Biggest Star In The Universe: நம் பிரபஞ்சத்தில் குறைந்து வரும் நட்சத்திரங்கள்..! ஏன் தெரியுமா..?
Biggest Star In The Universe: நம் பிரபஞ்சத்தில் குறைந்து வரும் நட்சத்திரங்கள்..! ஏன் தெரியுமா..?
ஆயிரக்கணக்கான வருடங்களாக, இரவில் நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தைக் கண்டு நீங்கள் ரசித்திருப்பீர்கள்.

Biggest Star In The Universe :
சூரியனை விடவும் பல கோடி மைல்களுக்கு அப்பால் நட்சத்திரங்கள் இருக்கின்றன. அதனால் நம் கண்களுக்கு அவை குட்டியாகத் தெரிகின்றன.
சூரியனைப் போல் 20 முதல் 100 மடங்கு பெரிய விண்மீன்கள் வானில் உள்ளன. சூரியன்தான் நமக்கு அருகில் உள்ள நட்சத்திரம்.
இன்றைய பிரபஞ்சத்துடன் ஒப்பிடும்போது ஆரம்பகால பிரபஞ்சம் அடர்த்தியான நட்சத்திர உருவாக்கம் உடையதாக இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. அவ்வாறு இந்த மாற்றத்தின் பின்னணியில் என்ன நடந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்க புனே மற்றும் பெங்களூரு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 8 பில்லியன் ஆண்டுகள் பழமையான சகாப்தத்திலிருந்து, ஹைட்ரஜன் வாயுவின் தெளிவற்ற பதிவுகளை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும், இந்தியாவின் மிகப்பெரிய வானொலி தொலைநோக்கியான ஜெயண்ட் மெட்ரூவ் ரேடியோ தொலைநோக்கியை (ஜிஎம்ஆர்டி) இந்த கண்டுபிடிப்புக்கு பயன்படுத்தியதாக டெக்கான் ஹெரால்டு தெரிவித்துள்ளது.
சுமார், 7,653 விண்மீன் திரள்களைப் படித்த வானியல் அறிஞர்கள் அவற்றில் உள்ள ஹைட்ரஜன், பிக் பேங்கின் பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அவற்றில் காணப்படும் ஹைட்ரஜனை விட 2.5 மடங்கு அதிகமாக இருந்ததை கண்டறிந்தனர்.
புகழ்பெற்ற அறிவியல் இதழான நேச்சரில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி குறித்த அறிக்கையில், முதன்மை ஆசிரியர் ஆதித்யா சவுத்ரி தெரிவித்ததாவது , “ஆரம்பகால விண்மீன் திரள்களில் நட்சத்திர உருவாக்கம் அதிக தீவிரத்தில் நிகழ்ந்தது என்ற உண்மையைப் பொறுத்தவரை, அணு வாயுக்கள் ஒன்று முதல் இரண்டு பில்லியன் ஆண்டுகளில் நுகரப்பட்டதுதான் காரணம்” என்று கூறினார்.
அணு ஹைட்ரஜன் தீர்ந்து போனதன் மூலம் நட்சத்திர உருவாக்கம் குறைவதை விளக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
இரவு வானத்தில் காணப்பட்ட கிட்டத்தட்ட பாதி நட்சத்திரங்கள் அந்தக் காலத்திலிருந்து வந்தவை. அதாவது எட்டு முதல் பத்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு என்று பொருள்.
இதேபோல, இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட புனேவின் வானொலி வானியற்பியல் தேசிய மையத்தின் (என்.சி.ஆர்.ஏ) விஞ்ஞானியான Astronomer ஜெயராம் செங்களூர் கூறுகையில், விண்மீன் திரள்களின் பரிணாம வளர்ச்சியின் பின்னணியில் நட்சத்திரங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
ஆனால் அணு வாயுக்களைக் கண்டுபிடிப்பது கடினம் என்பதால் அவை பற்றிய எந்த தகவல்களும் தெரியவில்லை என என்.சி.ஆர்.ஏ-வின் மற்றொரு குழு உறுப்பினர் நிசிம் கனேகர், தெரிவித்தார்.