How to Do WhatsApp Payment: மெசேஜ் மட்டுமல்ல.. இனி பணமும் அனுப்பலாம்..! WhatsApp Payment ஸ்டெப்ஸ்..!
How to Do WhatsApp Payment: மெசேஜ் மட்டுமல்ல.. இனி பணமும் அனுப்பலாம்..! WhatsApp Payment ஸ்டெப்ஸ்..!
இந்தியாவில் WhatsApp பேமென்ட்டுகள் அதிக எண்ணிக்கையிலான பயனர்களுக்குக் கிடைக்கப்போகிறது.
ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான இந்த WhatsApp மெசேஜிங் செயலி ஒரு வருடத்திற்கும் மேலாக நாட்டில் அதன் கட்டண சேவையைச் சோதித்து வருகிறது.

How to Do WhatsApp Payment:
இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டணம் செலுத்தும் அம்சம் அனைவருக்கும் கிடைக்கும் என்றும், இந்த சேவை அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் என்றும் தேசிய கட்டணக் கழகம் (NPCI) வாட்ஸ்அப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் உள்ள நிலையில், இந்த கட்டண சேவை 20 மில்லியன் WhatsApp பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதுள்ள மூன்றாம் தரப்பு UPI செயலிகளின் விதிமுறைகளுக்கு இணங்க, இரண்டு ஆண்டுகளுக்கு இது கிடைக்கும்.
பயன்பாட்டில் உங்களுக்கு WhatsApp Payment விருப்பம் இருந்தால், உங்கள் கணக்கை எவ்வாறு அமைக்கலாம், பணத்தை அனுப்பலாம் அல்லது பெறலாம் என்பதை இனி பார்க்கலாம்.
உங்கள் செயலி சமீபத்திய ஆண்ட்ராய்டு மற்றும் iOS பதிப்பிற்கு புதுப்பிப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
WhatsApp Payment கணக்கை எவ்வாறு அமைப்பது:
பேமென்ட் ஆப்ஷனை க்ளிக் செய்து கட்டண முறையைச் சேர்க்கவும். இங்கு வங்கி பெயர்களின் பட்டியலைப் பெறுவீர்கள்.
வங்கியின் பெயரைத் தேர்ந்தெடுத்த பிறகு, வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள உங்களுடைய எண் சரிபார்க்கப்படும்.
இதற்காக, நீங்கள் SMS வழியாகச் சரிபார்ப்பை க்ளிக் செய்யவேண்டும். இந்த WhatsApp எண், உங்கள் வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட எண்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Step 4: சரிபார்ப்பு செயல்முறை முடிந்ததும், பேமென்ட் அமைப்பை முடிக்க வேண்டும். பிற செயலிகளில் பரிவர்த்தனைகளைச் செய்வதற்கு UPI பின் அமைப்பதைப் போன்று இங்கேயும் அமைக்கவேண்டும்.
இதற்குப் பிறகு, நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கியை பேமென்ட் பக்கத்தில் காண முடியும்.
WhatsApp pay பணத்தை அனுப்புவது அல்லது பெறுவது எப்படி?
வாட்ஸ்அப்பில் ஓர் நபரின் சாட்டைத் திறந்து இணைப்பு ஐகானுக்குச் செல்லவும்.
பேமென்ட்டை க்ளிக் செய்து, நீங்கள் தொகையை அனுப்ப விரும்பும் தனிநபரைச் சேர்க்கவும்.
WhatsApp கட்டணம் செலுத்தும் செயல்முறையை முடிக்க, உங்கள் UPI பின்னை உள்ளிட வேண்டும். பரிவர்த்தனை முடிந்ததும், உங்களுக்கு உறுதிப்படுத்தல் SMS கிடைக்கும்.