை வராமல் தடுக்கலாம். நீண்ட நாள் வரை முடி கருமையாக இருக்கும்.

​நெல்லி எண்ணெய்:

கூந்தல் வளர்ச்சிக்கும் அடர்த்திக்கும் நெல்லி எண்ணெய் உதவும். தினமும் இதை பயன்படுத்தவில்லை என்றாலும் வாரத்துக்கு மூன்று நாட்கள் வரை இதை கூந்தலுக்கு தடவி கொள்ளலாம். நெல்லிக்காயை துண்டுகளாக நறுக்கி சுத்தமான தேங்காயெண்ணெயில் போட்டு வெயிலில் வைக்கவும்.

தொடர்ந்து ஒருவாரம் வரை வைத்து இருந்தால் நெல்லியின் சாறு முழுவதும் எண்ணெயில் இறங்கும். கூந்தலின் ஸ்கால்ப் பகுதியில் மசாஜ் செய்து வந்தாலே போதும்.

Also Read: Health Fish: இதய நோய்களின் அபாயத்தைத் தடுக்க மீன் சாப்பிடலாமா?..

தினமும் காலையில் எழுந்ததும் இரண்டு துளி எண்ணெயை விரலில் தோய்த்து கூந்தலில் தடவி மசாஜ் செய்துவந்தால் போதும். ​நெல்லி எண்ணெய் பயன்படுத்தினால் முடி உதிர்வு இருக்காது. அடர்த்தியாக வளரும். முடி கருமையாக பொலிவாக இருக்கும்.

நெல்லி பேஸ்ட்:

எளிமையான செய்முறை இது. நெல்லிக்கனியை இரும்பு வாணலியில் வறுத்து அது மூழ்கும் அளவு நீர் விட்டு ஊறவைத்து மறுநாள் காலையில் பேஸ்ட் ஆக்கவும்.

அந்த பேஸ்ட்டை மிக்ஸியில் அரைத்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்து வரவும். மாதம் இரண்டு அல்லது ஒரு முறை தேய்த்து ஊறவைத்து, குளித்து வந்தால் போதும். முடிக்கு வேண்டிய போஷாக்கு எல்லா காலங்களிலும் கிடைக்கும். இந்த மூன்றையும் சரியாக இடைவிடாமல் செய்துவந்தாலே கூந்தல் ஆரோக்கியம் நிச்சயமாக இருக்கும்.