Food Labels : Nutrition facts label நீங்கள் வாங்கும் உணவு லேபிளிங் பற்றி உங்களுக்குத் தெரியாதது..!
Food Labels : Nutrition facts label நீங்கள் வாங்கும் உணவு லேபிளிங் பற்றி உங்களுக்குத் தெரியாதது..!
எது சிறந்தது: ஒரு “இயற்கை” தயாரிப்பு அல்லது “கரிம” ஒன்று?
“கூண்டு இல்லாத, ” “மேய்ச்சல்” அல்லது “சைவ உணவு” கோழிகளிலிருந்து வரும் முட்டைகள்?
“புல் ஊட்டப்பட்ட” அல்லது “புல் முடிக்கப்பட்ட” மாட்டிறைச்சி?
“குறைந்த கொழுப்பு” அல்லது “குறைக்கப்பட்ட கொழுப்பு” தின்பண்டங்கள்?
உங்கள் வாடிக்கையாளர்கள் எப்போதாவது உங்களிடம் இந்த வகையான கேள்விகளைக் கேட்டிருக்கிறார்களா?

Food Labels:
Nutrition facts label உணவு தயாரிப்பு லேபிள்கள் எதைக் குறிக்கின்றன என்பதில் நிறைய குழப்பங்கள் உள்ளன.
“பசையம் இல்லாத, கொழுப்பு இல்லாத, அனைத்து இயற்கை” மற்றும் “GMO இல்லாத” போன்ற சொற்கள் சுகாதார நன்மைகளைக் குறிக்கின்றன.
இருப்பினும் அவை சில நேரங்களில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள், டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் ரசாயன சேர்க்கைகள் போன்ற விரும்பத்தகாத பொருட்கள் நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஊக்குவிக்கின்றன.
உணவுப் பொருட்களில் கலக்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து குறித்த விவரங்களை கவனிக்காமல் தான் பெரும்பாலான மக்கள் அவசர அவசரமாக தங்கள் ஷாப்பிங்கை செய்கின்றனர்.
மக்களை கவர்ந்திழுக்கும் வகையிலான பேக்கிங், புகைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் லேபில்களை பயன்படுத்தி மார்க்கெட்டில் ஏராளமான உணவு உற்பத்தியாளர்கள், மக்கள் தங்கள் தயாரிப்புகளை வாங்க வைக்க போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் பெரும்பாலான மக்கள் பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் கலக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்து குறித்த விவரங்களை கவனிக்காமல் தான் அவசர அவசரமாக தங்கள் ஷாப்பிங்கை செய்கின்றனர்.
இது ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன. இனிமேல் லேபிள்களை கவனித்து, பொருட்களை வாங்குவது உடலுக்கு நல்லது.
கொழுப்பு இல்லாதது மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாதது :
பெரும்பாலும் மக்கள் தேர்வு செய்யும் உணவுப்பொருட்களில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாதது என்று லேபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
எனினும் குறிப்பிட்ட உணவில் இருக்கும் கொழுப்புகளை நீக்க உற்பத்தியாளர்கள் இதே போன்ற பிற விருப்பங்களை தேர்ந்தெடுத்து தயாரிப்பார்கள்.
இது உங்கள் உடலுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்த கூடும்.
கொழுப்புக்கு மாற்றான சிலவற்றை செயற்கையாக உருவாக்க முடியும், இது கொழுப்பை அவற்றின் மீது சிறந்ததாக ஆக்குகிறது.
நோய்யெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் :
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்ற விளம்பரங்களுடன் நிறைய பிராண்டுகள் பேரிடர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளை விற்பனைக்கு சந்தைப்படுத்தியுள்ளன.
இத்தகைய தயாரிப்புகளை வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பொதுவாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அரிதாகவே அதிகரிக்கும்.
எனவே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இயற்கை உணவு பொருட்கள் பயன்படுத்துவதே நல்லது.
Nutrition facts label:
No Sugar Added:
No Sugar Added என்ற லேபிளைக் கொண்ட தயாரிப்புகளை வாங்கும் போதெல்லாம், எப்போதும் ingredients பட்டியலை ஒரு முறை check செய்து வாங்குங்கள்.
இந்த தயாரிப்புகளில் பொதுவாக stevia and erythritol போன்ற வேறு சில வடிவங்களில் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும்.
Also Read: Horror movies அதிகம் பார்ப்பவரா நீங்கள்..?
Synthetic Growth Hormones:
பெரும்பாலான நாடுகளில் Synthetic Growth Hormones rBGH மற்றும் rBST ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன.
மாடுகளுக்கு மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட இவற்றை செலுத்துவதால் அவை அதிக பால் உற்பத்தி தருகிறது.
இப்படிப்பட்ட செயற்கை ஹார்மோன்கள் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் இவை பல நாடுகளில் சட்டவிரோதமாக கருதப்படுகின்றன.
Artificial Colours:
எந்தவொரு செயற்கை நிறங்களும் நம் ஆரோக்கியத்திற்கு சிறந்தது இல்லை என்பதால் முடிந்தவரை அத்தகைய தயாரிப்புகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
Weight Loss Teas :
குறைவான நாட்களில் அதிக எடையை குறைக்கும் முயற்சிக்காக பலரும் இந்த லேபிள்களை உடைய டீக்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இந்த வகை தேநீர் சில நேரங்களில் வயிற்றுப் போக்கு ஏற்பட காரணமாக அமையும். வேறுசில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும்.
எனவே உடல் எடையை குறைக்க பதப்படுத்தப்பட்ட டீக்களுக்கு பதிலாக இயற்கை பானங்களை பருகுவது சிறந்த முடிவை தரும்.