Spices In India: நோய்களை  விரட்டும் ‘மேஜிக்’ மசாலாக்கள்..!

Spices in India: நோய்களை  விரட்டும் ‘மேஜிக்’ மசாலாக்கள்..!

மசாலாக்கள் உணவின் சுவையை அதிகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

இந்தியச் சமையலில் மசாலாக்கள் பயன்படுத்தவில்லை என்றால் அதன் சுவை முமுமை அடையாது.

மேலும் அந்த உணவு ருசி குறைந்த உணவாகவே இருக்கும். ஒரு விதத்தில் சுவையான உணவுக்கு மறுசொல் மசாலா என்று தான் கூறவேண்டும்.

Spices in India

Spices In India:

இது சிறுநீரகம் முதல் கல்லீரல் தொடர்பான நோய்கள் மட்டுமல்லாமல், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

இந்திய சமையலறையில் பயன்படுத்தப்படும் சில மசாலா உணவுகள் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் நமக்குத் தருகிறது.

இந்திய சமையலறையில் காணப்படும் குறிப்பிட்ட 5 மசாலாப் பொருட்கள் அதிக மருத்துவ பயன்களை கொடுக்கக் கூடியவை. அவற்றை பற்றி இங்கு விரிவாக காண்போம் வாருங்கள்.

Benefits of Turmeric:

மஞ்சள்:

மஞ்சளில் குர்குமின் என்ற கலவை காணப்படுகிறது. குர்குமின் என்பது மஞ்சளில் காணப்படும் முதன்மையான பொருள் ஆகும்

மஞ்சளின் நிறத்திற்கு இதுவே காரணம். இது புற்று நோய் போன்ற  பல நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. மேலும், கல்லீரலை பராமரிப்பதில் மஞ்சள் முக்கிய பங்கு வகிக்கிறது. இது கல்லீரலில் ஏற்படும்  பாதிப்பை தடுக்கிறது.

இலவங்கப்பட்டை:

இலவங்கப்பட்டை  ஆரோக்கிய மசாலாப் பொருட்களில் ஒன்றாகும்.

இலவங்கப்பட்டையில் உள்ள பல வேதிப் பொருட்கள்  ஃப்ரீ ரேடிக்கல்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஃப்ரீ ரேடிக்கல் என்பது உயிரணுக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆற்றலைக் கொண்ட எதிர்வினை இரசாயனங்களாகும் .

இலவங்கப்பட்டை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது

ஓமம்:

ஓமம் சிறுநீரகத்திற்கு மிகவும் நல்லது அதுமட்டுமில்லாமல் இது ஒரு இயற்கை டையூரிடிக் ஆக செயல்படுகிறது. டையூரிடிக்ஸ் என்பது உணவுகள் மற்றும் பானங்கள் ஆகும்.

இது உடலில் இருந்து அதிகப்படியான திரவங்களை வெளியேற்றி உடலை ஊக்குவிக்கிறது மற்றும் எலக்ட்ரோலைட் அளவையும் பராமரிக்கிறது.

ஏலக்காய்:

ஏலக்காய் உணவிற்கு  சுவையையும் நறுமணத்தை அளிக்கிறது. மேலும், உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் நோயாளிகள் ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில்  இது உயர்ந்த ரத்த அழுத்தத்தை  குறைப்பதில் மிகவும் திறம்பட செயல்படுகிறது. வெந்தயம்: இந்தியாவில் பல்வேறு உணவுகளை தயாரிக்க வெந்தயத்தை பயன்படுத்துகின்றனர்.

இது சுவையில் கசப்பானது ஆனால் அதன் சுவை உணவில் மிக சுவையாக இருக்கும். வெந்தய விதைகள் மற்றும் வெந்தய இலைகள் இரண்டுமே  நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

History of Spices:

மசாலாக்களின் வரலாறு :

இன்றைய காலகாட்டத்தில் கருப்பு மிளகு, இலவங்கப்பட்டை, சீரகம், இஞ்சி, மஞ்சள், கிராம்பு, பெருங்காயம் ஆகியவை உணவுகளை ருசியாக்கப் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் முதன் முதலில், இந்திய மசாலாக்களின் பெருமையை மக்களுக்கு தெரிவித்தவர்கள் முகலாய மன்னர்கள். மசாலாக்களின் சுவை இல்லாமல் முகலாய மன்னர்கள் ஒருபோதும்  உணவருந்த மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

 பாபர், அக்பர், ஹூமாயூன், ஜஹாங்கீர், ஷாஜகான் மற்றும் அவுரங்கசிப் அனைவரும் மசாலாக்களை முறையாக பயன்படுத்தினார்கள்.

முகலாய காலத்தில், மசாலாக்களை தங்கள் உணவுகளுக்கு மட்டும் பயன்படுத்தவில்லை. தங்கள் நாட்டு வர்த்தகம் மற்றும் அயல்நாட்டு வர்த்தகத்திற்கும் பயன்படுத்தப்பட்டன.

Also Read: Nattu Sakkarai Benefits: இதய நோய்களில் இருந்து காக்கும் நாட்டுச் சர்க்கரை..!

இத்தகைய மசாலாக்களை நாம் தொடர்ந்து உட்கொள்வதால் நமது ஆரோக்கியத்தை மென்மேலும் பராமரிக்க முடியும்.